/* */

கண்தானம், உடல்தானம் ,உறுப்புதானம் போல் தோல் தானம் செய்யலாம்:உங்களுக்கு தெரியுமா?

do you know skin donate? விருப்பம்இருந்தால் நம் தோலையும் தானம்செய்யலாம். தீப்புண்ணில் பாதித்தவருக்கு பாதுகாக்கப்பட்ட தோல் பயன்படுவதாக டாக்டர் தெரிவிக்கிறார்.

HIGHLIGHTS

கண்தானம், உடல்தானம் ,உறுப்புதானம் போல்   தோல் தானம் செய்யலாம்:உங்களுக்கு தெரியுமா?
X


do you know skin donate?

நமக்கெல்லாம் தெரிந்தது தானத்தில் சிறந்தது அன்னதானம் மட்டும்தான். ஆனால் தற்காலத்தில் நடக்கும்விபத்துகள், மற்றும் கோமா நிலையில் இருப்பவர்கள், மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்கள் ஆகியோரின் உறுப்புகள் தானம் அளிக்கப்படுகிறது. அதேபோல் கண்தானம்,உடல்தானம் செய்வோரின் எண்ணி்க்கையும் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால் நீங்கள் எல்லாம் தோல்தானத்தினைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அதாவது தீக்காயத்தில் தோலினை இழந்தவர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ள தோல் சிகிச்சைக்கு பயன்படுகிறதாம். சரி அதைப்பற்றி பார்ப்போம் வாங்க....

மனிதனுக்கு அழகையும் அடையாளத்தையும் அளிப்பது தோல் என்கிற சருமம். இதுவே உடலின் எல்லா உள்ளுறுப்புகளையும் மூடிப்பாதுகாக்கிறது. ஒருவரின் ஆரோக்யத்தை அவரின் தோலின் தன்மையைக் கொண்டே கூறி விட முடியும். தீ விபத்துகள் பெருகியுள்ள இக்காலத்தில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு மாற்றுத் தோல் கிடைப்பதில்லை.

உடல்தானம்,உறுப்புதானம், கண்தானம் ஆகியவற்றில் சமீபகாலமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு தோல் தானத்துக்கு இல்லை. 'இறந்தவர் உடலிலிருந்து தோலை எடுத்தால் அவர்களது உடலில் விகாரமாக ஆகிவிடுமோ? என்கிற பயத்தில் அவர்களின் குடும்பத்தாரும் தோல் தானம் செய்யத்தயங்குகிறார்கள்.

do you know skin donate?


do you know skin donate?

''இறந்தவர்களின் உடல்களில் இருந்து மட்டுமே தோலை தானமாக பெறுகிறோம்''டெர்மடோம் எனப்படும் கருவியின் மூலம் தோலின் மேல் பகுதியை மட்டுமே எடுக்கிறோம். அதுவும் கால் மற்றும் தொடைப்பகுதியில் இருந்து எடுக்கப்படுகிறது. எடுத்த இடத்தில் கட்டு போட்டு மூடி விடுகிறோம்.

இதனால் விகாரமாக எதுவும் தெரியாது. மக்களின் சந்தேகம் தீர்க்கும் பதிலுடன் பேசுகிறார் தனியார் ஆஸ்பத்திரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஜி. பாலகிருஷ்ணன். இந்தியாவில் மும்பை, புனேவுக்கு பிறகு சென்னையில் தோல் வங்கியை அமைத்திருக்கும் இவர், தோல் தானம் பற்றி நமக்கு விளக்குகிறார்.

இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட தோல் எங்கள் தோல் வங்கியில் பதப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு தோல்தானம் பயன்படுகிறது. 30 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் உள்ளவர்களை பிழைக்க வைக்க மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். தீக்காயப் புண்களில் இருந்துதொடர்ந்துநீர் வடிந்து புரதச்சத்து இழப்பு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியானது குறையும். கிருமித்தொற்று ஏற்படும். அதனால் திறந்திருக்கும் காயங்களை மூட வேண்டும்.

முன்பு மிருகங்களிடம் இருந்து எடுக்கப்படும் 'கொலாஜன்'' எனப்படும் புரதத்திசுக்களைக் கொண்டு காயங்களை மூடுவார்கள். இது 5 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். மனிதனின் உடலில் இருந்து எடுக்கப்படும் தோலானது மூன்று வாரங்கள் வரை தாக்குப்பிடிக்கும். இதற்குள் தீக்காயம் அடைந்தவர்களின் உடலின் திரவ இழப்புநின்று விடும். கிருமித்தொற்று இருக்காது. உடலின் ஊட்டச்சத்தும் மேம்பட்டுவிடும். மேலோட்டமான தீக்காயங்கள் ஆறிவிடும். இதனால் நோயாளியின் உயிரைக்காப்பது எளிதாகிவிடும். இப்படித்தான் இறந்த மனிதன் தானம் கொடுக்கும் தோலானது இன்னொருவரின் உயிரைக்காக்க பயன்படுகிறது.

do you know skin donate?


do you know skin donate?

தோல்தானம் யார் அளிக்க முடியாது?

கல்லீரல் தொற்றுநோயான ஹெபடைடிஸ்பி, ஹெபடைடிஸ் பாதிப்புக்குள்ளாகி இறந்தவர்கள் தோல்தானம் செய்யமுடியாது.தோலைச் சேகரிக்கும்போது இறந்தவரின் ரத்தத்தையும் பரிசோதனைக்குஅனுப்புகிறோம். அவரின் தோலின் சிறிய அளவை கல்ச்சர் டெஸ்ட்டுக்குஅனுப்பி ஆராய்ந்த பிறகே 85 சதவிகிதம் கிளிசரால் கொண்டு பதப்படுத்தி வைக்கிறோம்.

தோலைப்பாதுகாப்பது எப்படி?

ஒருவர் மூளைச்சாவு அடைந்த பின் அவரின் குடும்பத்தினர் தோல் தானம் அளிக்க முன் வந்தால் எங்களுக்குத் தகவல் வரும்.எங்கள் மருத்துவக்குழு 6 மணி நேரத்திற்குள் சென்று தோலை எடுத்துவருவார்கள். எடுக்கப்படும் தோலானது 40சதவிகிதம் கிளிசரால் கொண்டு பதப்படுத்தப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும்.

கிளிசராலுக்கு மாற்றப்பட்டு ''அஜிடேட்டர்'' கருவியில் பதப்படுத்தி 'பயோஸேஃப்டி கேபினட்'' கருவியில் வைத்து தோலை சற்று விரிவு படுத்துவோம். பிறகு தோலை அளந்து 100 செ.மீ. ,300 செ.மீ., என தனித்தனியாக டெஸ்ட் டியூபில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுவோம்.

தேவைக்கு ஏற்ப தோலை அளந்து தீக்காயம் அடைந்தவர்களுக்கு கொடுத்துஉதவுவோம். தானமாக கொடுக்கப்பட்ட தோலை சரியான முறையில் பதப்படுத்தி வைத்தால் 5 வருடங்கள் வரை பாதுகாத்து, பயன்படுத்த முடியும். பல உயிர்களைக் காக்கும் தோல்தானத்தை மக்கள் தயங்காமல் செய்யலாம. விருப்பமுள்ளவர்கள் எங்களுக்கு 180042503939 க்கு ஒரு போன் செய்தால் போதும்...அவர்களுடைய வீட்டுக்கே சென்று தோலை எடுத்து வருகிறோம். தானமாக கொடுக்கப்பட்ட தோலை சரியான முறையில் பதப்படுத்திவைத்தால் 5 வருடங்கள் வரைபாதுகாத்து பயன்படுத்த முடியும் என்றார்.

Updated On: 8 Nov 2022 1:01 PM GMT

Related News