flax seeds meaning in tamil-ஆளி விதை சிறுசுதான்..! பயனோ பெரிசு..! படிச்சி தெரிஞ்சுக்கங்க..!
flax seeds meaning in tamil-ஆளி விதை ஆழியில் கண்டெடுத்த முத்து போன்றதுங்க. சாப்பிடுங்க நல்ல பயனடையுங்க..!
HIGHLIGHTS

flax seeds meaning in tamil-ஆளி விதை பயன்கள்.(கோப்பு படம்)
flax seeds meaning in tamil-ஆளி விதையை ஆங்கிலத்தில் flax seeds என்பார்கள். ஆளி விதை சிறியதுதான் என்றாலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த விதையாகும். இந்த விதையை அப்படியே சாப்பிடலாம். பொடி செய்து அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம். இந்த கட்டுரையில் ஆளி விதையின் பயன்களைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
ஊட்டச்சத்து உள்ளடக்கம்
100 கிராம் ஆளிவிதையில்
கலோரிகள் – 530
நல்ல கொழுப்பு – 37 கிராம்,
நார்ச்சத்து – 28 கிராம்,
புரதச்சத்து – 20 கிராம்.
ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம், போன்ற சத்துக்கள் உள்ளன.
செரிமான பிரச்னை தீர
ஆளி விதையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் இரண்டுமே தாராளமாக உள்ளன. இதனால் செரிமான பிரச்னையை எளிதில் தீர்க்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ஆளி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் இதன் பலன் முழுமையாக தெரிய வரும்.
புரதச்சத்து நிறைந்தது
ஆளி விதையில் வளமான அளவில் டயட்டரி புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. மேலும் ஆளி விதையில் அத்தியாவசியமான அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. எனவே, தினமும் ஆளி விதையை சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும்.
flax seeds meaning in tamil
அழற்சி எதிர்ப்பு பண்பு
ஆளி விதையில் வளமான அளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், உடலினுள் உள்ள அழற்சியை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டது. உடலில் அழற்சியானது அதிகம் இருந்தால்,ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே ஆளி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்யம் மேம்படும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்
ஆளி விதையில் உள்ள ஆல்பா-லினோலினிக் அமிலம் மற்றும் லிக்னன்கள், உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உடலைத் தாக்கும் அழற்சி நோய்களிலிருந்து திறமையாக பாதுக்காக்கும்.
உடல் எடை குறைய
ஆளி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள லிக்னன்ஸ் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்யம்
ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள லிக்னன்ஸ் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. எனவே, ஆளி விதை இதய ஆரோக்யத்தைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
flax seeds meaning in tamil
கண் ஆரோக்யம்
ஆளி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் வறட்சி நீங்கும். மேலும் ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், கண் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களுள் ஒன்றான மாகுலர் திசு சிதைவு ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. அதனால், கண் ஆரோக்யம் பாதுகாக்கப்படுகிறது.
சரும ஆரோக்கியம்
ஆளி விதை எண்ணெய் முகப்பரு, சொரியாசிஸ் போன்ற சரும பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. பாதிக்கப்பட்டப் பகுதியில் ஆளி விதை எண்ணெயை தினமும் தடவி வந்தால் நல்ல பயன் தெரியும்.