டிராகன் பழத்திலுள்ள சத்துகள் பற்றி உங்களுக்குதெரியுமா?......

dragon fruit in tamil நாம் அன்றாடம் ஏதாவது ஒரு பழ வகையினை கட்டாயம் சாப்பிடவேண்டும். ஏனெனில் பழங்கள் ஒவ்வொன்றிலும் தாதுச்சத்துகள் மிகுந்துள்ளன. அந்த வகையில் டிராகன் பழத்திலும்ஏராளமான சத்துகள் உள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
டிராகன் பழத்திலுள்ள சத்துகள் பற்றி உங்களுக்குதெரியுமா?......
X

நம் உடலுக்குஆரோக்யத்தைத் தரும் டிராகன் பழம்  (கோப்பு படம்)

dragon fruit in tamil


மருத்துவ குணம் அதிகம் கொண்ட டிராகன் பழம் சாகுபடி (கோப்பு படம்)

dragon fruit in tamil

இந்தப் பழம் பொதுவாக ஆங்கிலத்தில் டிராகன் புரூட் என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் ஆசிய மொழிகளில் இதை அழைப்பதில் இருந்து வந்தது. இது இந்தோனேசிய மொழியில் இலக்கியத்தில். டிராகன் பழம், கெமர் மொழியில் டிராகன் அளவு தாய்லாந்து மொழியில் லாவோ வியட்நாம் மொழியில்பச்சை டிராகன் சீன மொழியில் நெருப்பு டிராகன் பழம்அல்லது டிராகன் முத்துப் பழம்.இது மெக்சிகோவைச். சேர்ந்ததாகக் கருதப்படுகிறது அங்கிருந்து நடு அமெரிக்காவுக்குப் பரவி பின் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இவை கிழக்கு ஆசியா, தென் கிழக்காசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து, சீனா, மலேசியா, வியட்நாம், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, அண்மைக்காலமாக வங்கதேசம், மேலும் இவை ஓக்கினாவா மாகாணம், ஐக்கிய மாகாணம், இஸ்ரேல், வடக்கு ஆஸ்திரேலியா, தெற்கு சீனா, சைப்பிரஸ், கேனரி தீவுகள் ஆகிய பகுதிகளில் விளைகின்றன.

இந்தப்பழத்தை உலகம் முழுக்கப் பரப்பியவர்கள் ஐரோப்பியர்களே.தைவானுக்கு இந்தப்பழத்தை அறிமுகப்படுத்தியவர்கள் ஒல்லாந்தர்கள்.இதன் பூக்கள் இரவு நேரத்தில் பூக்கும். இரவில் பூக்கள் பூப்பதால் இதை "இரவு ராணி" என்று அழைப்பர். வழக்கமாக பழம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும், இந்தப் பழத்தை மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலும் காணலாம். இந்த பழத்தில் பச்சை செதில்கள் போல் அமைப்பு உள்ளது. பழத்தின் மையத்தில், இனிப்பான கொழகொழப்பான சதையும் அதில் சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை ஒரு அலங்காரச் செடியாகவும் தோட்டங்களில் வளர்ப்பர். இது கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம் ஆகும்.

dragon fruit in tamil


மார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதால் இதனை பலரும் முன்வந்து சாகுபடி செய்கின்றனர் (கோப்பு படம்)

dragon fruit in tamil

டிராகன் பழமானது நம் ஆரோக்யத்துக்கு பெரிதும் துணைபுரிகிறது. ரத்த சோகையால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் ரத்த சர்க்கரைநோயால் பாதிக்கப்ட்டவர்களுக்குஇப்பழம் ஒரு அருமருந்து. பல ஊட்டச்சத்து நிறைந்த டிராகன் பழத்தினைப் பற்றிப்பார்ப்போம்.

இது முட்கள் நிறைந்த பழமாக உள்ளது.பெரும்பாலும் எல்லா மாவட்டங்களிலும் கடைகளில் எளிதில் கிடைக்கும் பழந்தான் டிராகன் பழம். இளஞ்சிவப்பு நிறத்தில் பச்சை மஞ்சள் நிற முட்களோடு காணப்படும். இப்பழத்தின் உட்புறம் வெள்ளை சதைகளில் கருப்பு நிற விதைகள் கொண்டு காணப்படக்கூடியது.இந்த பழம் சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி ஆரோக்யமான பழம் மற்றும் சுவையுடையது. சராசரியாக ஒரு பழம் 700 முதல் 800 கிராம் எடைகொண்டது.

உலகில் வெப்பமண்டலப்பகுதிகளில் இந்த ட்ராகன் ப்ரூட் விளைகிறது.ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. உடம்பிற்கு இப்பழமானமிகுந்த குளிர்ச்சியை தரக்கூடியது.

dragon fruit in tamil


டிராகன் பழத்தின் ஒரு வகையில் உட்புறச் சதைப்பகுதி வெள்ளையாகவும்விதைகள் கறுப்பாகவும் உள்ளன(கோப்பு படம்)'

dragon fruit in tamil

டிராகன் பழமானது 150 கிராம் முதல் 600 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஒரு பழத்தில் 60 சதவீதத்தினை மட்டும் நாம் உண்ணலாம். இப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆக்சிஜனேற்ற பண்புகள் ,தாதுக்கள் அதிகம் உள்ளன.

100 கிராம் டிராகன் பழத்தில் உள்ள சத்துகளின் விபரம்

கலோரிகள் - 60,கார்போஹைட்ரேட்டுகள் - 9கிராம்,நார்ச்சத்துக்கள் - 1.5 கிராம்,கொழுப்பு - 2 கிராம்,புரதம் - 2 கிராம் என சத்துகள் அடங்கியுள்ளன,

ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள இப்பழத்தினை உண்பதால் நோய்களை எளிதில் விரட்ட உதவுகிறது.​உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.உங்க தொப்பையை குறைக்கவும் உங்க எடை இழப்பு பயணத்திற்கும் டிராகன் பழம் உதவுகிறது. டிராகன் பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன. இதை நீங்கள் வேண்டுமானால் சிற்றுண்டியாக கூட எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு பசியை போக்கி வயிறு நிரம்பிய முழுமையான உணர்வை தருகிறது. இது உங்க எடை இழப்புக்கு உதவி செய்யும்.

டிராகன் பழம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகை நோயைத் தடுக்க உதவுகிறது. ரத்த சோகை ஏற்படுவதால் பல பிரச்னைகளை கர்ப்பிணிகள் சந்திக்க நேரிடுகிறது.

dragon fruit in tamil


டிராகன் பழத்தின் மற்றொரு வகையில் உட்புறச் சதைப்பகுதி சிவப்பாகவும் கருப்புவிதைகளும் (கோப்பு படம்)

dragon fruit in tamil

கர்ப்ப காலத்தில் ரத்தசோகைக்கு மாற்று சிகிச்சை மருந்தாக டிராகன் பழச்சாறு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணிகள் இப்பழத்தினை உண்பதற்கு முன்பாக அவர்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் முன் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நல்லது.நாள்பட்ட அழற்சி நோயான கீல்வாதம் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டுளள்வர்கள்இப்பழத்தினை உண்ணலாம். டிராகன் பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் மூட்டுகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலியிலிருந்து விடுவிக்கும்.மேலும் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

இப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் நிறைந்து காணப்படுகிறது. தோல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்க இது பெரிதும் பயன்படுகிறது. நம் உடம்பில் தோல் சுருக்கத்தினைப் போக்கவும், முகங்களில் ஏற்படும் முகப்பருக்களைக் குணப்படுத்தவும், இதுபெரிதும் பயனளிக்கிறது. இப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் சேதமடைந்த தோல் செல்களை சரி செய்ய உதவும். இளமை தோற்றத்தினை மாறாமல் வைத்திருக்கவும் இப்பழம் உதவுகிறது.

மேலும் டிராகன் பழமானது ரத்த சர்க்கரை அளைவை இயல்பாக்க உதவுவதால் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் இதனைப் உண்ண பயன்படுத்தலாம் என டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக் க இது உதவுகிறது.

dragon fruit in tamildragon fruit in tamil

இப்பழத்தில் உள்ள வைட்டமின் சி அளவால் புற்றுநோயைத்தடுக்க உதவுகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோயைத்தடுக்கும் ஆற்றலையும் இது கொண்டுள்ளது. டிராகன் பழத்தில் காணப்படும் லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் புற்றுநோயை உருவாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்க உதவுகிறது. , மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் தடுப்பிலும் டிராகன் பழ சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய்களிலிருந்து உங்களை தள்ளி வைக்கவும் உதவுகிறது.

டிராகன் பழத்தின் மிகப்பெரிய ஆரோக்கிய நன்மைகளில் ஒன்று இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 100 கிராம் டிராகன் பழத்தில் சுமார் 2.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது தினசரி மதிப்பில் 11% ஆகும்.குடல் ஒழுங்குமுறைக்கு பங்களிக்கும். இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது.

டிராகன் பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. காய்ச்சல் மற்றும் பொதுவான சளி ஆகியவற்றை தடுக்கிறது. பாக்டீரியா மற்றும் கிருமிகள் போன்ற வெளிநாட்டு படையெடுப்பாளர்களுக்கு எதிராக உங்கள் உடலைப் பாதுகாக்கும் திறனை மேம்படுத்துகிறது.

டிராகன் பழமானது இதய பாதிப்பு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.அவர்களுடைய இதய ஆரோக்யத்தினை மேம்படுத்த உதவுகிறது. .பழத்தின் விதைகள் உடலுக்கு தேவையான ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களை அளிக்கின்றன. அவை இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான அமிலங்கள். இது தமனிகளை கொழுப்பு படிவிலிருந்து காத்து சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இரத்தம் இதயத்திற்கு மற்றும் வெளியே உறுப்புகளுக்கும் சரியாக ஓட அனுமதிக்கிறது.மற்ற பழங்களைப் போலவே நீங்கள் டிராகன் பழத்தை பச்சையாக சாப்பிடலாம். .

Updated On: 24 Dec 2022 12:02 PM GMT

Related News

Latest News

 1. தஞ்சாவூர்
  தஞ்சையில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி
 2. தமிழ்நாடு
  அரிசிக்கொம்பனை மூர்க்கமாக்கியது யார்...?
 3. தஞ்சாவூர்
  தஞ்சை மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
 4. தமிழ்நாடு
  விற்பனை வாகன அங்காடி: மாற்றுத்திறனாளிக ளுக்கு மாவட்ட நிர்வாகம்...
 5. உலகம்
  வெறுங்கையை வீசிக்கிட்டு போய் இனி பொருள் வாங்கலாம்
 6. உலகம்
  27 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் உலக அழகி போட்டி
 7. இந்தியா
  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்
 8. தமிழ்நாடு
  புதுக்கோட்டையில் ”சிறுதானிய உணவகம்” அமைக்க ரூ 5 லட்சம் ஒதுக்கீடு
 9. வந்தவாசி
  பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து...
 10. நாமக்கல்
  நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வருகிற 15ம் தேதி சமரச பேச்சுவார்த்தை...