தினமும் தர்பூசணி சாப்பிடுங்கள்.. ரத்த அழுத்த அளவை குறையுங்கள்...

தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பலன்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தினமும் தர்பூசணி சாப்பிடுங்கள்.. ரத்த அழுத்த அளவை குறையுங்கள்...
X

தர்பூசணி. (மாதிரி படம்).

கோடைகாலத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அனைவருக்கும் நீர்ச்சத்து தேவைப்படுகிறது. பழங்களின் இயற்கையாகவே நீர்சத்து அதிகம் உள்ள பழம் தர்பூசணி பழம் தான். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தர்பூசணி பழம் இருந்தற்கான ஆதாரமாக, அதன் விதைகள் லிபியாவில் கண்டறியப்பட்டு உள்ளது. நமது இந்தியாவைப் பொறுத்தவரையில், ஏழாம் நூற்றாண்டில் இது பயரிடப்பட்டதாக பதிவுகள் உள்ளன.

பழங்களில் சிறப்பு வாய்ந்த தர்பூசணி குறித்தும் அதில் உள்ள சத்துக்கள், மருத்துவக் குணங்கள் குறித்தும் உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை காண்போம்:

தர்பூசணியில் புதிய பழங்கள் (Fresh Fruits), சுத்திகரிக்கப்படாத பழங்கள் மற்றும் மேற்பரப்பு சுத்திகரிக்கப்பட்ட பழங்கள் ஆகிய இரண்டு வகைகளிலும் தர்பூசணி பழத்தினை இணைத்து FSSAI வகைப்படுத்தியுள்ளது. மாம்பழத்திற்கு உள்ள செயற்கை முறை பழுக்க வைத்தலின் கட்டுப்பாடுகள், மேற்பரப்பு வேக்ஸ் பூச்சு மற்றும் புதிய பழங்களுக்குள்ள உணவுச் சேர்மம் கட்டுப்பாடுகள் தர்பூசணி பழத்திற்கும் பொருந்தும்.

தர்பூசணி பழ ஜூஸில் சிட்ரிக் அமிலம் அதிகபட்சமாக 3.5% இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. தர்பூசணியின் விதைகளிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கவும், அதற்கு தரங்கள் நிர்ணயித்தும் FSSAI அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தர்பூசணி பழத்தின் உட்சதை சிவப்பு, பிங்க், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறத்திலும் உண்டு.

நூறு கிராம் தர்பூசணியில் 30 Kcal எரிசக்தியும், நீர்ச்சத்து 91.45 கி, மொத்த கொழுப்பு 0.15 கி, மொத்த கார்போஹைட்ரேட் 7.5 கி, அதில், நார்ச்சத்து 0.4 கி, புரதம் 0.61 கிராம் என்ற அளவிலும் உள்ளது. நூறு கிராம் தர்பூசணியில் கால்சியம் 7 மிகி (தினசரி தேவையில் 1%), மெக்னீசியம் 10 மிகி (தினசரி தேவையில் 3%), மாங்கனீஸ் 0.04 மிகி (தினசரி தேவையில் 2%) மற்றும் பொட்டாசியம் 112 மிகி (தினசரி தேவையில் 2%) என்ற அளவில் உள்ளது.

நூறு கிராம் தர்பூசணியில் வைட்டமின் - ஏ 28 மைகி (தினசரி தேவையில் 4%), வைட்டமின் - சி 8.1 மிகி (தினசரி தேவையில் 10%), வைட்டமின்-பி6 0.045மிகி (தினசரி தேவையில் 3%) மற்றும் வைட்டமின்-பி5 0.221 மிகி (தினசரி தேவையில் 4%) என்றளவில் உள்ளது. நமது உடலின் நீர்ச்சத்தினைப் பராமிரிக்க தர்பூசணி உதவுகின்றது.

தர்பூசணியில் உள்ள சிட்ருலின் உடற்பயிற்சி திறனை அதிகரிக்க உதவுகின்றது. தர்பூசணியில் உள்ள Lycopene (4532 மைகி/100 கி) பெருங்குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பினைக் குறைக்கின்றது. தர்பூசணியில் உள்ள Lycopene ரத்தத்தில் கொழுப்பைக் குறைத்தும், ரத்த அழுத்தத்தை குறைத்தும், இதயத்தின் செயல்பாட்டினை சீர்படுத்துகின்றது.

தர்பூசணியில் உள்ள Lycopene மற்றும் வைட்டமின்-சி-ன் மூலம் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி குணமும் இதற்கு உண்டு. தர்பூசணியில் உள்ள Lycopene, வயது ஆவாதால் ஏற்படக்கூடிய தசை சீரிழிவினால் உருவாகும் பார்வையிழப்பைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தர்பூசணியில் உள்ள நீர்ச்சத்து மற்றும் சிறிதளவு நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுகின்றது என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 May 2023 4:36 AM GMT

Related News

Latest News

 1. திருப்பூர் மாநகர்
  விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
 2. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 3. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 4. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 5. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
 6. சினிமா
  Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...
 7. தூத்துக்குடி
  முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
 8. லைஃப்ஸ்டைல்
  egg shell powder uses-முட்டை ஓட்டு பொடியில் இவ்ளோ நன்மைகளா..? இனிமேல்...
 9. சினிமா
  விஜய் டிவி பிரபலத்தைக் காதலிக்கிறாரா சீரியல் நடிகை ரவீனா?
 10. நாமக்கல்
  சேந்தமங்கலம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ரூ.52.86 லட்சம் மதிப்பில்...