cinnamon powder in tamil-பெண்களின் கருப்பை நார்த்திசு கட்டிகளை குணமாக்க இலவங்கப்பட்டை..! தெரிஞ்சுக்கங்க..!

cinnamon powder in tamil-இலவங்கப்பட்டை வாசனை திரவியங்களில் ஒன்றாக நாம அறிந்த ஒரு பொருள். இறைச்சி சமைக்கும்போது இலவங்கம் மசாலா பொருட்களுடன் சேர்க்கப்படும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
cinnamon powder in tamil-பெண்களின் கருப்பை நார்த்திசு கட்டிகளை குணமாக்க இலவங்கப்பட்டை..! தெரிஞ்சுக்கங்க..!
X

cinnamon powder in tamil-இலவங்கம் நன்மைகள்.(கோப்பு படம்)

cinnamon powder in tamil-தற்போது அதிக அளவில் மருத்துவ உலகில் பேசப்பட்டு வரும் மருத்துவ குறிப்புகளில் இலவங்க பட்டை தூளும்(cinnamon Powder) முக்கிய பங்கு வகிக்கின்றது. இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக, பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் கொடுப்பது வழக்கம். இதன் மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாகவும் ஆதிகாலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இலவங்கப் பட்டை, மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்; மாதவிடாயை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்; வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும். இரத்தம் உறைதலைத் தடுக்கும் மருந்து பட்டைதான். இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் இது இன்சுலினுக்கு துணையாகவும், தூண்டுதலாகவும் இருந்து செயல் புரிகிறது. இலவங்கத்தில் ஒரு நல்ல உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளன.

ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப்படுத்தும். அமெரிக்கா, மேரிலாந்தில் 2005ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் பட்டை, இரத்தப் புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது எனவும், இரத்த கொலஸ்ட்ரால், சர்க்கரை குறை[பாட்டைக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி தேனில் 1/2 தேக்கரண்டி பட்டை பொடியைக் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை நன்கு குணப்படுத்துகிறது.

cinnamon powder in tamil

இலவங்க பட்டை(Cinnamon Powder) சாப்பிடுவதால் உடல் எடை குறைவது என்பதையும் தாண்டி உடலுக்கு பல்வேறு விதத்தில் உதவுகின்றது. எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறி மசாலாவில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

ஆன்டிஆக்சிடன்டுகள்

இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகளின் ஆக்சிஜனேற்ற பண்புகள் உடலுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்க உதவுகின்றன. இலவங்கப்பட்டையில் உள்ள பாலிஃபீனால்களும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்பில் பூண்டை விட மிகுந்த செயல்திறன் கொண்டதாகத் திகழ்கிறது.


உடல் எடை குறைய

அதிக கொழுப்பு உள்ள உணவுகளால் நேரும் தீங்கைத் தணிக்க இலவங்கப்பட்டை உதவலாம். உடல் எடை குறைவதற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது என்பதை நிரூபிக்கும் ஆய்வுகள் மிகச் சிலவே என்றாலும், உடலின் குளுக்கோஸ் அளவை மாற்றுவதால் இது உடல் எடை குறைவதற்கு உதவதாக கூறப்படுகிறது. இலவங்கப்பட்டையில் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கும் உடலில் இருந்து நச்சுப்பொருள்களை வெளியேற்றவும் உதவுகிறது.

நீரிழிவு குறைபாட்டுக்கு

டைப் 2 வகை நீரிழிவு குறைபாட்டை சமாளிப்பதில் இலவங்கப்பட்டை உதவுவதாக சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இது இரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் எதிர்ப்புப் பண்புகளைக் குறைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

cinnamon powder in tamil

பூஞ்சை எதிர்ப்பு

இலவங்க பட்டை நுரையீரலில் இருந்து சளியை அகற்றுவதால், நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் மற்றும் அடைப்பை சரிசெய்ய உதவுகிறது. மற்ற சிகிச்சைகளுடன் சேர்த்து இலவங்கப்பட்டையையும் பயன்படுத்தும் போது, ​​அது பருவகால இருமல், ஜலதோஷம் முதல் பெரிய பிரச்னைகள் வரை பலவற்றில் நிவாரணம் அளிக்க உதவுகிறது.


நீர்க்கட்டிகள்

சினைப்பை நீர்க்கட்டிகள் அறிகுறிகள் உள்ள பெண்களுக்கு உடல் எடை கூடுவதற்குக் காரணமாக இருக்கும் இன்சுலின் எதிர்ப்புப் பண்பைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை உதவுகிறது. அதுமட்டுமின்றி, எண்டோமெட்ரியாசிஸ் மற்றும் கருப்பை நார்த்திசுக் கட்டிகள் உள்ளவர்களுக்கு அளவுக்கு அதிகமாக ஏற்படும் மாதவிடாய் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

மூளை செயல்பாடு

இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் உள்ளதால் அவை அல்சீமர் நோய், பர்கின்சன் நோய் போன்ற நரம்பியல் நோய்கள் வருவதைத் தடுக்கவும் உதவுகிறது. நரம்புகளைப் பாதுகாக்கும் புரதங்களைத் தூண்டி செயல்படுத்துவதன் மூலம் இது மூளை செல்கள் சேதமடைவதைத் தடுக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.


பற்கள் பாதுகாப்பு

பெப்பர்மின்ட் போலவே, இலவங்கப்பட்டையும் வாயிலிருக்கும் பாக்டீரியாக்களை அகற்றுகிறது. இதனால் வேதிப்பொருள்கள் எதுவும் இல்லாமலே சுவாசப் புத்துணர்வைப் பெற முடிகிறது. வாயில் இருக்கும் பாக்டீரியாக்களால் பற்சிதைவு, பற்சொத்தை அல்லது வாய் நோய்த்தொற்றும் ஏற்படலாம். பாக்டீரிய எதிர்ப்புப் பண்பு கொண்ட மவுத்வாஷாகவும் இலவங்கப்பட்டை பயன்படுகிறது. இலவங்கப்பட்டை பற்பொடி மற்றும் பற்பசைகளில் நெடுங்காலமாக ஒரு முக்கியப் உட் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருவதற்குக் காரணம் இதுவே ஆகும்.

cinnamon powder in tamil

எப்படி பயன்படுத்தலாம்?

இலவங்க பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும்.

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு இலவங்கப் பட்டையை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து. சற்று வெது வெதுப்பான நீரில் இரண்டு மேசைக் கரண்டி இலவங்கப் பட்டை பொடி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட நோய் கிருமிகள் அழியும்.


இலவங்கப்பட்டையை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள்

 • 60 கிலோ எடை உள்ளவர்கள் ஒரு நாளில் 5மி.கி. மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதிகம் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு வரலாம்.
 • நுரையீரல், கல்லீரல், சிறுநீரக பாதிப்புகள் வரலாம்.
 • வாய்ப்புண் ஏற்படும்
 • இரத்த சர்க்கரை குறைய இலவங்கப்பட்டை பயன்படுத்தப்படுகிறது. சமயத்ஹ்டில் அதிகமாக பயன்படுத்தினால், அளவுக்கு அதிகமாக சர்க்கரை அளவை குறைத்துவிடும்.

அதனால், அளவோடு மட்டுமே இலவங்கப்பட்டைத் தூளை பயன்படுத்தவேண்டும்.

Updated On: 17 Feb 2023 12:33 PM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலினும், சிவகுமாருக்கு வாழ்த்து சொல்வாரோ?
 2. அவினாசி
  அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
 3. காஞ்சிபுரம்
  சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
 4. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
 5. தமிழ்நாடு
  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
 6. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 7. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 8. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 9. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 10. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!