தீபாவளி பலகாரங்களை ஒரு பிடி பிடிக்கலாம்..! ஆனா, இதையெல்லாம் தினமும் சாப்பிட்டு இருக்கணும்..!

தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில், வழக்கத்தை விட அதிகளவில் பலகாரம், இனிப்பு, கார வகைகளை சாப்பிடுவது தவிர்க்க முடியாதது. இதனால், ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்க்க, தினசரி உணவுகளில் இந்த பொருட்களை சேர்த்துக்கொள்வது அவசியமாகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தீபாவளி பலகாரங்களை ஒரு பிடி பிடிக்கலாம்..! ஆனா, இதையெல்லாம் தினமும் சாப்பிட்டு இருக்கணும்..!
X

தீபாவளி பலகாரம் சாப்பிடலாம், வாங்க!

தீபாவளி வந்துவிட்டது. பல வீடுகளில் இனிப்பு வகைகளும், எண்ணெய் பலகாரங்களும் தயாராகி விட்டது. கிடைப்பதை எல்லாம், மகிழ்ச்சியாக சாப்பிடுவோம். ஆனால் தீபாவளி முடிந்த பிறகுதான் அதன் பின்விளைவுகள் தெரிய வரும்.

உடல் எடை அதிகரிப்பதில் துவங்கி, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது, உடலில் கழிவுகள் நிறைய சேர்ந்து அஜீரணக் கோளாறு உண்டாவது போன்ற பல பிரச்சினைகள் உருவாகும். இவை ஏற்படாமல் தடுத்து பண்டிகையை இனிமையாகக் கொண்டாட வரும் நாட்களில், தினமும் உணவோடு இந்த பொருள்களையும் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பண்டிகை காலம் என்றாலே, வழக்கமாக எடுத்துக் கொள்ளும் கலோரிகளை விட அதிகமாக, பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடுவோம். ஒரு நாள் தானே என்று நினைப்போம். ஆனால் பண்டிகைக்கு பிறகு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவது சிக்கலாகி விடும். இதுபோன்ற சிரமங்களைத் தவிர்க்க இந்த பொருள்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம்.


மிளகு

மிளகு உணவின் சுவையைக் கூட்டவும், காரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் மிளகு மருத்துவப் பயன்கள் நிறைந்த பொருள். இதில் உள்ள ஏராளமான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் நோய்களை உண்டாக்கும் நோய்த் தொற்றுக்களைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. 'பெப்பரைன்' என்னும் வேதி மூலக்கூறுகள் இதில் அதிகம். இவை உடலில் உள்ள நோய்த் தொற்றுக்களளத் தாக்கி அழித்து, உடலில் தேங்கியிருக்கும் தேவையில்லாத கொழுப்பு மற்றும் கழிவுகளை வெளியேற்றச் செய்யும். மிளகோடு மஞ்சள், இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருள்களையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம்.


முழு தானியங்கள்

ஓட்ஸ், பார்லி மற்றும் குயினோவா போன்ற முழு தானியங்களில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இவற்றின் முதன்மையான வேலை, உடலில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களுக்கு எதிராகப் போராடுவது தான். இவை 'ஹைப்போகிளைசெமிக்' உணவுகள் என்பதால், உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும், முறைப்படுத்தவும் உதவுகிறது.

பண்டிகை காலங்களில் பொதுவாகவே நிறைய இனிப்புகள், எண்ணெயில் பொரித்த, வறுத்த பலகாரங்கள் என அதிகமாக சாப்பிடுவோம். அதனால் உடலில் கழிவுகள் மட்டுமின்றி, உடல் எடையும் அதிகரிக்கும். இதைத் தடுக்க வழக்கமான இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி போன்ற கார்போ அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்த்து பார்லி மற்றும் பார்லி தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது உடல் எடையைக் கூட்டாமல், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.


​காளான்

குளிர்கால பண்டிகை நேரத்தில் அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றில் மிக முக்கியமானது காளான்.காளானை, பெரும்பாலானோர் அதிகமாக சாப்பிடுவதில்லை. மிக அரிதாகவே உணவில் காளானை சேர்க்கிறார்கள். ஆனால் அடிக்கடி காளானை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

உணவுகளில் உள்ள மினரல், வைட்டமின்களை முறையாக உறிஞ்சிக் கொள்வதற்கான பண்புகளை காளான் கொண்டிருக்கிறது. இதனால் பண்டிகை காலங்களில், ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.


பாகற்காய்

ரத்த சர்க்கரை நோயால் அவதிப்படுவர்களுக்கான அற்புதமான காயாக, பயன்படுத்தப்படுவது பாகற்காய். இது உடலில் இன்சுலின் சுரப்பை முறையாகத் தூண்ட உதவி செய்கிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, எல்லோருமே, வாரம் இரண்டு முதல் மூன்று முறையாவது பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. மேலும் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் குறிப்பாக கொழுப்பு கல்லீரல் பிரச்சினை உண்டாகாமல் தடுத்து, கல்லீரலில் உள்ள கழிவுகளை முறையாக வெளியேற்றும்.


​வெந்தயம்

பண்டிகை காலங்களில், தினசரி டயட்டில் வெந்தயத்தைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், வெந்தயத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை இயக்கக்கூடிய தன்மையும் 'ஆன்டி இன்பிளமேட்டரி' பண்புகளும் அதோடு அதிகப்படியான ஆன்டி - ஆக்சிடன்ட்டுகளும் நிறைந்திருக்கின்றன.

முதல் நாள் இரவே அரை ஸ்பூன் வெந்தயத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த வெந்தயம் ஊறிய நீரை, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படுவதோடு உடலில் உள்ள கழிவுகளையும், இயற்கையாக வெளியேற்ற வெந்தயம் உதவும்.

Updated On: 23 Oct 2022 10:48 AM GMT

Related News

Latest News

 1. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 2. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 3. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 4. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 5. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
 6. சினிமா
  Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...
 7. தூத்துக்குடி
  முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
 8. லைஃப்ஸ்டைல்
  egg shell powder uses-முட்டை ஓட்டு பொடியில் இவ்ளோ நன்மைகளா..? இனிமேல்...
 9. சினிமா
  விஜய் டிவி பிரபலத்தைக் காதலிக்கிறாரா சீரியல் நடிகை ரவீனா?
 10. நாமக்கல்
  சேந்தமங்கலம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ரூ.52.86 லட்சம் மதிப்பில்...