/* */

ஆரோக்ய வாழ்க்கை வாழவேண்டுமா? டாக்டர்- கேள்வி பதில்- பகுதி 4

dr question and answers, about health

HIGHLIGHTS

ஆரோக்ய வாழ்க்கை வாழவேண்டுமா?  டாக்டர்- கேள்வி பதில்- பகுதி 4
X

ஆரோக்யம் குறித்த  டாக்டர் கேள்வி-பதில்  .....

dr question and answers, about health

நாகரிக உலகில் தினந்தோறும் பரபரப்பான வாழ்க்கை முறைதான் தற்போது அனைவருக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் இதில் பலர் நேரத்திற்கு தங்களுடைய உணவினை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் வேலை .,.வேலை என நேரத்தினைக் கடத்திவிட்டு பின்னர் பசியாறிய பின் உணவினைத் திணிப்பார்கள். இதனால் அவர்களுடைய உடல் ஆரோக்யம் கெடுகிறது. இதுபோல் பல பிரச்னைகளினால் உடல் ஆரோக்யமானது கெட்டுவிடுகிறது.

நமக்கு ஏற்படும் உடல் ஆரோக்ய ரீதியான சந்தேகங்களை அனுபவம் வாய்ந்த டாக்டர்களின் கேள்வி-பதில் மூலம் அனைவரும் அறிந்துகொள்ளலாமா? வாங்களேன்...

dr question and answers, about health


dr question and answers, about health

*கே:நன்றாக பசி எடுக்கிறது? ஆனால் சாப்பிட முடியவில்லையே ஏன்?

*ப:நன்றாகப் பசி எடுத்துச் சாப்பிட முடியவில்லை என்றால் உளவயக் கோளாறாக இருக்கலாம். அல்லது சமைத்த உணவு மணத்துடனும் சுவையுடனும் இல்லாமல் இருக்கலாம். அல்லது மிகையாக மது அருந்தியதால் நாட்பட்ட இரைப்பை சுழற்சியாக க்ரோனிக் கேஸ்ட்ரிக்ஸ் இருக்கலாம்.

dr question and answers, about health


dr question and answers, about health

*கே:அடிக்கடி சோப்புகளை மாற்றுவதால் தோல் நோய் வருமா?

*ப:வரலாம். சோப்பிலிருக்கும் ரசாயனப் பொருட்கள் சோப்புக்கு சோப் மாறுபடுகின்றது. இதனால் ஒவ்வாமை காரணமாக அடிக்கடி சோப்புகள் மாற்றும்போது தோல் நோய் வர வாய்ப்பிருக்கிறது.

dr question and answers, about health


dr question and answers, about health

*கே:கால்களில்குடைச்சல் ஏற்படக் காரணம் என்ன?

*ப:காலில்குடைச்சல் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன.நீண்ட நேரம் படுத்திருந்து பின்னர் எழுந்திருக்கும் போது நீரிழிவு நோயின் நரம்புத் தளர்ச்சியின் போது தொழு நோயாளிகள் கால் நரம்புகள் பாதிக்கப்படும்போத மிகையான உடற்பயிற்சியின் பின் ஏராளமாக வியர்க்கும் போது காலரா சீத பேதியின் போது கால்சியம் மற்றும் மெக்னீசியம் குளோரைடுகள் ஆகியவை குறையும்போது சுரங்கத் தொழிலாளர்கள் நின்று கொண்டே பணியாற்றும்போது அதிகமான வெப்ப நேரங்களில் வெப்பத் தசைச் சுருக்கங்களின்போது,

*கே:உடல்வலிக்கு உடல் மேல் ஏறி மிதிப்பதால் இது தவறா டாக்டர்?

*ப:நிச்சயமாகத் தவறுதான். உடல்வலி, முதுகுவலி, போன்ற தொந்தரவுகளைச் சரி செய்ய சிலர் இவ்வாறு உடல் தசைகளை அமுக்கி விடச்சொல்கிறார்கள். இதனால் கழுத்து வலி போய் திருகுவலி வந்த கதைதான் பெரும்பாலும் ஏற்படும். மாறாக உடல் வலியைப் போக்க முறைப்படி மசாஜ் செய்ய வேண்டும். அவ்வாறுஇயன்முறை மருத்துவத்தைப் பின்பற்ற வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் தினமும் அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்தால் எல்லா வலிகளும் மறைந்து போகும்.

dr question and answers, about health


dr question and answers, about health

*கே:பற்களில் வலி இல்லாமல் ரத்தம் வருவது எதனால்?

*ப:பற்களில் வலி எதுவுமின்றி ரத்தம் வெளிப்பட்டால் அது பல்லின் ஈறுகளில் இருந்து வெளிப்படுவதாகும். பொதுவாக வைட்டமின் சி பற்றாக்குறையின் ஸ்கர்வி வியாதியில் இத்தகைய நிலை தோன்றலாம்.

*கே:காலையில் உடற்பயிற்சி செய்யும் முன்பு காலைக் கடனை முடிக்க வேண்டும் என்கிறார்களே? உண்மையா?

*ப:உண்மையில் உடற்பயிற்சி செய்த பின்னரும் காலைக்கடன்களை முடிக்கலாம்.தவறில்லை.

*கே:தலைக்கனம் எதனால் உண்டாகிறது?

*ப:Heaviness of the Head.இது தலைவலியின் அறிகுறியாகும். உட்கபால அழுத்தம் அதிகரிக்கும்போது தலைப்பாரம் உண்டாகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியா, அடிப்பட்ட காயம் போன்றவற்றால் மூளையோ மூளை உறைகளோ சுழற்சியடையும்போது உட்கபால அழுத்தம் அதிகரிக்கிறது. கண் மற்றும் காது, கழுத்து நரம்புகள் பாதிக்கப்படும்போதும், இந்நிலைஉண்டாகிறது. காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சையளித்தால் குணம் கிடைக்கும்.

*கே:பூனை வளர்ப்பதால் நமக்கு நோய் தொற்று வருமா?

*ப:பிளேக் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. பூனைக்கு முறைப்படி தடுப்பூசி போட்டுக் கொண்டால் இந்த நோய் வராது.

*கே:உடம்பில் ஊரல் உண்டாவது ஏன்?

*ப: சுத்தமின்மை,ஒவ்வாமை, தோல்நோய்கள், மற்றும் பல்லாண்டுகளாக இருந்து வரும் சர்க்கரை நோய் போன்ற பல காரணங்கள் கொண்டு உடலில் ஊரல் ஏற்படலாம்.

dr question and answers, about health


dr question and answers, about health

*கே:சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது,? அறிகுறிகள் என்ன?

*ப:இன்சுலின் என்ற இயக்குநீர் தேவையான அளவுக்குச் சுரக்காத போதும் குறைந்த அளவில் சுரக்கும் .இன்சுலின் முழுமையாகச்செயல்படாத போதும் சர்க்கரை நோய் வருகிறது. இதற்குப் பரம்பரை அம்சம், அதிக உடல் எடை, உழைப்பின்மை, போன்றவை முன் காரணிகளாகச் செயல்படுகின்றன.அகோரப் பசி, உடல் எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் பிரிதல், சோர்வு, அரிப்பு போன்றவை சர்க்கரை நோய்க்குரிய அறிகுறிகளாகும்.

*கே:செபோரிக் அலர்ஜி என்றால் என்ன?

*ப:செபோரியா என்பது ஒரு தோல்வியாதியாகும். வியர்வைச் சுரப்பிகள் மிகையாகப் பணிபுரிவதால் சீபம் எனப்படும் எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது. இதனால் சருமத்தில் வெண்மையான படைகள் தோன்றுகின்றன. இதன் விளைவால் சிலருக்கு ஒவ்வாமை உண்டாகிறது. இதையே செபோரிக் அலர்ஜி என்கிறோம்.

dr question and answers, about health


dr question and answers, about health

*கே:நாம் அழும்போது கண்கள் சிவந்து வீங்குவது எதனால்?

*ப:நாம் அழும்போது உணர்ச்சி வசப்படுகிறோம். இதனால் கண்ணுக்கு வரும் ரத்தநாளங்கள் அதீதமாக விரிவடைகின்றன. கண்ணுக்கு ரத்த விநியோகம் அதிகரிக்கிறது. இதனால் கண்கள் சிவக்கின்றன. அத்தோடு கண்ணீர்ச் சுரப்பிகளும் துாண்டப்பட்டு கண்ணீர் வெள்ளமாகப் பெருகுகிறது. இதனால் கண்கள் வீங்கியுள்ளது போல் தெரிகிறது.

*கே:தாய்க்கு நோய் எதிர்ப்பு இல்லாவிட்டால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு நோய் தடுப்பாற்றல் கிடைக்குமா?

*ப:குழந்தைக்கு மிகச் சிறந்த உணவு தாய்ப்பாலே ஆகும். ஏனெனில் அதில் நோய் எதிர்ப்புப் பொருள்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. தாயின் உள, உடல் நலமும், எதிர்ப்புச் சக்தியும்,உடலில் சுரக்கும் ஹார்மோன்களையும், பொருத்து. தாய்ப்பால் போதுமான அளவில் சுரக்கிறது. உடல், உளநலம் பாதிக்கப்பட்டால் பால்சுரப்பும் பாதிக்கப்படுகிறது. குழந்தையின் தடுப்பாற்றலும் பாதிக்கப்படுகிறது.

*கே:வாய் பேசாதவர்களுக்கு காது தெளிவாக கேட்கிறது ஏன்?

*ப: பொதுவாக காது சரியாக கேட்காதவர்கள்தான் வாய் பேச முடியாதவர்களாகவும் இருப்பார்கள். இதற்குக் காரணம் காது மற்றும் காது உள்ளெலும்புகள் இவர்களுக்கு சரியாக வளர்ச்சியடைந்திருக்காது. அல்லது செவியையும் மூளையையும் இணைக்கிற செவி நரம்பு வேலை செய்யாது. வழக்கத்தில் நம்முடைய வளர்ச்சிப் பருவத்தின் போது காதினால் கேட்பவைதான் மூளையில் பதிந்து மெய்யறிவாகி வாயினால் வார்த்தைகளை உச்சரிக்க வைக்கின்றனர். மூளைக்கு அறிவைத் தருவதே காதுகள்தான். இதனால்தான் காது செவிடானவர்கள் ஊமைகளாகவும் உள்ளனர்.

*கே:நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

*ப:நீர்க்கடுப்பு என்பது செறிவடைந்த சிறுநீர் வெளிப்படும்போது உண்டாகிறது. இந்த நிலை பெரும்பாலும் கோடைக்காலங்களில் நீரிழப்பு உண்டாவதால் சிறுநீர் செறிவடைந்து அதன் ஒப்பு அடர்வு எண் 1020 க்கும் மேல் உயருகிறது. அப்போது சிறுநீரின் நிறமும் மாறி எரிச்சலை உண்டாக்கி நீர்க்கடுப்பை உண்டாக்குகிறது.

நன்றி:டாக்டர். மாணிக்கவேல்.

Updated On: 28 Dec 2022 5:08 PM GMT

Related News