/* */

கீல்வாதம் ஏன் வருகிறது? யாருக்கு வருகிறது? தீர்ப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!

Gout Meaning in Tamil-கீல்வாதம் என்பது மூட்டு தேய்மானங்களால் ஏற்படும் எலும்புகள் சார்ந்த பாதிப்பு ஆகும். இது ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவைகளை தெரிஞ்சுக்குவோம் வாங்க.

HIGHLIGHTS

Gout Meaning in Tamil
X

Gout Meaning in Tamil

கீல்வாதம் என்றால் என்ன?

Gout Meaning in Tamil

கீல்வாதம் என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கதிற்கு மாறாக வளர்ந்து இந்நிலையை சரி செய்வதற்கு பதிலாக, மோசமடையச் செய்கிறது.

மூட்டுவலி என்பது மூட்டுகளை பாதிக்கும் ஒரு மருத்துவ நிலை ஆகும். பல்வேறு வகையான மூட்டுவலி வகைகள் உள்ளன. இதில் கீல்வாத மூட்டுவலி பரவலாகக் காணப்படும் வகைகளில் ஒன்றாகும்.

கீல்வாத மூட்டுவலி மன உளைச்சலை ஏற்படுத்தி கவலையை அதிகரிக்கச் செய்யும். ஆனால் உண்மையில் பல மருத்துவ முன்னேற்றங்களின் விளைவாக, சில மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல நிவாரணம் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும்.

கீல்வாதம் (OsteoArthritis) மிகவும் பொதுவாக நாட்பட்ட மூட்டு நிலை. இது "தேய்மான கீல்வாதம்" அல்லது "சிதைந்த கீல்வாதம்" என்றும் அறியப்படுகிறது. இந்த மருத்துவ நிலையில், உங்கள் மூட்டுகளில் உள்ள பஞ்சுபோன்ற, பாதுகாப்பு திசுவான குருத்தெலும்பு தேய்ந்து, நீட்டி வளைக்கும் திறனை இழக்கிறது. இப்படி குருத்தெலும்பு மெலிதாகிவிட்டாலோ அல்லது முற்றிலுமாக தேய்ந்துவிட்டாலோ, உங்கள் மூட்டுகளில் உள்ள எலும்புகள் ஒன்றோடொன்று உரச ஆரம்பிக்கும். அதன்மூலம் வலி, வீக்கம், விறைப்பு மற்றும் சில சமயங்களில், மூட்டு இறுகுதல் அல்லது உடைதல் போன்ற உணர்வு போன்ற கீல்வாத அறிகுறிகளை ஏற்படுத்தும்.

கீல்வாதம் எந்த மூட்டுகளிலும் ஏற்படலாம். ஆனாலும் இதன் பாதிப்பு பொதுவாக கை விரல்கள், தோள்பட்டை, முதுகெலும்பு, கழுத்து அல்லது கீழ் முதுகு, இடுப்பு, முழங்கால்கள் போன்ற உடற்பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.

கீல்வாதம் யாரை பாதிக்கிறது?

கீல்வாதம் பெரும்பாலும் 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனாலும் இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். அதிலும், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முழங்கால் மூட்டுவலி அதிகமாக ஏற்படுகிறது.

மூட்டு வலி வர காரணம் என்ன?

உடலில் நீர்ச் சத்து,சர்க்கரைச் சத்து,மற்றும் உப்புச் சத்து குறைவதால் கால் வலி,மூட்டு வலி வருகிறது. வாத நீர் இருந்தாலும் மூட்டு வலி வரும். தேவையான அளவு நீர் அருந்தி, சிறுநீர் நன்கு பிரிந்தால் இந்த நோய் வருவதை தடுக்க முடியும். வாத நீர் மூட்டுக்களில் உள்ள சவ்வுகளை தாக்கி வலியை ஏற்படுத்துகிறது.

மூட்டு சேதம் ஏற்பட பிற காரணங்கள்

கிழிந்த குருத்தெலும்பு (cartilage), இடம்பெயர்ந்த மூட்டுகள் அல்லது தசைநார்(ligament) காயங்கள் போன்று கடந்தகாலத்தில் ஏற்பட்ட காயங்கள்

மூட்டு சிதைவு

உடல் பருமன்

நிற்பது,உட்கார்தல் மற்றும் நடப்பதில் மற்றம் ஏற்படுதல்.

கீல்வாதத்திற்கான ஆபத்து காரணிகள் (risk factors) யாவை?

சில ஆபத்து காரணிகள் உங்களுக்கு கீல்வாதம் உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அவையாவன:

  • குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு இந்த பாதிப்பு இருத்தல், குறிப்பாக பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள்
  • ஆண்களை விட பெண்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாதவிடாய் நின்றவர்கள், மண்டியிடுதல், ஏறுதல், எடை தூக்குதல் அல்லது அதுபோன்ற செயல்களை செய்பவர்கள்.
  • அடிக்கடி காயம் ஏற்படும் வாய்ப்புள்ளவர்கள்
  • அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்கள்
  • நிற்பதில்,உட்காருவதில், நடத்தலில் மாற்றம் ஏற்பட்டிருத்தல்
  • நீரிழிவு அல்லது வேறு வகையான மூட்டுவலி போன்ற உங்கள் மூட்டு ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றொரு மருத்துவ நிலை இருத்தல்

கீல் மூட்டு என்றால் என்ன?

கீல்வாதம் என்பது மூட்டுகளை (பொதுவாக முழங்கால்கள், இடுப்பு, கைகள்) தாக்கும் நோயாகும். உங்கள் மூட்டு அதன் குருத்தெலும்பை இழக்கும் போது, எலும்பானது வளர்ந்து, அதன் பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கும். ஆனால், எலும்பு வழக்கத்திற்கு மாறாக வளர்ந்து இந்நிலையை சரி செய்வதற்கு பதிலாக, மோசமடையச் செய்கிறது. அதனால் வலி ஏற்படுகிறது.

யூரிக் அமிலம் ஏன் அதிகரிக்கிறது?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மக்களுக்கு அதிக யூரிக் அமில அளவுகளுக்கு மரபுப்பண்பே காரணமாக அமைகிறது. உணவுப்பழக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம். உப்பு அதிகமாக உட்கொள்வதால் யூரிக் அமில அளவு அதிகரிக்கலாம். தினசரி சமையலில் உப்பு அதிகமாகப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை செய்து உப்பு பயன்படுத்துவது நல்லது.

சிகிச்சை

கீல்வாதம் முற்றிய நிலையில் (நாள்பட்ட டோபசியஸ் கீல்வாதம் என்று அறியப்படுகின்றது) இருந்தால், பெரிய டோஃபியை அகற்றவும் மூட்டு முடத்தை சரிசெய்யவும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். கீல்வாதம் இந்தக் கட்டத்தை அடைந்த நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்வதுடன் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் அவசியமாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 March 2024 6:54 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்