gingelly oil in tamil-நல்லெண்ணெய் நல்லதே செய்யும் ..! எப்டீன்னு படிச்சு பாருங்க..!
gingelly oil in tamil-எள்ளில் இருந்து தயாரிக்கப்படுவது நல்லெண்ணெய். எள்ளை ஆட்டி எடுக்கப்படுகிறது. அதன் பயனுள்ள தன்மைகளால் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது.
HIGHLIGHTS

gingelly oil in tamil-நல்லெண்ணெய் பயன்பாடு (கோப்பு படம்)
gingelly oil in tamil-இதயத்தை பாதுகாக்கும் நல்லெண்ணெய் நம் பாரம்பரிய உணவு பழக்கத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நல்லெண்ணெயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுபட்டு நாம் பாதுகாப்பாக இருக்கலாம். நல்லெண்ணெய் எப்படியெல்லாம் பயனாகிறது என்பதை இந்த கட்டுரையின் மூலம் காண்போம் வாங்க.

'தீவளிக்கு தீவளி எண்ணெய் தேய்ச்சு நீ குளி'ன்னு ஒரு பாட்டு தமிழ் சினிமாவில் உள்ளது. அது நாம் காலம் காலமாக தீபாவளியன்று செய்துவரும் ஒரு பழக்கம். ஆமாம், தீபாவளி அன்று அம்மா தேய்த்துவிடும் நல்லெண்ணெய் குளியலோடு அடுத்த தீபாவளிக்கு மீண்டும் எண்ணெய் தேய்த்துக்கொள்ளும் அளவுக்கு நாம் எண்ணெய் குளியலை மறந்து போனோம். ஆனால், நல்லெண்ணெயில் இருக்கும் சத்துக்களும், அதன் அற்புதங்களும் தெரிந்தால் விடுவது கடினம்.
ஆயில் புல்லிங் என்று சொல்லப்படும் ஒரு வைத்திய முறைக்கு நல்லெண்ணையை பயன்படுத்துகின்றனர். அட ஆமாங்க.. நல்லெண்ணெயை வாயில் வைத்து 20 நிமிடங்கள் வரை கொப்பளித்தால் அது இதயத்திற்கு நல்லது என்று பலரும் அதை செய்வதை கேள்விப்பட்டிருப்போம்.
gingelly oil in tamil

இதயம் காக்கும்
நல்லெண்ணெயில் இருக்கும் லெசித்தின் என்கிற மூலப்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுவதுடன் இதயம் பலப்பட உதவி செய்கிறது. இதயத்தில் படியும் கெட்ட கொழுப்புகளை படிய விடாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் நல்லெண்ணெயில் இருக்கும் லினோலிக் அமிலம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் செய்கிறது.

இளமையான தோற்றம்
நன்கு காயவைக்கப்பட்ட எள்ளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த எண்ணெயில் ஜிங்க் சத்து அதிகம் இருப்பதால் தோலில் ஜவ்வுத் தன்மையை நீட்டிக்கச் செய்கிறது. இதனால் எப்போதும் இளமையான தோற்றப் பொலிவுடன் இருப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவது நலம் தரும்.
ஒற்றைத் தலைவலி
சிலர் ஒற்றைத் தலைவலியால் பெரிய அவஸ்தைப்படுவார்கள். அவ்வாறு ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது நல்லெண்ணெயில் சிறிது பூண்டு மற்றும் சிறிதளவு மிளகை இடித்துப் போட்டு நன்றாக காய்ச்சவேண்டும். பின்னர் ஆறியதும் தலைக்கு தேய்த்து குளித்துப் பாருங்கள். நீண்ட நாள் ஒற்றைத் தலைவலியும் காணாமல் போய்விடும். குளிர்காலங்களில் ஏற்படும் வெடிப்புகளுக்கு நல்லெண்ணெய் தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
gingelly oil in tamil

முக சுருக்கங்கள் நீங்கும்
முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், பருக்கள் உடனடியாக மறைவதற்கு முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு டீஸ்பூன் பயத்தமாவு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு க்ரீம் போல அடித்து தடவி காய விட்டால் முகம் இறுக ஆரம்பித்து விடும். அதன் பின்பு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் சுருக்கங்கள், பருக்கள் விரைவாக மறையும்.

கண் எரிச்சல் குறையும்
நல்லெண்ணெயை காய்ச்சி வெது வெதுப்பான சூட்டில் தலைக்கு மசாஜ் செய்வதால் நிறையவே நன்மைகள் உண்டு. இதை நம் பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த ஒரு சாதாரண விஷயம் தான் ஆனால் இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வர நம் கண்களில் குளிர்ச்சி ஏற்பட்டு எரிச்சல் குறைவதுடன், கண் பிரச்னைகள் முற்றிலும் நீங்கும்.
சூடு தணியும்
நல்லெண்ணெய் உடல் சூடு தணிக்கும், பொடுகு வரவே செய்யாது! தலை முடி நரை, தலை முடி நுனி வெடிப்பு இது போன்ற பிரச்னைகள் எட்டிக்கூட பார்க்காது. குழந்தைப் பருவம் முதலே இதனைத் தொடர்ந்து கடைபிடித்து வருபவர்களுக்கு பிரச்னை இல்லை.
gingelly oil in tamil

புதிதாக பயன்படுத்துவோர் கவனத்திற்கு
ஆனால் திடீரென செய்யும் பொழுது உடல் உஷ்ணம் வெளியே தள்ளி, சளி பிடிக்க ஆரம்பித்துவிடும். எனவே முதன் முறையாக பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பிக்க வேண்டும். ஆஸ்துமா, சுவாச பிரச்னைகள் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அந்த அளவிற்கு குளிர்ச்சி மிகுந்த இந்த நல்ல எண்ணெய் தோல் பளபளப்புக்கும், தலைமுடி வளர்ச்சிக்கும், உடல் உறுப்புகள் நன்றாக செயல்படவும் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்.