/* */

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பக்கால சர்க்கரை நோய்க்கு தீர்வு தான் என்ன?.......படிச்சு பாருங்க..

do you know pregnancy women diabetic remedy? உடல் நல ஆரோக்யம் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. நம்மை விட கர்ப்பிணிப் பெண்கள் இவ்விஷயத்தில் போதிய கவனத்தோடு இருப்பது மிக மிக அவசியம் ஆகும்.

HIGHLIGHTS

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பக்கால சர்க்கரை   நோய்க்கு தீர்வு தான் என்ன?.......படிச்சு பாருங்க..
X

அழகிய சர்க்கரைக் கட்டிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள சர்க்கரை நோய் (கோப்பு படம்)

do you know pregnancy women diabetic remedy?

மனிதர்களாக பிறந்தவர்களுக்கு நோயே வராமல் இருக்காது? ஆனால் நாம் சற்று முன்னெச்செரிக்கை நடவடிக்கையோடு இருந்தோமானால் வரும் முன் காப்போம் என்ற நோக்கில் நோயை விரட்டியடிக்கலாம்.அந்த வகையில் சர்க்கரை நோய் என்ற அரக்கனை ஆரம்ப காலத்தில் கண்டுவிட்டால் ஒரு சில உணவுக்கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி ஆகியன மேற்கொண்டு விரட்டியடிக்கலாம்.

do you know pregnancy women diabetic remedy?


கர்ப்பிணிப் பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும் (கோப்பு படம்)

do you know pregnancy women diabetic remedy?

கடந்த 10 ,15 வருடங்களுக்கு முன்பாக நம் நாட்டில் '' சர்க்கரை நோய் ''என்பது ஒரு சில நபர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் இப்போதோ வயதானவர்களுக்குமட்டுமின்றி குறைந்த வயதுடைய இளைஞர்களையும் தாக்கும் நோயாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாறி வரும் உணவுப்பழக்கங்கள், உடல் உழைப்பு குறைவின் காரணமாகவும் ,உணவுக்கட்டுப்பாடு இல்லாதநிலை, ரெடிமேட், உணவுவகைகளின் ஆதிக்கம் ஆகியவைகளும் சர்க்கரை நோயின் தாக்கத்திற்கு மூலக்காரணிகளாக விளங்குகின்றன.

நம்முடைய பாரத தேசத்தில் திருமணம் என்பது திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.அவ்வாறுநடக்கும் திருமணத்தில் சந்தோஷத்தினைப் பகிர்ந்து கொள்ளும் உறவினர்கள் அனைவருமே அப்பெண்ணின் கருத்தரிப்பு எப்போது என காத்திருக்கின்றனர். பின்னர் , அப்பெண்ணுக்கு வளைகாப்பு,சீர், சடங்கு என விருந்து வைத்து விழாவாக கொண்டாடுவது இன்று வரை அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

do you know pregnancy women diabetic remedy?



சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்படுகிறது (கோப்பு படம்)

do you know pregnancy women diabetic remedy?

உணவுக்கட்டுப்பாடு

சாதாரண நிலையில் இருக்கும் பெண் ஆனவள், தன்னுடைய கர்ப்பக்காலத்தில் எந்த வேலையினையும் செய்யவிடாமல் அவர்கள் விரும்பியவகை உணவுகளை வழங்கி, அவர்களை எந்த நேரத்திலும் மனம் கோணாதவாறு மகிழ்ச்சியுடன் வைத்திருக்கவேண்டும் என எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். இது தப்பில்லை. ஆனால் கட்டுப்பாடு வேண்டும். குறிப்பாக உணவுப் பழக்க வழக்கங்களில் கர்ப்பிணிப் பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவ்வாறு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பவர்களைத்தான் இந்த சர்க்கரை நோய் எளிதில் தாக்குகிறது.

வேலை செய்ய மறுக்கும் இன்சுலின்

இளம்பெண் கர்ப்பம் தரித்தவுடன் அவர் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவானது உடலின் ரத்தத்தில் கலந்து அதிகமாகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தும் பணியினைத்தான் கணையத்தில் இருந்து வெளிப்படும் '' இன்சுலின் ஹார்மோன் '' செய்துவருகிறது. ஆனால் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த இன்சுலின் வேலை செய்ய மறுக்கிறது. கர்ப்பப் பையில் உருவான கருவானது ஒரு வேற்று பொருள் போல செயல்பட்டு இன்சுலினுக்கு எதிரான ஹார்மோன்களை உடலில் அதிகமாக சுரக்க வைக்கிறது. சாதாரண நபர்களுக்கு சுரக்கும் இன்சுலின் ஹார்மோனைப் போல இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக சுரந்து வேலை செய்தால்தான் சர்க்கரை நோய் தாக்கிய பெண் அந்நோயிலிருந்து எளிதில்மீளமுடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

do you know pregnancy women diabetic remedy?


சர்க்கரை நோய் வந்ததற்கான அறிகுறிகள்தான் நாம் படத்தில் மேலே காண்பது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, சத்துக்குறைபாடு, அடிக்கடி தாகம் எடுத்தல் .

do you know pregnancy women diabetic remedy?

சர்க்கரை நோயின் 2 வகைகள்

கர்ப்பக்காலங்களில் பெண்களைத் தாக்கும சர்க்கரை நோயினை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1.ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு அந்த பெண் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருத்தல் (pre gestational diabetes)

2.திருமணத்திற்கு முன்பு ஆரோக்யமாக காணப்பட்டு, கர்ப்பம் தரித்த பின் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுதல் (gestational diabetes)

3.கருவிலிருக்கும் குழந்தையை சர்க்கரை நோய் தாக்குதல்

கர்ப்பகாலத்தில் ஏற்படும்போது தாயின் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையானது நஞ்சு கொடியைத் தாண்டி கர்ப்பப் பையில் இருக்கும்குழந்தைக்கு சென்று அடைகிறது.தாயின் ரத்தத்தில் சரியான அளவுசர்க்கரை இருந்தால் தான்குழந்தைக்கும் தேவையான அளவு சர்க்கரை சத்து செல்லும். குழந்தையும் ஆரோக்யமாக சரியான அளவு எடையுடன் பிறக்கும். தாயின் சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது குழந்தைக்கும் அதிக சர்க்கரை சத்து சேர்ந்து குழந்தை பெரியதாக வளர்த்து கொழு, கொழுவென்று அதிக எடையுடன் பிறக்கும்.

do you know pregnancy women diabetic remedy?


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கான உணவு அட்டவணை (கோப்பு படம்)

கர்ப்ப கால சர்க்கரையின் அளவு

வெறும் வயிற்றில் 90mg% க்கு கீழும் டிபன் எடுத்துக்கொண்ட 1 மணி நேரத்தில் 140mg%க்கு கீழுூம டிபன் எடுத்துக்கொண்ட 2 மணி நேரத்தில் 120 mg%க்கு கீழும் இருக்க வேண்டும். HB1C பரிசோதனையானது ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபயோகமாக இருக்கும். 5.7%க்கு கீழ் இருக்க வேண்டும்.

நோய் வரக் காரணம் என்ன?

இன்றைய நவநாகரீக உலகத்தில் இளம் வயதுடையவர்களுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அனைத்து தரப்பு மக்களிடமும் ஆண், பெண் ஆகிய இரு பாலினத்தவர்களிடமும் போதிய அளவிற்கான உடல் உழைப்பு இல்லை. மேலும் கட்டுப்பாடற்ற உணவுகள், அதில் இனிப்பு வகைகளின் தலையீடுகள் அதிகம். இதே போல் ஓரிடத்திலேயே உட்கார்ந்துகொண்டு டிவி பார்க்கும் போது சாப்பிடும் ஸ்நாக்ஸின் ஆதிக்கம், பிஎம்ஐ என்று சொல்லக்கூடிய பாடிமாஸ் இன்டெக்ஸ் பொருத்தமில்லாத உடல் எடை, பரம்பரையின்மூலம் வருதல் , போன்றவைகளினால் தற்போதைய உலகில் விரைவில் சர்க்கரை நோய் தாக்குகிறது.

do you know pregnancy women diabetic remedy?


கர்ப்பிணிப் பெண்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட நாள்இடைவெளிக்கு குளுக்கோமீட்டர் மூலம் சுய சர்க்கரை பரிசோதனை மேற்கொள்ளலாம் என்பதைக் காட்டும் படம் ( கோப்பு படம்)

do you know pregnancy women diabetic remedy?

பிறக்கும் குழந்தைக்கே சர்க்கரை நோய்

பிறக்கும் குழந்தையின் எடையானது நார்மலான எடையினை விட கூடுதலாக 4 கிலோவில் பிறக்கும் குழந்தைகள் தாயின் கருவறையிலேயே அதிக சர்க்கரையினை எடுத்து கொள்வதால் குழந்தையின் கணையத்தில் உள்ள ''பீட்டா செல்கள் ''பிறப்பதற்கு முன்பே தேவைக்கதிகமாக இன்சுலினை சுரக்க ஆரம்பித்து விடுகின்றன. இவ்வாறு அதிகமாக இன்சுலின் சுரக்கும் எடை அதிகமான குழந்தைக்கு, எதிர்காலத்தில் இன்சுலின் வேலை செய்வது (insulin resistance)நின்றுவிடும். இதனால் அக்குழந்தைக்கு சிறு வயது முதலே (டைப்-2) வகை சர்க்கரை நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

நோயினை எவ்வாறு கண்டுபிடிப்பது?

1.கர்ப்பம் தரித்தவுடன் ரத்த சர்க்கரை பரிசோதனை அவசியம்.

2.சர்க்கரை நோய் தாக்காவிட்டாலும் 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதித்துப் பார்க்கவேண்டும்.

3.சர்க்கரை நோய் தாக்கியவர்கள் 15 நாளைக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

4.குளுக்கோமீட்டர்கள் மூலம் வீட்டில் சுயமாகவும், ரத்த பரிசோதனை செய்து கொள்வது நலம் பயக்கும்.

5.மதிய வேளை,இரவு வேளை என பரிசோதித்து அந்த முடிவினை டாக்டரைப் பார்க்க வரும் போது அவரிடம்காட்டி விளக்கம் பெறவேண்டியது அவசியம் ஆகும்.

do you know pregnancy women diabetic remedy?


வீட்டில் குளுக்கோ மீட்டர் வைத்து தானே சர்க்கரை ரத்த பரிசோதனையை மேற்கொள்கிறார் (கோப்பு படம்)

do you know pregnancy women diabetic remedy?

கவனிக்காமல் விட்டால்- விளைவுகள் ?

1. முதல் 3 மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு சர்க்கரையின் அளவு அதிகம் எனில் குழந்தையின் உடல் உறுப்புகளில் குறைபாடு ஏற்படும். வளர்ச்சி குறையும். அபார்ஷன் ஆவதற்கும் வாய்ப்புண்டு.

2. 3,6 மாதங்களில் சர்க்கரை அதிகரித்தால் ,குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்படும். மேலும்,குழந்தைக்கு மூச்சுத்திணறலும், தாய்க்கு வலிப்பும் ஏற்பட வாய்ப்புண்டு.குழந்தைக்கு அறிவு வளர்ச்சியும் பாதிப்படையும்.

3. 6 மாதம் முதல் பிரசவ காலம் வரை சர்க்கரை அதிகமானால் பிரசவத்திற்கு பின்பு குழந்தைக்கு தாழ்சர்க்கரை நிலை ஏற்படும். கால்சிய சத்துகுறையும். மஞ்சள் காமாலை ஏற்படுவதோடு குழந்தை பெரியதாகவோ (அ) இறந்தோ பிறக்கவும் வாய்ப்பு உள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

do you know pregnancy women diabetic remedy?


க்்

do you know pregnancy women diabetic remedy?

தீர்வுதான் என்ன?

முறையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, அவசியம் மேற்கொள்ள வேண்டும். கர்ப்பக்கால சர்க்கரையைக் கட்டுப்படுத்த மாத்திரை சாப்பிடாமல் இன்சுலின் ஊசி போடுவது சிறந்தது. டாக்டரின் ஆலோசனைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பது அவசியம். கர்ப்பக் காலங்களில் மன நிலையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். இசை, காமெடி நிகழ்ச்சிகளை பார்ப்பதும், கேட்பதும், நலம் பயக்கும். இவையனைத்தையும் முறையாக பின்பற்றினால் சர்க்கரை தானாகவே குறைந்துவிடும்.

Updated On: 25 Nov 2022 8:29 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு