கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை எப்படி தெரிஞ்சுக்கலாம்..?

covid symptoms in tamil-கொரோனா வைரஸ் பல திரிபுகளாக உருவெடுத்தது. அதில் ஒவ்வொரு திரிபுக்கும் அறிகுறிகள் கொஞ்சம் மாறுபாடானவை. அதை தெரிஞ்சிக்கலாம் வாங்க.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை எப்படி தெரிஞ்சுக்கலாம்..?
X

covid symptoms in tamil-கொரோனா அறிகுறிகள் (கோப்பு படம்)

covid symptoms in tamil-கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா போன்றவைகளை இங்கு தெரிந்துகொள்ளலாம் வாங்க.

கொரோனா வைரஸின் ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான் என பல வகையான திரிபுகள் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வந்தன.mமுந்தைய வகை கொரோனா வைரசில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளால் உண்டாகும் புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு 'திரிபு' (variant) என்று அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதுமே பல்வேறு திரிபுகள் உருவாகி பரவி வந்தன.

கொரோனா தொற்றின் அறிகுறிகள் என்ன?

 • தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடரும், 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும்.
 • காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும்.
 • வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.
 • சிலருக்கு தீவிரமான சளி ஏற்பட்ட அறிகுறிகள் வரலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஒமிக்ரான் திரிபின் அறிகுறிகள் என்ன?

ஸோ கோவிட் (Zoe Covid) எனும் செயலி மூலம் தங்களுக்கு ஏற்பட்ட கொரோனா அறிகுறிகளை பதிவிடுமாறு ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள். இதற்கு முன்பு மிகவும் பரவலான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா திரிபு மற்றும் தற்பொழுது உலக நாடுகளில் பரவி வரும் ஒமிக்ரான் திரிபு ஆகியவற்றுடன் உள்ள தொடர்பில் இரண்டுக்குமான அறிகுறிகளை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

covid symptoms in tamil

ஒமிக்ரான் தொற்று:

கீழ்காணும் 5 அறிகுறிகளும் ஐந்துக்கும் அதிகமாக தென்படுபவையாக இருந்தன. அவை

 • மூக்கு ஒழுகல்
 • தலைவலி
 • லேசான அல்லது தீவிரமான உடற்சோர்வு
 • தும்மல்
 • தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை எரிச்சல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களில் குறைந்தது 85% பேருக்கு மேற்கண்ட மூன்று அறிகுறிகளில் ஒன்று தென்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. யாராவது ஒருவருக்கு இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே இருப்பது, கொரோனா வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.

இந்த கோவிட்-19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.

கோவிட்-19 அறிகுறிகள் இருந்தால் ஒருவரின் உடலில் தொற்று உண்டான நேரத்தில் இருந்து உறுதியாக சராசரியாக ஐந்து நாட்கள் ஆகும். எனினும் 14 நாட்கள் வரை கூட ஆகலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

Updated On: 23 Aug 2022 6:14 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  ellu urundai benefits எள் உருண்டையில் எவ்வளவு சத்துகள் உள்ளது என்பது...
 2. சினிமா
  Taapsee Pannu In US-அமெரிக்க வீதிகளில் சுற்றி திரியும் டாப்ஸி
 3. சினிமா
  காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு?
 4. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா...
 5. சோழவந்தான்
  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய பூக்குழி விழா: திரளான பக்தர்கள்...
 6. சினிமா
  Madhavan birthday celebration special today- இன்று பிறந்த நாள்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் ஊடுபயிருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கும்...
 8. நாமக்கல்
  பெங்களூருவில் இருந்து நாமக்கல் வந்த விவிபேட் எந்திரங்கள்: கலெக்டர்...
 9. நாமக்கல்
  மாயமான இரு மகள்களை மீட்டுத்தரும்படி பெற்றோர் போலீஸ் எஸ்பியிடம் மனு
 10. லைஃப்ஸ்டைல்
  ennai kathirikai kulambu in tamil ஆஹா...சுவையோ...சுவை... சுவை சூடான...