நீண்ட காலம் இந்த பூமியில் வாழ ஆசையா? அப்போ, நுரையீரலை பலப்படுத்துங்க... ப்ளீஸ்

நீங்கள் சுவாசித்தால் மட்டுமே உயிர்வாழ முடியும். அந்த சுவாசத்துக்கு ஆதாரமாக இருப்பது நுரையீரல்தான். அந்த நுரையீரலை பாதுகாக்க, பலப்படுத்த இந்த ஐந்து மூலிகைகள் உதவுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நீண்ட காலம் இந்த பூமியில் வாழ ஆசையா? அப்போ, நுரையீரலை பலப்படுத்துங்க... ப்ளீஸ்
X

எளிமையான இந்த மூலிகைகளை எடுத்துக்கொண்டால், நுரையீரலை பாதுகாக்கலாம்.

உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை ஆகியவை நம்முடைய நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும். ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் சுவாசம் என்பது மிக முக்கியம். நாம் உயிர்வாழத் தேவையான ஆக்சிஜனை பம்ப் செய்து நம்முடைய உடலுக்குக் கொடுப்பது தான் நுரையீரலின் முதன்மையான வேலை. இந்த நுரையீரல் ஆரோக்கியமான இருந்தால் தான் உடல் இயக்கம் சீராக இருக்கும். நோய் எதிர்ப்பு மண்டலமும் உறுதியாக இருக்கும். அதனா்ல நுரையீரல் பலமாக இருக்க இந்த மூலிகைகளை கட்டாயம் நம்முடைய தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

மோசமான நுரையீரல் இருமல், சளி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்கும் துளசி உதவியாக இருக்கிறது. ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை அறிவியலைக் குறிக்கிறது.

​நுரையீரலை பலப்படுத்தும் துளசி


பெரும்பாலான வீடுகளில் தொட்டிகளில் வளர்க்கப்படும் முக்கியமான மூலிகைகளில் ஒன்று இந்த துளசி.

இந்த துளசியில் அதிக அளவிலான ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள், ஜிங்க் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன. இது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

துளசி பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கிறது. இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் சுவாச மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.

மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, காய்ச்சல், இருமல் மற்றும் சளி ஆகியவற்றில் துளசி இலைகளின் சாறு தேனுடன் கலந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்தத்தை சுத்திகரிக்கச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

​நுரையீரலை பலப்படுத்தும் அதிமதுரம்


தொண்டை புண், இருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற ஒரு சிறு துண்டு அதிமதுரப் பட்டையை வாயில் போட்டு மெல்லுவார்கள்.

ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா மற்றும் பல நாள்பட்ட நோய்களில் இருந்தும் இந்த அதிமதுரம் நிவாரணம் அளிக்கும்.

அதிமதுரப் பட்டையில் உள்ள வேரில் கிளைசிரைசின், டானின்கள் ஆகியவை நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்க உதவுவதோடு, நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் அதிலிருந்து மீளவும் உதவுகிறது.

​நுரையீரலை பலப்படுத்தும் சுக்கு பொடி


சுக்கு பொடியில் நம்முடைய உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

சுக்கில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளான ஜிஞ்சரோல்ஸ் மற்றும் ஷோகல்ஸ் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

பல்வேறு காரணங்களால் ஏற்படும் இருமலில் இருந்து விரைவான நிவாரணம் அளிக்கும். இந்த சுக்குப் பொடியை வெதுவெதுப்பான நீர் அல்லது தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.

​நுரையீரலை பாதுகாக்கும் திப்பிலி


சளி மற்றும் இருமல் போன்ற தொற்றுக்களால் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்கிற சிறந்த மூலிகை என திப்பிலியை சொல்லலாம். நம்முடைய சுவாச மண்டலத்துக்கு திப்பிலி ஒரு வரப்பிரசாதம் என்று ஆயுர்வேதம் சொல்கிறது.

திப்பிலியில் உள்ள பைபரின் என்னும் பொருள் நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதோடு கார்மினேட்டிவ் மற்றும் தொற்று எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கிறது.

இந்த திப்பிலியை பொடி செய்து அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி செய்து வருவதால் தொண்டையில் ஏற்படும் அழற்சி உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்ய உதவுகிறது. இது ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் சுவாசக்குழாய் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

​நுரையீரலை பாதுகாக்கும் தான்றிக்காய்


தான்றிக்காய் திரிபலாவில் உள்ள மூன்று பொருள்களில் ஒன்றாகும். இதிலுள்ள எலாஜிக் அமிலம், டானின்கள் மற்றும் ஃபிளவோன்கள் உள்ளிட்ட பல ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டிருக்கின்றன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துலதோடு அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொ்ணடிருக்கிறது.

இருமலுக்காக கடைகளில் வாங்கும் பெரும்பாலான மருந்துகளில் இந்த தான்றிக்காய் மிக முக்கியமானதொரு உட்பொருளாகும். இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணியாகச் செயல்படுகிறது.

தினமும் சிறிதளவு தான்றிக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட்டு சிறிது நேரம் பிரணாயாமம் செய்தால் நுரையீரலில் எந்தவித அடைப்பு, சளி மற்றும் தொற்றுக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

இவற்றை எல்லாம் விட மிக முக்கியமானது, நுரையீரலை பாதுகாக்க முதலில் செய்ய வேண்டியது, புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை விட்டு விடுவதுதான். ஏனெனில், சிகரட், பீடி புகைப்பவர்களால், முதலில் பாதிக்கப்படுவது அவர்களது நுரையீரல்தான். எனவே, புகை பிடிப்பதை தவிர்த்து, நுரையீரலை பாதுகாத்து கொள்வதும் மிக மிக முக்கியம்.

Updated On: 5 Sep 2022 1:43 PM GMT

Related News

Latest News

 1. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா
 2. ஈரோடு மாநகரம்
  150 பவுன் நகைகளைத் திருடிய ஆந்திர இளைஞர் ஈரோட்டில் கைது
 3. ஈரோடு மாநகரம்
  ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
 4. தேனி
  கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை இடிப்பதை கண்டித்து...
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க...
 6. தஞ்சாவூர்
  கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 2.60 கோடி: ஆட்சியர் தகவல்
 7. முசிறி
  தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை...
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு...
 9. இந்தியா
  GST collection- இந்தியாவில், செப்டம்பா் மாத சரக்கு-சேவை (ஜிஎஸ்டி) வரி...
 10. சினிமா
  Akshaya யார் இந்த அக்ஷயா உதயகுமார்?