கருப்பையில் பெண்களுக்கு வரும் நீர்க்கட்டிகள்..! அதன் அறிகுறிகள்..!

cyst meaning in tamil-பெண்களுக்கு கருப்பையில் நீர்கட்டிகள் இருந்தால் அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று இங்கு தரப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கருப்பையில் பெண்களுக்கு வரும் நீர்க்கட்டிகள்..! அதன் அறிகுறிகள்..!
X

cyst meaning in tamil-நேர் கட்டியிருப்பதால் ஏற்படும் வயிறு  வலி 

cyst meaning in tamil-நீர்க்கட்டி என்பது நீர்மத்தை உள்ளடக்கிய ஒரு தோல் பகுதி. மற்ற திசுக்களுடன் ஒப்பிடும்போது ஒரு தனித்துவமான உறைபோல காணப்படும். இது நீர்மம் நிரம்பிய செல்களின் தொகுப்பு ஆகும். அந்த குறிப்பிட்ட இடத்திற்குச் சுற்றியுள்ள அனைத்து உயிரணுக்களுடன் ஒப்பிடும் போது அது அசாதாரணமானது. நீர்க்கட்டியில் காற்று, திரவங்கள் அல்லது அரை-திடப் பொருட்கள் (கூழ்மம் போல்)இருக்கலாம்.

ஒருமுறை, ஒரு நீர்க்கட்டி வந்தால் சில சமயங்களில் தானே அழிந்துபோகும். சிலவை அழியாது வளரும் தன்மைகொண்டது. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும். ஆனால் அது அதன் வகை மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தது.

நீர்க்கட்டி இருப்பதற்கான அறிகுறிகள் :

தீராத இடுப்பு வலி

இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த இடத்தில் தான் கருப்பை உள்ளது. இந்த பகுதியில் அல்லது அதை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென்று பாரமாக இருப்பது போல் தெரியும். உடற்பயிற்சியின் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உணர முடியும்.

வயிறு வலி

கனமாக இருக்கும் அந்த பகுதியில் ஒருவித வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த வலி மிகவும் அதிகமாகும்போது இந்த கட்டி வளர்ச்சியுற்று பெரிதாகும் போது தானாக முறுக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் வலி இன்னும் தீவிரமடைகிறது. உடனே சிகிச்சை எடுப்பது நல்லது.

வயிறு வீக்கம்

cyst meaning in tamil-வயிறு வீக்கமடைவது என்பது ஒரு தெளிவற்ற அறிகுறி. கருப்பைக்குள் இருக்கும் நீர்க்கட்டியின் அளவைப் பொறுத்து வயிறு வீக்கம் தெரியலாம். பெரும்பாலான பெண்கள் 10செமீ க்கு குறைவான அளவு நீர்க்கட்டிகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் சில கட்டிகள் ஒரு பூசணி அளவிற்கு பெரிதாக வளரும் தன்மை கொண்டவை.

பல பெண்கள் இதனை எடை அதிகரிப்பு என்று கூறுவார்கள். ஆனால் அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு எதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும். அதனால் மருத்துவரை பார்ப்பது நல்லது.

நீர்க்கட்டி குறித்த பரிசோதனை

எப்போதும் வயிறு நிரம்பிய உணர்வு

கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரக்கூடியது. "ஒரு நீர்க்கட்டி வயிற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஒரு அழுத்தத்தை தரும் உணர்வாகும். இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ளவரை இடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வு தோன்றும்.

சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு

கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் வருவதுபோல தோன்றுதல்.சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

உறவில் வலி

கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.

முதுகு மற்றும் கால் வலி

cyst meaning in tamil-இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். இந்த கட்டிகள், இடுப்பின் பின்புறம் ஓடும் நரம்பை சுருக்கி விடுவதால் இடுப்பு வலி ஏற்படுகிறது. முழுமையான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம்.

Updated On: 5 July 2022 10:50 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
  2. தமிழ்நாடு
    ஒடிசா ரயில் விபத்து: பாலசோரிலிருந்து இன்று சென்னைக்கு வந்தடைந்த...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
  5. பொன்னேரி
    திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
  8. திருவள்ளூர்
    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச் சாலை பணிகளை நிறுத்த விவசாயிகள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்