/* */

எலும்புகளைப் பலப்படுத்தும் விளாம்பழம் நீங்க சாப்பிட்டிருக்கிறீர்களா?..... படிங்க....

do you know,the medicinal character of vilampalam விளாம்பழம் இக்கால இளைய தலைமுறைக்கு இதன் பெயரே புதிராகஇருக்கும். பலபேர் பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் இந்த பழம்,காயில்தான் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது என்பது பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை... கிடைச்சா சாப்பிடுங்களேன்...நல்ல உடல் ஆரோக்யமானது இது.

HIGHLIGHTS

எலும்புகளைப் பலப்படுத்தும் விளாம்பழம்   நீங்க சாப்பிட்டிருக்கிறீர்களா?..... படிங்க....
X

அப்பப்பா....விளாம்பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?..... (கோப்பு படம்)

do you know,the medicinal character of vilampalam

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் போதிய சத்துகள் கிடைக்காது என்பதால் உபரியாக காய்கறி, பழ வகைகளை உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் பழ வகைகள் அனைத்துமே நல்ல நார்ச்சத்து உட்பட பல வகையான தாதுச் சத்துகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பழமும் வெவ்வேறான வகை சத்துகளைக் கொண்டதாகும். அந்த வகையில் எலும்புகளுக்கு வலு சேர்க்கக்கூடிய விளாம்பழத்தில் அடங்கியுள்ள பல்வேறு மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க...

do you know,the medicinal character of vilampalam


do you know,the medicinal character of vilampalam

உடல் வலிமைதரும் பழங்களில் விளாம்பழம் சிறந்ததாகும். விளாம்பழம் சாப்பிட்டால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் . இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன.

do you know,the medicinal character of vilampalam


do you know,the medicinal character of vilampalam

எலும்புகளுக்கு வலு

எலும்புகளைப் பலப்படுத்தும் விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எந்த வித நோயும் வராது. ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு அடிக்கடி விளாம்பழத்தினைக் கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் ஏற்படும். விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். நல்ல பசியை ஏற்படுத்தும். வயதானவர்கள் விளாம்பழம் உண்டு வந்தால் அவர்களுக்கு ஏற்படும், ’’ ஆஸ்டியோபெரோஸிஸ்’’ என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது. பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரண சக்தியைத் தரும். ரத்தத்தை விருத்தி செய்யும்.

do you know,the medicinal character of vilampalam


இதுதான் விளாம்பழம்... பழமாக இருந்தால் அதனுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு பாருங்க...சுவையோ சுவை...(கோப்பு படம்)

do you know,the medicinal character of vilampalam

வசியம் போக்கும் விளாம்பழத்தினை ஓட்டோடு இருபத்தியோருநாள் ஒருவர் தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்ணாசை மறந்துவிடும். கெட்ட பெண்களினால் இடம்பெற்ற வசிய மருந்துகளும் முறிந்துவிடும். பழுக்காத விளாங்காயைத் தண்ணீர் விட்டு அவித்து, அதை உடைத்து, உள்ளே உள்ள சதையை எடுத்து காலை வேளையில் மட்டும் ஐந்து நாள் வரை தொடர்ந்துகொடுத்து வந்தால் , சீதபேதி குணமடையும். வெறும்பேதியைக் கூட நிறுத்திவிடும். பேதிக்கு இது கைக்கண்ட மருந்து. இதயத்திற்கு இதமளிக்கும். இதயத்திற்கு நல்ல பலத்தைத் தரும். நரம்புகளுக்கு வலிமை தரும். இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறுபடாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்ச்சத்து இருக்கிறது. இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும் இதயத்திற்கும் பலமணிக்கும் . ஜீரணக் கருவிகளைத் தக்க நிலையில் பாதுகாக்கும்.

do you know,the medicinal character of vilampalam


do you know,the medicinal character of vilampalam

அறிவுக்கு பலம்

விளாம்பழமானது அறிவுக்கு பலம் தரும். மன சந்தோஷத்தையும், மனோ தைரியத்தையும் அளிக்கும். பித்தம் போக்கும். பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில்மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு , கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும். இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால்பித்தம் சம்பந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். சர்க்கரையுடன் விளாம்பழத்தினைச் சேர்த்து ஜாம் போல் சாப்பிட்டால் ஜீரணசக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும். தினசரி ஒரு பழம் வீதம் 21 நாட்களுக்கு சாப்பிட்டு வர எந்த விதமான பித்த வியாதிகளும் குணமடையும்.

ஒரு பழத்தை ஒருவர்தான் சாப்பிடவேண்டும்?

ஒருவர் சாப்பிடும் விளாம்பழத்தை மற்றவருக்கு பங்கு தரக்கூடாது. காரணம் விளாம்பழத்தில் உள்ள ஒரே ஒரு விதைக்கு மட்டுமே பித்தத்தைப் போக்கும் சக்தி உண்டு. அந்த குறிப்பிட்ட விதை மற்றவருக்குப் போய் விட்டால், பித்தத்தைப் போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது. விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டைப் போக்கி பசியை உண்டு பண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.

do you know,the medicinal character of vilampalam


விளாம்பழத்தினை வீதியில் கொட்டி விற்பனை செய்யும் வியாபாரி (கோப்பு படம்)

do you know,the medicinal character of vilampalam

முதியவர்களின் பல் உறுதி இழப்பி்ற்கு விளாம்பழம் நல்ல மருந்து. முகம் இளமையாக மாறும்.வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக , வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனைப் போக்க விளாம்பழம் சிறந்த மருந்தாகும். இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் மாஸ்க் போல் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும். விளாங்காயும், பாதாம்பருப்பும், தோலைமிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும்.

கரும்புள்ளி போக்க

விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்து அதனுடன், பார்லி, கஸ்துாரி மஞ்சள், பூலான்கிழங்கு, காய்ந்த ரோஜாமொட்டு ஆகியவற்றை சம அளவு எடுத்து குளியல் பவுடராக பயன்படுத்திவர முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன் , கரும்புள்ளிகளும் காணாமல் போகும். பட்டுப்போன்ற கூந்தல் வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு. காயவைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் துாள்- 100கிராம், சீயக்காய்,வெந்தயம், தலா கால்கிலோ, இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். செம்பருத்தி இலை, விளாம்இலை, சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குக் குளிக்க மூலிகை குளியல், போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய், எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்தமாகிவிடும்.

அல்சர், நரம்புத்தளர்ச்சி நீங்க...

தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப்புண், அல்சர், குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது. வெல்லத்துடன் விளாம்பழத்தினை பிசைந்து சாப்பிட்டு வர, நரம்புத்தளர்ச்சி விரைவில் குணமடையும். விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)தொடர்ந்து சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், போன்ற பிரச்னைகள் குணமாகும். விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு,கொதிக்க வைத்து குடிக்க, வாயுத்தொல்லை நீங்கும். மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க , வறட்டு இருமல், மூச்சு இழுப்பு வாய் கசப்பு போன்றவை குணமாகும்.

Updated On: 2 April 2023 7:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  2. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  3. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  4. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  5. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  6. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  7. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  8. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  9. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  10. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?