மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட பழங்களை நீங்கள் சாப்பிடுகிறீர்களா?

health benefits of fruits in tamil நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மட்டுமின்றி தினமும் ஏதாவது ஒரு பழவகையினை சாப்பிடுவது நம் உடல் ஆரோக்யத்துக்கு கூடுதல் வலு சேர்க்கும் ...இனியாவது சாப்பிடுங்க...படிங்க...

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட  பழங்களை நீங்கள் சாப்பிடுகிறீர்களா?
X

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த பழ வகைகள் (கோப்பு படம்)

health benefits of fruits in tamil


health benefits of fruits in tamil

'' சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்'' அந்த வகையில் நம் உடல் ஆரோக்யமானது நல்ல நிலையில் இருந்தால்தான் நாம் அன்றாடம் நம் செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்யம், மனநிலை, ஆகியவை சரியான முறையில் இருந்தால்தான் நம்முடைய அன்றாட பணிகளையும் நாம் நல்லமுறையில் முடித்துவிட முடியும். இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் வேலை கெட்டுவிடும் அவ்வளவுதான். அப்போ ...நாம் நம் உடல் ஆரோக்யத்திற்கு தேவையான அக்கறையைக் கொள்ள வேண்டும். அப்படி இருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மனிதர்களில் பலர் உடலில் பிரச்னையானது அதிகம் ஆகும்போதுதான் ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுக்கின்றனர். இது எல்லா நேரத்திலும்நமக்கு கை கொடுக்காது. நோயின் தன்மை பொறுத்து மாறும். அதுவும் கேன்சர் போன்ற வீரிய நோய்கள் என்றால் நோய் முற்றி விட்டால் டாக்டர்களால் கூட ஒன்றும் செய்ய முடியாது. எனவே வழக்கமாக நம் உடலின் நடை முறையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக டாக்டர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

உடல் ஆரோக்யத்தைப் பாதுகாக்க நாம் கவனம் செலுத்த வேண்டியது நம் உணவுதான். இதுமட்டும் அல்லாமல் நாம் அன்றாடம் ஏதாவது ஒரு பழவகையினைச் சாப்பிட வேண்டும். பழவகைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மருத்துவகுணங்களும், சத்துகளும் அடங்கியுள்ளன.

health benefits of fruits in tamil


health benefits of fruits in tamil

தாவரங்கள், பூமியிலிருந்து உறிஞ்சும் சத்துகளை வேர்,இலை, தண்டு, பூ ,காய் , கனி இவற்றில் சேமித்து வைக்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க மூலகங்கள் உணவு தானியங்கள், மற்றும் பழங்களில் காணப்படுகின்றன. சூரியன் தன் கதிர்வீச்சுகளின் வெப்பத்தைக்கொண்டு காய்களை கனியச் செய்கிறது. இவ்வாறு கனியச் செய்யப்படும் பழங்கள் மனிதனின் முதல்தர உணவாகவும்,பூரணமான சத்துக்களைக் கொண்டுள்ளதாகவும் உள்ளன.ஒவ்வொரு பழமும் சுவையிலும், வடிவத்திலும், தன்மை மாறுபட்டு மனித உடலுக்கு மிகுந்த நன்மையை அளிக்கின்றன.

ஊதா நிறமுடைய பழங்கள் மனித உடல் அழியாமல் பாதுகாக்கும் அற்புதமான சக்தியைப் பெற்றுள்ளன. நாவற்பழம், கருநெல்லி, மற்றும் ஊதாநிறமுள்ள பல பழங்கள் உடலை அழியாமல் காக்கும் காயகல்பம் என்னும் சிறந்த தன்மையினைப் பெற்றுள்ளன.பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் குடலுறிஞ்சுகளுக்கு இதமாகவும் ,குடலுறிஞ்சிகளால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியதாகவும், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், இவற்றிலிருந்து உடனுக்குடன் முற்றிலும் நகர்ந்து உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கக்கூடியதாகவும் , நார்ப்பொருள் கொண்டதாகவும், குடலின் புளிப்புத்தன்மையை அகற்றவும் பயன்படுகின்றன.

health benefits of fruits in tamil


health benefits of fruits in tamil

வாழைப்பழம்

உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் சத்துக்களை அளிக்கும். எளிதில் ஜீரணமாகும் . நாம் பழங்களில் அதிகமாக உபயோகிப்பது வாழைப்பழம் மட்டுமே.

மாம்பழம், பலாப்பழம்

இவை கோடைக்காலத்தில் கிடைக்கும் மிகுந்த இனிப்பு சுவையும்,சத்துகளும் கொண்ட பழங்களாகும். இவை உடலுக்கு அதிக அளவு சூட்டைத் தருவதால் அளவோடு உபயோகிக்க வேண்டும். மாம்பழம் சாப்பிட்டால் பசும்பாலும், பலாப்பழம், சாப்பிட்டால் அதனுடன் தேனும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

health benefits of fruits in tamil


health benefits of fruits in tamil

பப்பாளி

ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் அனைவரும் உபயோகித்து பயன் பெறலாம். பப்பாளியில் மிகுதியாக சத்துகள் இருந்தாலும் இதுவும் மிகுந்த உஷ்ணம் உடையது. பப்பாளியைச் சாப்பிடும் பொழுது பால் சேர்த்துக்கொள்ளவும்.

மாதுளை

குடலுறிஞ்சிகளின் தன்மையைப் பாதுகாக்கவும், உடலுக்கு நன்மை செய்யவும், குடல் கிருமிகளை வெளியேற்றவும்,கூடிய மாதுளை இதயத்திற்கு உறுதியைத் தரும். ரத்தத்தையும் ரத்தத்தில் கலந்துள்ள கிருமிகளையும் முறைப்படுத்தி வெளியேற்றும். மாதுளையில் இனிப்பு மாதுளை,புளிப்பு மாதுளை என்று இருவகை உண்டு. இரண்டு மாதுளையுமே உடலுக்கு நல்ல பயனைத்தரும். சர்க்கரை நோயாளர்களும் அளவுடன் சாப்பிடலாம்.

அன்னாசி

அன்னதாழை பழம் எனப்படும் அன்னாசிப்பழம் இரத்தத்தை விருத்தி செய்யவும், சுத்தி செய்யவும், இரைப்பையையும், குடலையும் சுத்தி செய்யவும், கூடியது.அன்னாசி பழச்சாறு உடனுக்குடன் ரத்தத்தில் கலந்து சக்தி அளிக்கும்.

health benefits of fruits in tamil


health benefits of fruits in tamil

திராட்சை

திராட்சையில் கருப்பு திராட்சை ,பன்னீர் திராட்சை, கொட்டை இல்லாத திராட்சை, ஹைதராபாத்திராட்சை, என்று பல வகைகள் உண்டு. இவற்றில் பன்னீர் திராட்சை மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது. திராட்சைப்பழம் ரத்த விருத்திக்கும் , அறிவு விருத்திக்கும் , உடலுக்கு உடனுக்குடன் சக்தியளிக்கவும் கூடியது.

ஆப்பிள்

ஆப்பிளை நன்கு கடித்து மெல்லும்போது ,ஆப்பிள் குடலுறிஞ்சிகளை பாதுகாப்பதுடன், உண்ட உணவை செரிக்கச் செய்யவும், வாய், பல் உணவுப் பாதையை சுத்தம் செய்யவும், கூடியது. ஆப்பிள் பழம் மனிதனுக்கு நோய்வராமல் தடுப்பதில் மிகவும் உதவி செய்கிறது.

கொய்யா

கொய்யாப்பழம் விட்டமின் சி சத்து கொண்டது. வாழைப்பழம், கொய்யாப்பழம் இவை இரண்டையும் சாப்பிட மலச்சிக்கலையும், வயிற்றிலுள்ள துர்நாற்றத்தையும் நீக்கும்.

சப்போட்டா

இப்பழம் வயிற்றுப்போக்கு ,வயிற்று கடுப்பு இவற்றை நீக்கும். உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் சக்தியை அளிக்கும்.

health benefits of fruits in tamil

ஆரஞ்சு, சாத்துக்குடி

ஆரஞ்சு, சாத்துக்குடி இவற்றைச் சாறு பிழிந்து தேன் அல்லது சர்க்கரையுடன் கலந்துகொடுக்கலாம். உடல் பலவீனம், சத்துக்குறைவு மற்றும் நோய் வந்த பின் உடல் நிலை தேற இப்பழங்கள் மிகுதியாகப் பயன்படும். (ஆரஞ்சு பழத்தை மட்டும் தனித்து தொடர்ந்து சாப்பிட்டுவர யானைக்கால் நோய் நீங்கும்.)

பேரிக்காய்

குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும். பேரிக்காய், வால்பேரி, இவை சிறுநீரக அடைப்பு மற்றும் சிறுநீரக கற்களை அகற்றும் தன்மை வாய்ந்தவை. பேரிக்காயைத் தனித்து சாப்பிட சிறுநீரக கற்கள், நீரடைப்பு இவை நீங்கும்.

மங்குஸ்தான் பழம்

உயர்ந்த புரத சத்தும் இன்றியமையாத சத்துக்களும் கொண்டது. சர்க்கரை நோயாளர்களும் இப்பழத்தைச் சாப்பிடலாம்.

பிளம்ஸ்

ஊட்டி ஆப்பிள் என்று அழைக்கப்படும் பிளம்ஸ் புளிப்பு தன்மையும், இனிப்பும் கலந்தது. இந்தப்பழத்தினை சர்க்கரை நோயாளர்கள் சாப்பிடலாம் (அளவோடு சாப்பிட வேண்டும்)

சீத்தாப்பழம்

இது நல்ல சத்துக்களைக் கொண்டது. சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதயத்திற்கு மிகுந்த நன்மையளிக்கும்.

health benefits of fruits in tamil


health benefits of fruits in tamil

தக்காளிப்பழம்

பச்சையாகவோ அல்லது ஜூஸ் தயாரித்தோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். தக்காளிப்பழம் நல்லசத்துக்களைக் கொண்டது. பழங்களில் செவ்வாழை குழந்தை இல்லாத நீக்கிடவும், பேயன் வாழை குடலில் உள்ள கொடிய வைரஸ் தொற்றுகள் மற்றும் கிருமிகளை அகற்றிடவும், நேந்திர வாழை கண் கோளாறுகளை நீக்கிடவும், ரஸ்தாளி மிகுதியான ஊட்டத்தினை அளிக்கவும் கூடியவை.

எலுமிச்சை

ரத்த சுத்திக்கும், குடலிலுள்ள அழுகல் தன்மையை நீக்கவும், வாய்துர்நாற்றம், வயிற்றுப்போக்கு இவற்றை நீக்கவும், உடலுக்கு குளிர்ச்சியளிக்கவும், கந்தகம், மக்னீசியம், போன்ற மிக இன்றியமையாத சத்துக்களை அளிக்கவும் கூடியது. எலுமிச்சை பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட ரத்த விருத்தியை அளித்து துர்நீர்உடல் பருமன் இவற்றை நீக்கும்.

முலாம்பழம்

குடலில் உள்ள கொடிய விஷங்களை நீக்கும் மற்றும் குடற்கோளாறுகளை அகற்றும்.

health benefits of fruits in tamil


health benefits of fruits in tamil

நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்

தர்ப்பூசணி, விலாம்பழம், வெண்பூசணி, வெள்ளரிப்பழம் இவையெல்லாம் உடலுக்குத் தேவையான நீர் சத்தினை அளிக்கக்கூடியவை. எலக்ரோலைட்,டிஃபீசியன்சியை இப்பழச்சாறுகள் உடனுக்குடன் அகற்றும்.

பெரும்பாலான பழங்கள் நல்ல சுவையையும், மிகுந்த சத்துக்களையும் கொண்டவை. வளரும் பருவத்தினர், முதியோர்கள், பெண்கள் உடலுழைப்பு இல்லாதவர்கள், குழந்தைகள் இவர்கள் எல்லாம் இயற்கையாகக் கனிந்த பழங்களை மிகுதியாக சாப்பிட வேண்டும். பழங்களின் மருத்துவ குணங்களை அளவீடு செய்யவே முடியாது. மேலைநாடுகளில் ஸ்டாபெர்ரி, சீமை அத்தி, ஆப்பிரிகாட், முதலிய பழங்களை உண்ணுகின்றனர். பழங்களை உண்பவர்களுக்கு சத்துக்குறைவு ஏற்படாது. மனிதனின் இன்றைய உணவில் பெரும்பங்கு வகிப்பவை பழங்களே.

Updated On: 29 Jan 2023 10:43 AM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
 2. அவினாசி
  அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
 3. காஞ்சிபுரம்
  சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
 5. தமிழ்நாடு
  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
 6. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 7. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 8. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 9. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 10. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!