/* */

அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?

பெருஞ்சீரகத்தின் பலன்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
X

பெருஞ்சீரகம். (மாதிரி படம்).

நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான சோம்பு என அழைக்கப்படும் பெருஞ்சீரகத்தில் பல்வேறு பலன்கள் உள்ளன. அதில் உள்ள சத்துக்கள், மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவு இதோ:

பூக்கள் வகையைச் சார்ந்த பெருஞ்சீரகமானது, முழு பெருஞ்சீரகம் மற்றும் அவற்றின் பொடி ஆகிய இரண்டு வகைகளில் FSSAI தரங்களை நிர்ணயத்துள்ளது. முழு பெருஞ்சீரகத்திலும் மற்றும் அதன் பொடியிலும் அதற்குரிய சிறப்பு வாசனையுடன் இருக்க வேண்டும். பூஞ்சைகள், இறந்து போன அல்லது உயிருள்ள பூச்சிகள், அதன் துகள்கள், எலி எச்சங்கள், மண் துகள்கள் படிந்து இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.


பெருஞ்சீரகத்திலும் மற்றும் அதன் பொடியிலும் எந்த செயற்கை நிறமியும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் ஏதும் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. பெருஞ்சீரகத்திலும் மற்றும் அதன் பொடியிலும் ஈரப்பதம் 12 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. பெருஞ்சீரகத்தில் பூச்சிகள் தாக்கப்பட்ட பெருஞ்சீரகம் 1%-ற்கு மேல் இருத்தல் கூடாது, பாதிப்படைந்த சீரகம் 5%-ற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

பெருஞ்சீரகத்தில் உள்ள சத்துக்கள்:

பெருஞ்சீரகத்நில் வெளிப்புறப் பொருட்கள் 2%-ற்கு மேற்பட்டு இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. பெருஞ்சீரகத்தில் இதர உணவு விதைகள் இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. நூறு கிராம் பெருஞ்சீரகத்தில் 345 Kcal எரிசக்தியும், மொத்த கொழுப்பு 14 கி, அதில் மோனோ-அன்சேச்சுரேடேட் ஃபேட்டி ஆசிட் 10 கி மற்றும் பாலி-அன்சேச்சுரேடேட் ஃபேட்டி ஆசிட் 1.5 கி என்ற அளவில் உள்ளது. மொத்த கார்போஹைட்ரேட் 52 கி, அதில், நார்ச்சத்து 40 கி, புரதம் 16 கிராம் என்ற அளவிலும் உள்ளது.

நூறு கிராம் பெருஞ்சீரகத்தில் கால்சியம் 1196 மிகி (தினசரி தேவையில் 120%), இரும்புச்சத்து 18.5 மிகி (தினசரி தேவையில் 142%), மெக்னீசியம் 385 மிகி (தினசரி தேவையில் 108%), மாங்கனீஸ் 6.5 மிகி (தினசரி தேவையில் 310%), பாஸ்பரஸ் 487 மிகி (தினசரி தேவையில் 70%), பொட்டாசியம் 1694 மிகி (தினசரி தேவையில் 36%), ஸிங்க் 4 மிகி (தினசரி தேவையில் 42%) என்ற அளவில் உள்ளது.


நூறு கிராம் பெருஞ்சீரகத்தில் வைட்டமின் - பி1 0.4 மிகி (தினசரி தேவையில் 36%), வைட்டமின்-பி2 0.35 மிகி (தினசரி தேவையில் 29%), வைட்டமின்-பி3. 6.1 மிகி (தினசரி தேவையில் 41%), வைட்டமின்-பி6 0.47 மிகி (தினசரி தேவையில் 36%) மற்றும் வைட்டமின்-சி் 21 மிகி (தினசரி தேவையில் 25%) என்றளவில் உள்ளது.

பெருஞ்சீரகத்தின் மருத்துவக் குணங்கள்:

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் “ஃப்ரீ ரேடிக்கல்ஸ்” என்ற காரணிகளை மட்டுப்படுத்தும் ஃப்ளாவினாய்ட்ஸ் மற்றும் Kaempoferol & Quercetin போன்ற ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்ஸ் ஆகியவற்றால் நோய் எதிர்ப்பு சக்தியும், வயதாகும் தன்மையைத் தள்ளிப்போடும் ஆற்றலும் பெருஞ்சீரகத்திற்கு உள்ளது. பெருஞ்சீரகத்தில் உள்ள Anethole, Fenchone & Methyl Chavicol போன்ற காரணிகளால் உடலில் ஏற்படும் பூஞ்சைகள் தாக்கத்தினை எதிர்த்துப் போரிடுகின்றது.


பெருஞ்சீரகம் ஒரு சிறந்த நுண்ணுயிர்க்கொல்லி ஆகும். பெருஞ்சீரகத்தில் உள்ள பல்வேறு காரணிகள் உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது. மேலும், வாயுத்தொல்லையைக் குறைக்கின்றது. மேலும், செரிமான மண்டலத்தில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், மலம் இலக்கியாகவும், ஆன்ட்டி-ஸ்பாஸ்மோட்டிக்காவும் பெருஞ்சீரகம் செயல்படுகின்றது.

பெருஞ்சீரகத்திற்கு ‘ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி’ குணமும் உள்ளது. உடலில் உள்ள கூடுதல் தண்ணீரை வெளியேற்றும் ‘டையூரட்டிக்’ என்ற பண்பு பெருஞ்சீரகத்தில் இயற்கையாகவே உள்ளது. பெருஞ்சீரகத்தில் உள்ள மேலேச் சொன்ன ‘டையூரட்டிக்’ பண்பினாலும், பொட்டாசியத்தினாலும், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நலன் பாதுகாக்கப்படுவதுடன், ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பினையும் குறைக்கின்றது.

பெருஞ்சீரகம் சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற நுரையீரல் பாதிப்பைத் தடுக்கின்றது. பெருஞ்சீரகம் பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், மார்பகம் மற்றும் ஈரல் புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றலும் பெருஞ்சீரகத்திற்கு உண்டு. பெருஞ்சீரகமானது, கொழுப்பு மற்றும் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால், உடல் எடையைக் குறைக்கும் மருந்தாகும்.

பெருஞ்சீரகம் எலும்பு ஸ்திரத்தன்மையை அதிகரிக்கின்றது. மேலும், மாதவிடாய் நின்ற பின்னர் ஏற்படக்கூடிய எலும்பு மிருதுவாகக் கூடிய நிலையைத் தடுக்கின்றது மற்றும் ஆஸ்ட்டியோபோரோஸிஸ் என்ற எலும்பு சாரந்த நோய் வராமல் தடுக்கின்றது. பெருஞ்சீரகம், முடி நரைத்தலைத் தள்ளிப்போடுகின்றது மற்றும் முடி உதிர்தலையும் தடுக்கின்றது.


பெருஞ்சீரகத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் நீர், கண்களை சுத்தம் செய்யப் பயன்படுகின்றது. பெருஞ்சீரகம், வயதாவதால் ஏற்படக்கூடிய கண்களின் தசை சீர்குலைவைத் தடுக்கின்றது. பெருஞ்சீரகத்தில் உள்ள Anethole என்ற காரணி இரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. பெருஞ்சீரகம் மன அழுத்தத்தை குறைக்கின்றது. மேலும், வயதவாதால் ஏற்படும் மனநிலைக் குறைபாடுகளைத் தடுக்கின்றது.

பெருஞ்சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுடன், இரத்தசோகையைக் குறைக்கவும் செய்கின்றது. பெருஞ்சீரகம் மாதவிடாய் வலியைக் குறைக்கின்றது, வெள்ளைப்படுதல் என்று சொல்லக்கூடி ‘Leucorrhoea’ என்ற நோயைச் சரிப்படுத்துகின்றது மற்றும் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுகின்றது. பெருஞ்சீரக இலையின் டிகாஷன், பாம்புக் கடிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது. மேலும், விஷக்காளானில் உள்ள விஷத்தை முறிக்கின்றது என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 26 March 2023 7:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  2. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  3. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  4. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  5. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  7. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  8. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  10. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!