அப்பப்பா....இவ்வளவு மருத்துவகுணங்களா? வேர்க்கடலையில..... படிச்சு பாருங்களேன்....

Verkadalai Benefits in Tamil - நாம் தினமும் சாப்பிடும் உணவு வகைகளில் பல சத்துகள் உள்ளது. அந்த வகையில் பருப்பு வகைளில் அதிக மருத்துவகுணம்கொண்ட வேர்க்கடலையின் பயன்களைப் பற்றிப் பார்ப்போம்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அப்பப்பா....இவ்வளவு மருத்துவகுணங்களா?   வேர்க்கடலையில..... படிச்சு பாருங்களேன்....
X

மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட வேர்க்கடலை .

Verkadalai Benefits in Tamil -

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்துமே நம் உடலுக்கு சத்துகளைத் தரக்கூடியவைகளாக உள்ளன. அதுவும் தானிய பயிர் வகைகளில் வழக்கத்தினை விட கூடுதலான தாதுச்சத்துகள் நிறைந்துள்ளது. அந்த வகையில் உடலுக்கு நல்ல வலிமையைத் தரக்கூடிய சத்துகளை தரக்கூடியதாக வேர்க்கடலை உள்ளது. இதனை நிலக்கடலை , கடலைக்கொட்டை , மல்லாக்கொட்டை என ஏரியாவுக்கு தகுந்தாற்போல் பெயர் வைத்து அழைக்கின்றனர்.

நம் நாட்டில்வேர்க்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் வேர்க்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைக் காணலாம்.

வேர்க்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே வேர்க்கடலையைத்தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும்.

do you know the medicinal characters of groundnut


do you know the medicinal characters of groundnut

சர்க்கரை நோயைத் தடுக்க

வேர்க்கடலையில் மாங்கனீசு சத்து நிறைய உள்ளது. மாங்கனீசு சத்து மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப்பை கல்லைக் கரைக்க

வேர்க்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்க

வேர்க்கடலை சாப்பிட்டால் எடைபோடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் வேர்க்கடலை சாப்பிடலாம். வேர்க்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது.

ஞாபக சக்தி அதிகரிக்க

வேர்க்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. வேர்க்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் வைட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

do you know the medicinal characters of groundnut


do you know the medicinal characters of groundnut

மனஅழுத்தம் போக்க

வேர்க்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை துாண்டுகிறது. மனஅழுத்தத்தைப் போக்குகிறது. வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தினைப் போக்குகிறது.

கொழுப்பைக் குறைக்க

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சர்யம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. வேர்க்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் வேர்க்கடலையில் உள்ளது. வேர்க்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

100 கிராம் வேர்க்கடலையில் 24 கிராம் மோனோ அன்சாச்சுரேட்டட் வகை கொழுப்பு உள்ளது.பாலி அன்சாச்சுரேட்டட் 16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட வேர்க்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. வேர்க்கடலையில் உள்ள ஒமேகா 3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த வேர்க்கடலை

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் வேர்க்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் வேர்க்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப்பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு வேர்க்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது. மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் வேர்க்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த பல வருடமாக இந்தியாவில் வேர்க்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் வேர்க்கடலையின் பங்கு 15 மடங்கு கூடியிருப்பதுடன் விலையும் கூடியிருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் வேர்க்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் வேர்க்கடலை அதிகம் கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் வேர்க்கடலை குறித்துதவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளது.

do you know the medicinal characters of groundnut


do you know the medicinal characters of groundnut

கருப்பை கோளாறுக்கு

பெண்கள் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை வேர்க்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம்வேர்க்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

do you know the medicinal characters of groundnut


do you know the medicinal characters of groundnut

என்ன? என்ன ? சத்துகள்

100கிராம் வேர்க்கடலையில் கீழ்க்கண்ட சத்துகள் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட்- 21 மி.கி., நார்ச்சத்து- 9மி.கி, கரையும் கொழுப்பு-40 மி.கி.,புரதம் -25 மி.கி,ட்ரிப்டோபான் - 0.24 கி,திரியோனின்-0.85 கி, ஐசோலுாசின்-0.85 மி.கி,லுாசின்-1.625 மி.கி,லைசின்-0.901 கி,குலுட்டாமிக் ஆசிட்-5கி.கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) 93.00மி.கி,காப்பர் -11.44 மி.கி,இரும்புச்சத்து-4.58மி.கி,மெக்னீசியம்-168.00மி.கி,மாங்கனீசு-1.934,பாஸ்பரஸ்-376.00மி.கி,பொட்டாசியம்-705.00மி.கி,சோடியம்-18.00மி.கி.,துத்தநாகச்சத்து-3.27மி.கி,தண்ணீர்ச்சத்து-6.50கிராம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. போலிக்ஆசிட் சத்துகளும் நிரம்பியுள்ளது. பாதாம் பிஸ்தாவை விட சிறந்தது. நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. வேர்க்கடலையில்தான் இவற்றை எல்லாம்விட அளவுக்கதிகமான சத்துகள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்குதான் உண்டு.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 9:12 AM GMT

Related News