/* */

மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டு, சத்துக்களுக்கும் குறைவில்லை!

சமையலுக்கு மட்டுமின்றி உடல் நலத்துக்காகவும் தினமும் பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டு, சத்துக்களுக்கும் குறைவில்லை!
X

பூண்டு. (மாதிரி படம்).

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு என்பது பூண்டு, பூடு, வெள்ளை வெங்காயம், வெள்ளைப் பூண்டு என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. பூண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உணவுப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது என்பதே உண்மை.

பூண்டு ஊறுகாய், கார்லிக் சிக்கன், பூண்டு குழம்பு போன்றவற்றின் ருசியை வர்ணித்துக் கொண்டே செல்லலாம். அப்படிபட்ட பூண்டின் தரங்கள், பலன்கள் மற்றும் கலப்படம் குறித்த உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்:


பூண்டு என்பது வெள்ளை அல்லது வெளுத்த க்ரீம் நிறத்தில் இருக்க வேண்டும், வறுத்த, எரிந்த மற்றும் சுட்ட துகள்கள் இருக்கக்கூடாது என்று FSSAI வரையறுத்து உள்ளது. பூண்டில், பூஞ்சைகள், இறந்து போன அல்லது உயிருள்ள பூச்சிகள், அதன் துகள்கள், எலி எச்சங்கள், மண் துகள்கள் படிந்து இருக்கக் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

பூண்டிலோ அல்லது அதன் பொடியிலோ எந்த செயற்கை நிறமியும் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. பூண்டில் ஈரப்பதம் 8 சதவீதத்திற்கும், பொடி எனில் 5 சதவீதத்திற்கும் மேற்பட்டு இருக்கக் கூடாது. வெளிப்பொருட்கள் 0.5 சதவீதத்திற்கும் மேல் இருத்தல் கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது.

நூறு கிராம் பூண்டில் எரிசக்தி 149 Kcal, கார்போஹைட்ரேட் 33 கி, புரதம் 6.3 கி, வைட்டமின்-பி6 1.2 மிகி (தினசரி தேவையில் 95 சதவீதம்), வைட்டமின்-சி 31 மிகி (தினசரி தேவையில் 38 சதவீதம்), மாங்கனீஸ் 1.6 மிகி தினசரி தேவையில் 80 சதவீதம்), கால்சியம் 181 மிகி (தினசரி தேவையில் 18 சதவீதம்), இரும்புச்சத்து 1.7 மிகி (தினசரி தேவையில் 13 சதவீதம்), பாஸ்பரஸ் 401 மிகி (தினசரி தேவையில் 22 சதவீதம்) மற்றும் ஸிங்க் 1.2 மிகி (தினசரி தேவையில் 12 சதவீதம்) உள்ளது.


பூண்டில் உள்ள ‘அல்லிசின்’ என்ற உட்கூறு தான் அதன் காரத்தன்மைக்குக் காரணம். பூண்டில் உள்ள ‘அல்லைல் மித்தைல் சல்ஃபைடு’ என்ற உட்கூறு, அதன் மணத்திற்கும், சுவைக்கும் காரணமாகும். இது தான், சமைக்கும் போது பூண்டு நிறம் மாறவும் காரணமாகும். மேலும், இது தான், பூண்டு சாப்பிட்டவுடன் நமது மூச்சிலும், உடலிலும் பூண்டு வாசனை வரவும் காரணமாகும்.

பூண்டினை அதன் தலையில் இருந்து பிரிக்காமலும், உரிக்காமலும், மிதமான வெப்பநிலையில், உலர்ந்த மற்றும் வெளிச்சம் குறைவான பகுதியில் வைத்திருந்தால், 5 மாதங்கள் வரை வைத்திருக்கலாம். உரித்த பூண்டினை, வைன் அல்லது வினிகரில் போட்டு, குளிர்பதனப்பெட்டியில் 4 மாதங்கள் வரை இருப்பு வைக்கலாம்.

ஒரு நாளைக்கு 2-5 கிராம் வரை (2 பல்) பூண்டினை நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதிகப்படியான கொழுப்புச் சத்து, ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைக்கும் தன்மையும், மேல் செரிமான மண்டல புற்றுநோய், ப்ராஸ்டேட் புற்றுநோய் ஆபத்தினை குறைக்கவும், சளி ஆகியவற்றிற்கு மருந்தாகவும் பூண்டு பயன்படுகின்றது. ஆனால், மருத்துவ ஆராய்ச்சிகளின் ஆதாரம் மிகவும் வரையறுக்கப்பட்டதாக உள்ளது.


பூண்டில் கலப்படம் பெரிய அளவில் பதிவாகவில்லை. ஆனால், பூண்டுப் பொடியில் முகப் பவுடர், நிலக்கடலை பொடி, கோதுமை மாவு, அரிசி மாவு, சோள மாவு என கலப்படம் செய்யப்படுகிறது. அவற்றை பகுப்பாய்வில் தான் கண்டறிய இயலும்.

சமையலில் சுவைக்காக என்று பூண்டினைப் பயன்படுத்தினாலும், உடல்நலத்திற்காக தினமும் குறிப்பிட்ட அளவு பூண்டினை (நபர் ஒருவருக்கு தினம் 2 பல் பூண்டு என்ற அளவில்) உணவில் சேர்த்து, கொழுப்புச் சத்து மற்றும் ரத்த அழுத்தத்தை சீர்படுத்துவோம் என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 21 March 2023 6:21 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே ...
  2. திருவண்ணாமலை
    வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி விழா துவக்கம்: நாளை சீதாராம திருக்கல்யயாண...
  4. தொண்டாமுத்தூர்
    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: பாஜக நிர்வாகியிடம் ரூ. 81 ஆயிரம்...
  5. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஆரணி
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
  8. திருவண்ணாமலை
    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட...
  9. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா