மூக்கு அறியும் மூளை செயல்பாடு..! எப்படி..? தெரிஞ்சுக்கங்க..!

தூக்கத்தின் போது சில வாசனை திரவியங்களை வெளிப்படுத்துவது மூளை சிறப்பாக செயல்பட உதவும் என்று ஆய்வு கூறுகிறது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மூக்கு அறியும் மூளை செயல்பாடு..! எப்படி..? தெரிஞ்சுக்கங்க..!
X

fragrances improve brain power-நறுமணங்கள் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.(கோப்பு படம்)

Exposes of certain Fragrances during Sleep helps brain works in Tamil, Exposes of certain Fragrances during Sleep helps brain works, Study Says that Exposure to certain fragrances during sleep can help your brain work better,fragrances improve brain power

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய சோதனைகளில், அறிவாற்றல் செயல்திறனை அதிகரிப்பதில் வாசனை திரவியங்கள் முக்கிய பங்கு வகிக்கும் ஆதாரங்களை இர்வின் சோதனை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

உலகில் மனித புலன்களின் வரிசையில், பார்வை (Sight)மற்றும் ஒலி(Sound) இவைகளைக் காட்டிலும் வாசனை பெரும்பாலும் சுற்றுப்புறத்தில் அதிகம் கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது.

இருப்பினும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின், இர்வின் ஆய்வு, வாசனை திரவியங்களின் சக்தியைப் பயன்படுத்துவது வயதான காலத்தில் அறிவாற்றல் செயல்பாட்டைப் பராமரிக்க ஒரு எளிய,ஆனால் சிறப்பான உத்தியாக இருக்கலாம் என்று கூறுகிறது.


பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அறையின் காற்றை மேம்படுத்துவதன் மூலம், உறக்கத்திலும் மூக்கின் உணர்திறன் சுவாசத்தை உணர்ந்து அந்த வாசனை மூளையின் நினைவகத்தைச் சென்றடைகிறது. இந்த வாசனை திரவிய பரிமாற்றம் மூளையின் முடிவெடுக்கும் பகுதிகளுக்கு இடையேயான நேரடித் தொடர்பை வலுப்படுத்த உதவுகிறது. இது அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் டிமென்ஷியா போன்ற கோளாறுகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது என்று அறிவியல் ஆய்வு கூறுகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட சமீபத்திய இர்வின், சோதனைகள் அறிவாற்றல் செயல்திறனை அதிகரிப்பதில் வாசனை திரவியங்களின் பங்கை சுட்டிக்காட்டும் ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன.

அறிவாற்றலின் ஆரோக்யத்தை நிலையாக வைத்திருப்பதற்கு, வயதான மூளையின் செயல்பாட்டை வளர்ப்பது முக்கியம் என்ற புரிதலில் இருந்து இந்த சோதனைமுறை உருவாகிறது.

இது வழக்கமான மனப் பயிற்சிகளில் ஈடுபடுவதை விட அதிகமான உணர்வு அனுபவங்களுடன் வயதானவர்களை சிந்திக்கவைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடிய தாராள சூழலை உருவாக்குகிறது.

நறுமணங்கள்-மூளை இணைப்பு

நறுமணங்கள் கடந்த காலங்களிலிருந்து கூட சக்திவாய்ந்த நினைவுகளைத் தூண்டும் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டுள்ளன. பார்வைக்குறைபாடு காண்ணாடி மூலமும், செவித்திறன் குறைபாடு செவிப்புலன் கருவிகள் மூலமாகவும் நிவர்த்தி செய்யப்பட்டாலும், வாசனை இழப்புக்கான தலையீடுகள் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

அறிவாற்றல் செயல்பாட்டைப் பாதுகாப்பதில் உணர்ச்சி தூண்டுதலின் திறனை ஆராய, யாசா மற்றும் அவரது குழு 20 பங்கேற்பாளர்களை உள்ளடக்கி ஒரு ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு ரோஜா, ஆரஞ்சு, யூகலிப்டஸ், எலுமிச்சை, மிளகுக்கீரை, ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் போன்ற நறுமணங்கள் கலந்த இயற்கை எண்ணெய் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது.

மற்றொரு குழு குறைந்த வாசனையுள்ள ஒரு போலியான அல்லது செயற்கை வாசனைப் பொருட்களைப் பெற்றது.

ஆறு மாதங்களுக்கும் மேலாக, பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு இரவிலும் இரண்டு மணி நேரம் தங்கள் அறைகளில் இந்த வாசனைகளை பரவச்செய்வதற்கு ஒரு டிஃப்பியூசர் சாதனத்தை பயன்படுத்தினர். சோதனைக் காலத்திற்கு முன்னும் பின்னும் நினைவாற்றல், வாய்மொழி கற்றல், திட்டமிடல் மற்றும் கவனத்தை மாற்றும் திறன்களை மதிப்பிடுவதற்கு நரம்பியல் உளவியல் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டன.


வாசனைகள் மூலம் (நியூரோபிளாஸ்டிசிட்டி) நரம்பியல் இலகுத்தன்மையை ஆராய்தல்

குறிப்பாக விலங்கு இராஜ்ஜியத்தில், அறிவாற்றல் நரம்பியலைத் தூண்டுவதற்கு சூழலை செறிவுப்படுத்துவது என்பது புதியதல்ல. பல்வேறு ஆய்வுகள், விலங்குகளின் சூழலில் குறிப்பாக மனித நரம்பியல் கோளாறுகளுக்கு ஒத்த அறிகுறிகளை வெளிப்படுத்தும். உயிரினங்களில் வாசனையை அறிமுகப்படுத்துவது நரம்பியல் இலகுத்தன்மையை மேம்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த்தியுள்ளன.

இந்த அவதானிப்பே, மனிதர்களிலும் கூட, ஒரு சிக்கலான சூழ்நிலையை "வாசனை-வெளியீட்டிலிருந்து" பயனடைய வைக்கமுடியும் என்ற எண்ணத்திற்கான கதவைத் திறந்தது.

சுவாரஸ்யமாக, வாசனை (நறுமணம்) திறன் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதையும் நறுமணம் நரம்பியல் செயல்பாடுகளில் ஒரு ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதையும் உறுதிசெய்கிறது.

அப்புறம் என்னங்க..தூங்கும்போது நல்ல வாசனை அறைக்குள் பரவும் விதமாக ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். மூளை செயல்பாட்டை உற்சாகப்படுத்துங்கள்.

Updated On: 4 Aug 2023 7:05 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  சாலை விபத்தில் பெண் பலி உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
 3. குமாரபாளையம்
  அகில இந்திய மல்யுத்த போட்டி: குமாரபாளையம் பயிற்சியாளர் நடுவராக
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
 5. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு
 6. ஈரோடு மாநகரம்
  ஈரோடு கனி மார்க்கெட் மீண்டும் செயல் பட தொடங்கியதால் மகிழ்ச்சியில்...
 7. தென்காசி
  தென்காசியில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு
 8. சினிமா
  நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக கணவர் போனி கபூர் மீண்டும் சர்ச்சை
 9. தென்காசி
  தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய பொதுமக்கள்
 10. ஆலங்குளம்
  மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை