நீங்க உணவில் அடிக்கடி நெய் சேர்த்துக்குவீங்களா... அப்போ, இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கணும் !

நம்மில் பலரும் விரும்பி உணவில் சேர்த்து சாப்பிடும் நெய்யை நாம் பயன்படுத்தும் முறை சரியா, எப்படி பயன்படுத்த வேண்டும், யாரெல்லாம் நெய் சாப்பிடக் கூடாது என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நீங்க உணவில் அடிக்கடி நெய் சேர்த்துக்குவீங்களா... அப்போ, இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கணும் !
X

நெய் சாப்பிட்டால் குண்டாயிடுவோம்ன்னு பயமா இருக்கா உங்களுக்கு...? 

இந்திய பாரம்பரிய உணவுகளின் இடத்தில் நெய்க்கு மிக முக்கிய இடமுண்டு. இனிப்பு வகைகள் தொடங்கி. அன்றாட சமையல், சருமம், தலைமுடி என எல்லாவற்றிலும் நெய்யின் பயன்பாடு இருந்திருக்கிறது. ஆனால் சமீப காலங்களில் நெய் சாப்பிட்டால் எடை கூடும். கொலஸ்டிரால் அதிகரிக்கும் என சொல்லப்படுகின்றன. அதற்கான காரணம் என்ன, நாம் நெய்யை பயன்படுத்தும் முறை சரியானது தானா என, தெரிந்து கொள்வோம்.


நெய் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவர்களை சாப்பிட வைக்க மிகச்சிறந்த மந்திரமே நெய் தான். எந்த உணவாக இருந்தாலும் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொண்டால் அந்த உணவின் சுவை கூடிவிடும். அதன் வாசனையிலே இன்னும் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம்.

இரவில் நெய் சாப்பிட கூடாது

மதிய உணவில் அரை டீஸ்பூன் அளவுக்குச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. சாப்பாட்டின் முதல் கைப்பிடி எடுக்கும்போது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட வேண்டும். இதனோடு கட்டாயமாக உப்புச் சேர்க்க வேண்டும். உப்பில்லாமல் நெய் மட்டும் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. அதேபோல உணவு முழுக்க நெய் சேர்க்கத் தேவையில்லை. முதல் கைப்பிடி உணவில் மட்டும் நெய் இருந்தால் போதும்.


எண்ணெய்க்கு பதிலாக, நெய் ஊற்றி தோசை செய்தால் மிக மிகக் குறைந்த அளவில் தான் நெய் சேர்க்க வேண்டும். அதேபோல மதிய உணவில் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு உணவில் சேர்த்தால், செரிமானமாக தாமதமாகும். சூடாக சமைத்த உணவில் மட்டுமே நெய் சேர்க்க வேண்டும். சூடு இல்லாத ஆறிப்போன உணவுகளில் நிச்சயம் நெய்யை கலக்கக் கூடாது.

​கொழுப்புச்சத்து உணவுகள்

பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவில் நெய் சேர்த்துக் கொடுப்போம். அது சுவைக்காகவும் குழந்தைகளை சாப்பிட வைக்கவும் மட்டுமே கிடையாது. நெய்யில் உள்ள கொழுப்புச் சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும், பாசிப்பருப்பில் உள்ள புரதச்சத்தும் சேர்ந்து குழந்தைக்கு, போதிய ஊட்டச்சத்தை கொடுக்கும்.


ஆனால் சிக்கன், மட்டன், மீன், இறால் போன்ற அசைவ உணவுகளை சமைக்கும் போது அதில் நெய் சேர்க்கக் கூடாது. ஏற்கனவே அசைவ உணவுகளில் போதிய அளவுக்கு மேல் கொழுப்புச் சத்து இருக்கும். இரண்டிலும் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்ந்தால் செரிமானக் கோளாறு, உயர் கொலஸ்டிரால், உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

​நெய் சாப்பிடுவதன் நன்மைகள்

நெய் மலச்சிக்கலை தீர்ப்பதற்கு மிகச் சிறப்பாக மருந்தாகச் செயல்படுகிறது. குறிப்பாக வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது நம்முடைய செரிமான மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, மலச்சிக்கலைப் போக்க உதவும். நெய் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நம்முடைய சருமத்தையும் இளமையாக, தோலை பளபளப்பாகவும் வைத்திருக்கச் செய்யும். நினைவாற்றவை மேம்படுத்தச் செய்யும் பண்பு கொண்டது. அதனால் தினமும் சிறிதளவு குழற்தைகளுக்கு உணவோடு நெய் சேர்க்கலாம்.இவர்கள் நெய் சாப்பிடக்கூடாது

செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள், குறிப்பாக அஜீரணக் கோளாறு, irritable bowel syndrome மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயம் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் போன்ற பருவ தொற்றுக்கள் ஏற்படும் காலங்களில் நெய் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நெய்க்கு கபத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதனால் மழைக்காலத்தில் நெய் சாப்பிடுவதை தவிருங்கள். கர்ப்பிணிகள் நெய் சாப்பிடும் போது இரட்டிப்பு கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் அதிக எடை/உடல் பருமனாக இருந்தால், நெய் உட்கொள்வதை குறைக்கவும்.


கல்லீரல் ஈரல் அழற்சி, மண்ணீரல், ஹெபடோமேகலி, ஹெபடைடிஸ் போன்ற கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களில் நெய் தவிர்க்கப்பட வேண்டும்.

செரிமான பிரச்னை உங்களுக்கு இல்லையா? அப்போ, நீங்க தாராளமா நெய் ஊற்றி சாப்பிடலாம்.

Updated On: 21 Aug 2022 1:42 PM GMT

Related News

Latest News

 1. திருவாடாணை
  மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
 2. திருப்பரங்குன்றம்
  பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
 3. குமாரபாளையம்
  ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
 4. திருவில்லிபுத்தூர்
  சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 5. குமாரபாளையம்
  பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
 6. சோழவந்தான்
  பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
 8. ஈரோடு
  பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
 10. ஆன்மீகம்
  கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்