/* */

Citrate Syrup Uses in Tamil -சிறுநீரக கல் சிகிச்சைக்கு பயனளிக்கும் டைசோடியம் ஹைட்ரஜன் சிட்ரேட் சிரப்..

Citrate Syrup Uses in Tamil-நாகரிக பரபரப்பான உலகில் நம் ஆரோக்யத்தில் யாருமே அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. சுவர் இல்லாவிட்டால் சித்திரம் வரைய முடியாது. ஆரோக்யமே பாதுகாப்பு என்பதை உணருங்க.

HIGHLIGHTS

Citrate Syrup Uses in Tamil
X

Citrate Syrup Uses in Tamil

Citrate Syrup Uses in Tamil

மனிதர்களாக பிறந்தவர்கள் யாருமே நோய்வாய்ப்படாமல் இருக்க முடியாது. எவ்வளவு சரியாக இருந்தாலும் வயோதிகம் என வந்துவிட்டால் நோய்கள் நமக்கு வர துவங்கிவிடும். வயோதிக காலத்தில் வரக்கூடிய நோய்கள் பல உள்ளன. ஆனால் இக்காலத்தில் மாறிவரும் உணவுப்பழக்கம், உடலுழைப்பு இன்மை, உடற்பயிற்சி இல்லாமை , பரபரப்பான வாழ்க்கை இவைகளினால் வயோதிகத்தில் வரவேண்டிய நோய்கள் அனைத்தும் இளமையாக இருப்போருக்கே வருகிறது. அந்த வகையில் சிறுநீரக கல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டைசோடியம் ஹைட்ரஜன் சிரப் பற்றி பார்ப்போம்.

இந்த மருந்தானது கீல்வாதம் மற்றும் சிறுநீரக கல் நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.ரத்தத்தில் சிறுநீர் நுழைவது அகத்து உறிஞ்சலை தடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது. சிறுநீரகத்தால் பென்சில்லின் போன்ற குறிப்பிட்ட நுண்ணுயிர் கொல்லிகள் வெளியேற்றப்படுவதை தாமதப்படுத்தி ரத்தத்தில் அதன் செறிவினை அதிகரிக்கிறது.

சிறுநீரகத்தில் கல் எப்படி உண்டாகிறது- கால்சியம், பாஸ்பேட் , தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் கலந்த கலவையே சிறுநீரககல் ஆகும்.ரெனல் டியூப்லர் அசிடோசிஸ் என்பது சிறுநீரிலுள்ள அமிலத்தை வெளியேற்ற முடியாத நிலையில் கிட்னி செயலாற்றுவது ஆகும். இதுபோன்ற நிலையில் ரத்தமானது மேலும் அமிலத்தன்மையை அடைகிறது.

இம்மருந்தில் டைசோடியம் ஹைட்ரஜன் பாஸ்பேட், இது பை கார்பனேட்ஆக வளர்சிதை மாற்றம் அடைந்து அதிக அளவிலான பைகார்பனேட் அயனிகள் வெளியேற துணைபுரிகிறது. மேலும் இதனால் யூரிக் அமிலத்தை கரையக்கூடிய யூரேட் அயனியாக மாற்றுகிறது.இதனால் சிறுநீரின் பிஎச் அளவு உயர்வதோடு சிறுநீரை குறைந்த அமில நிலை கொண்டதாக்குகிறது.

மருந்து சாப்பிடும் முறை


டாக்டர் பரிந்துரைத்த டைசோடியம் ஹைட்ரஜன் சிட்ரேட் சிரப்பினை சிறு தண்ணீரோடு கலந்து உணவுக்கு பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு டாக்டர் உங்களுக்கு பரிந்துரைத்த பின்னர்தான்இந்த மருந்தினை உட்கொள்ள வேண்டும்.

ஒருசிலருக்கு இந்த மருந்தினை உட்கொள்ளும்போது பக்க விளைவுகளாக அசாதாரண வயிற்று பிரச்னைகள், வயிற்றுப்போக்கு, சோர்வு, குமட்டல் வாந்தி, உள்ளிட்டவை ஏற்பட்டாலும் இவையனைத்தும் தற்காலிகமானதாகவே இருக்கும். இருந்த போதிலும் நீங்கள் டாக்டரை சந்திக்கும்போது இப்பிரச்னைகளை அவரிடம் தெரிவித்தல் நலம் பயக்கும்.

நீங்கள் அலர்ஜியால் பாதிக்கப்படுபவராக இருந்தாலோ அல்லது ஹைபர் களேமியா (அதிக பொட்டாசிய அளவு),ஹைபோகால்சிமையா, (ரத்தத்தில் குறைந்த கால்சிய அளவு),உயர் ரத்தஅழுத்தம், ரத்தத்தில் காரத்தின் அளவு அதிகரிப்பு, சிறுநீரக தொற்று, கிட்னி செயல்பாட்டின்மை, போன்றவைகளினால் பாதிக்கப்பட்டிருந்தால் டாக்டரிடம் தெரிவித்துவிடவும். அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் ஆகியோரும் டாக்டரிடம் முன்னதாக தெரிவித்துவிடவேண்டும்.

முன்னெச்செரிக்கை


அதிக திரவங்களை குடிப்பதன் மூலம் உங்களுடைய உடம்பிலுள்ள அதிகப்படியான தாதுக்கள் வெளியேற வாய்ப்புண்டு. உப்பை குறைந்த அளவே எடுத்து கொள்ளுங்கள். அதிக உப்புஎடுத்துக்கொண்டால் அதனால் கிட்னியில் கல் உருவாக வாய்ப்புண்டு.சரியான எடையை தக்க வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்யுங்கள்.ஆக்சலேட் அதிகம் நிறைந்த உணவுகளை தவிருங்கள்.

இந்த மருந்தை உட்கொண்ட பின் உங்களுக்கு சுவாசத்தில் பிரச்னை ஏற்பட்டாலோ அல்லது குறைந்த கால்சியத்தின் அளவு, உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள், சிறுநீரக நோய், நீர்தேக்கம் காரணமாக பாதம், கால்கள், கணுக்கால் வீக்கம், நீர் தேங்குதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரிடம் தெரிவிக்கவும்.

இந்த மருந்தினை டாக்டரின் ஆலோசனை பரிந்துரை இல்லாமல் யாரும் தானாகவே எடுத்துக்கொள்ள கூடாது. டாக்டரை சந்திக்கும்போது உங்களுக்கு ஏற்கனவே உள்ள உடலியல் பிரச்னைகள், அதற்காக நீங்கள் எடுத்து கொண்ட மருந்துகளை குறித்தும் டாக்டரிடம் முன்னதாகவே சொல்லிவிட்டால் அதற்கு தகுந்தாற்போல் மருந்துகளை அவர் பரிந்துரைப்பார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 March 2024 9:06 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  9. கரூர்
    கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு
  10. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு