/* */

உங்களுக்கு சர்க்கரை நோயா-? முதல்ல இதைப் படியுங்களேன்......

guideline for diabetic patients நாகரிக உலகில் மாறவரும் உணவுப்பழக்கம், உடல் உழைப்புஇன்மை போன்ற காரணிகளால் நோய்கள் வரிசை கட்டி நம்மை வரவேற்கிறது. அதில் சர்க்கரை நோயும் ஒன்றாகும்.

HIGHLIGHTS

உங்களுக்கு சர்க்கரை நோயா-?  முதல்ல இதைப் படியுங்களேன்......
X

guideline for diabetic patients


சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய், கனிகள் வகைப்படுத்தலின் அட்டவணை(பைல் படம்)

guideline for diabetic patients

மனிதர்களாக பிறந்த நமக்கு நோய்களே வராது என்று யாரால் சொல்ல முடியுமா? வசதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நோய்கள் தாக்குவது என்பது அக்காலம் முதல் இக்காலம் வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதத்தினை நோய்கள் பார்ப்பதில்லை. அந்த வகையில் தற்காலத்தில் அனைவரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்கும் ஒரு நோயாக சர்க்கரை நோய் உருவெடுத்து உள்ளதால் பலர் இதனால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பதே உண்மை.

முன்பெல்லாம் சர்க்கரை நோய் என்றால் ஒரு சிலருக்குமட்டுந்தான் வரும். ஆனால் தற்போதைய நாகரிக உலகில் வயது வித்தியாசம் இன்றி சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டுள்ளனர். இதற்கு காரணம் என்ன? என பார்த்தோமானால் நாம் சாப்பிடும் உணவுகளே நமக்கு நோய்களை உண்டாக்குகிறது.

அக்காலத்தில் வயலில் விளையும் தானியப்பயிர்கள் அனைத்துமே இயற்கை உரங்களைக் கொண்டு விளைந்தது. நம்மிடமும் அதிக உடல் உழைப்பு இருந்தது. இதனால் நோய்கள் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இப்போதே இந்த நிலை முற்றிலும் மாறி நோயின் தாக்குதலானது அதிகரித்துள்ளது.

கோடைக்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய ஆரோக்யத்தினை மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் பராமரிப்பது நலம் தரும். அவரவர்கள் தங்களுடைய சர்க்கரையின் அளவிற்கேற்ப உணவுக்கட்டுப்பாடு,மற்றும் ஆரோக்யக்கட்டுப்பாட்டு முறைகளை சீராக கடைப்பிடித்து வந்தால் கோடைக்காலத்தின் தாக்கத்திலிருந்து மிக எளிதாக விடுபடலாம்.

guideline for diabetic patients


சர்க்கரை நோயால் பாதிப்படைந்தவர் தனக்குத்தான் இன்சுலின் பேனாவினால் இன்சுலின் போட்டுக்கொள்கிறார்.(பைல்படம்)

guideline for diabetic patients

உடலில் உள்ள நீர்ச்சத்து

வெயில்காலத்தில் சூடான வெப்பசூழ்நிலையானது இயற்கையாகவே உருவாகிறது. அந்த சமயத்தில்நமது உடலில் இருந்து நீர்ச்சத்து அதிகமாக வெளியேறும்போது ரத்த சர்க்கரை கட்டுப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் சர்க்கரையின் அளவும் உயருகிறது. இவ்வாறு உயரும்போது அதிகமான சிறுநீர் அதிக அளவில் வெளியேறும். இந்த சமயத்தில் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனைத் தடுப்பதற்கு டாக்டர் ஆலோசனையுடன் அதிகமான தண்ணீரைக் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் நீர்ச்சத்து சரியான அளவில் வைக்கப்பட்டு ரத்த சர்க்கரையானது கட்டுப்படுத்தப்படும். கிட்னி பாதிப்பு உடையவர்கள் இருதய பாதிப்பு உள்ளவர்கள் டாக்டர் ஆலோசனையை கோடைக்காலத்தில் பெற வேண்டியது அவசியம் ஆகும்.

வெப்பத்தினால் ஏற்படும் களைப்பு

சர்க்கரை நோயாளிகள் வெயில் காலத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போதுஉடலில் அதிக உஷ்ணம் ஏற்பட்டு தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படுதல் . அதிகமான வியர்வை வெளியேறுதல், தசைப்பிடிப்பு, தோல் குளிர்ந்து ஜில்லென்று ஆகிவிடுவது, தலைவலி, நாடித்துடிப்பு அதிகரித்தல், வாந்தி வருவது போல இருத்தல், போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டவுடன் அதிக சூடாக இருக்கும் இடத்தை விட்டுவிட்டு குளிர்ச்சியான இடத்திற்கு சென்று விட வேண்டும். உடனடியாக குடிநீரைக்குடிக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான உடற்பயிற்சி

சர்க்கரை நோயாளிகள் தினமும் உடற்பயிற்சி செய்வார்கள். கோடைக்காலத்தில் உடற்பயிற்சியை விடியற்காலையிலும், அல்லது மாலை வேளையிலும் செய்ய வேண்டும். ஜிம் போன்றவற்றில் சேர்ந்து முற்றிலும் குளிரூட்டப்பட்ட சூழ்நிலையிலும் உடற்பயிற்சி செய்யலாம்.

ரத்த சர்க்கரை பரிசோதனை

கோடைக்காலத்தில் வீட்டிலேயே சுயரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குளுக்கோமீட்டர் மூலம் தினமும் மூன்று அல்லது நான்கு முறை கூட ரத்த பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இன்சுலின் மருந்து, குளுக்கோமீட்டர், சர்க்கரை பரிசோதிக்கும் பட்டைகள் அனைத்தையும், குளிர்ச்சியான உலர்ந்த பகுதியில் வைத்திருக்க வேண்டும்.

கோடைக்காலத்தில் அதிகரிக்கும் சர்க்கரை

கோடைக்கால வெயிலில் அலைந்து திரிந்து வியர்வையுடன் வீட்டுக்கு வரும் போது பானையில் உள்ள ஜில் ஆரியக்கூழ், கம்மங்கூழ், தாகத்தினைத் தீர்க்கும் என வயிறு முட்ட குடிப்போம். இவ்வாறு ஆரியக்கூழையும், கம்மங்கூழையும், குடிக்கும்போது அவை உடனடியாக ஜீரணம் செய்யப்பட்டு ரத்த சர்க்கரையை அசுர வேகத்தில் அதிகரிக்கும். அதேபோல் பழச்சாறுகள், பாட்டில் குளிர்பானங்கள், அனைத்து ரத்த சர்க்கரையை மிகவும் வேகமாக அதிகரிக்க செய்கிறது. கோடைக்கால தாகத்தைத் தீர்க்க ஜில்லென்ற குடிநீரே சிறந்தது.கிட்னி பாதிப்பு இல்லாதவர்கள் டாக்டர் ஆலோசனையுடன் ஒரு நாளைக்கு ஒரு இளநீர் அருந்தலாம்.

guideline for diabetic patients


சர்க்கரை நோயாளிகள் தனது கால்களை கண்கள் போல் பாதுகாப்பது மிக மிக அவசியம் என்பதை உணர்த்தும் படம் (பைல்படம்)

guideline for diabetic patients

கால்களை பாதுகாக்க 10 வழிமுறைகள்

*கால்களையும், கால் பாதங்களையும் சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருக்க வேண்டும்

*விரல் நகங்களை சரியாக நேராக வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

*புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.

*தினமும் கால்களை பராமரிக்க வேண்டும். முகம்போல் கால்களையும் பராமரிக்க வேண்டும்

*செருப்பு அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். மதிய வேளையில் கோவிலுக்கு செல்லும்போது கால்களில் கொப்புளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உச்சி வெயில் வேளையில் கோவிலுக்கு செல்வதைத் தவிர்த்து விடியற்காலையில் அல்லது மாலை வேளையில் கோவிலுக்கு செல்வதே சிறந்தது.

*டாக்டரை அடிக்கடி சந்திக்கும்போது கால் விரல்களையும், பாதங்களையும் பரிசோதிக்க வேண்டும்

*தினமும் சரியான காலணிகளை அணிந்துகொண்டு நடைப்பயிற்சி குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது செல்லவேண்டும்.

*கால்கள் , பாதங்கள், விரல்களுக்கு கோடைக்காலத்தில் உபயோகிக்கும் களிம்புகளை டாக்டர் ஆலோசனைப்படி பூசிக்கொள்ள வேண்டும்.

*செருப்புகளை தேர்ந்தெடுத்து சரியான அளவு உள்ளவற்றை அணிய வேண்டும்.

Updated On: 24 Oct 2022 9:01 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!