இருமலால் அவதிப்படறீங்களா? எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாதுன்னு தெரிஞ்சுக்குங்க...

cough meaning in tamil- இருமல் வந்துவிட்டால், 'லொக்கு லொக்கு' என இருமலால் தொண்டை காய்ந்து, வறண்டு போகும். சில நேரங்களில், தொண்டை வறட்சியால் புண்களும் ஏற்படலாம். இருமல் நேரத்தி்ல் சாப்பிட வேண்டியவை, வேண்டாதவை குறித்து தெரிந்துகொள்வது நமக்கு நன்மை அளிக்கும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
இருமலால் அவதிப்படறீங்களா? எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாதுன்னு தெரிஞ்சுக்குங்க...
X

cough meaning in tamil- இருமல் பிரச்னையால் அவதிப்படறீங்களா?

cough meaning in tamil- சளி மற்றும் இருமல் பிரச்சினை அனைவருக்கும் பொதுவானதாகும், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. குளிர் காலத்தில் இருமல் பாதிப்பில்லாமல் நம்மை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம், அந்த நேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை, அறிந்து கொள்ள வேண்டும்.

மாறிவரும் வானிலை காரணமாக பெரும்பாலும் மக்களுக்கு இருமல் மற்றும் சளி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனினும், சில வீட்டு வைத்தியங்கள் இருமல் மற்றும் சளியை குணப்படுத்துகிறது. உணவு குழாய் மீது தொற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகளால் தொண்டைக்கு அருகிலுள்ள பகுதி பாதிக்கப்படுகிறது. தொற்று காரணமாக, ஒரு நபர் தனது தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதாக உணர்கிறார். இதன் காரணமாக, தொண்டை வலி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதனால்தான் மக்கள் தொண்டையில் இருந்து சளியை அகற்ற இரும்ப தொடங்குகின்றனர்.


அதிகப்படியான இருமல் ஏற்பட்டால், இரதத்தின் சில துளிகள் சளியுடன் வெளியேறுகிறது. சிலர் இதனை ஒரு பொதுவான பிரச்சினையாகவே கருதுகின்றனர். எனினும் சிலருக்கு, இருமல் மற்றும் சளியின் போது எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாதலே இருமல் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

இருமலைக் குணப்படுத்த, டாக்டர்கள் பல மருந்துகளைக் பரிந்துரைக்கின்றனர், இதனால் இருமலைக் குணப்படுத்த இயலும். எனினும், அவர்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பலருக்கு சளி மற்றும் இருமலில் என்ன சாப்பிட வேண்டும் என்று தெரியாது. அதுபற்றி தெளிவாக தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

இருமல் நேரத்தில் சாப்பிட வேண்டியவை


வெல்லம்

வெல்லத்தின் நுகர்வு, இருமலின் போது நன்மை பயக்கிறது. இருமல் பிரச்சினை உள்ள சமயங்களில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் உட்கொள்ள வேண்டும். வெல்லத்துடன் இஞ்சியை சாப்பிடுவது தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

வைட்டமின் சி பழங்கள்

வைட்டமின் சி பழத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் இருமல் பிரச்சினை குணமாகிறது. எனவே தக்காளி, பப்பாளி, கொய்யா ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

இஞ்சி தேநீர்

இஞ்சி தேநீர் குடிப்பது இருமலுக்கு நன்மை பயக்கிறது. இஞ்சி தேநீர் தொண்டை கபத்தை நீக்குகிறது. கூடுதலாக, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இஞ்சியில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, அவை சுவாச மண்டலத்திலுள்ள தொற்றுநோயை அகற்ற உதவுகின்றன.


பூண்டு

பூண்டு இருமலைத் தடுக்க உதவுகிறது. இருமல் பிரச்சினையைத் தடுக்க பூண்டு உட்கொள்ள வேண்டும். உடலின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த பூண்டு உதவுகிறது. பூண்டு மொட்டை சாப்பிட முடியாவிட்டால், அதை உணவில் கலந்து சாப்பிடலாம்.

சிக்கன் சூப்

கோழி சூப் இருமலுக்கு நிவாரணம் அளிப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிகவும் பழங்காலத்திலிருந்தே மக்கள் சளி மற்றும் இருமலை அகற்ற சூப் சாப்பிட விரும்புகின்றனர்.

அன்னாசி பழம்

அன்னாசி பழம் இருமல் பிரச்சினையை குணப்படுத்த உதவுகிறது. இதில் ப்ரோமலின் உள்ளது, இது சளியை வேரிலிருந்து அகற்ற உதவுகிறது. இருமல் பிரச்சினை இருந்தால், அன்னாசி பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.


எலுமிச்சை சாறு கலந்த தேன்

இருமலின் போது எலுமிச்சை சாறு கலந்த தேனைப் உட்கொள்வது மிகுந்த நிம்மதியை அளிக்கிறது. தேன் உட்கொள்வதால் தொண்டை புண் குறைக்கிறது. இது தவிர, தேன் தொண்டையில் உள்ள கிருமிகளை நீக்குவதால் தொண்டையிலுள்ள எரிச்சல் உணர்வையும், வலியையும் நீக்குகிறது. இருமல் பிரச்சினையிலிருந்து விடுபட, தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொள்ள வேண்டும்.

துளசி இலை

இருமல் மற்றும் மார்பில் எரிச்சல் உணர்வை குறைக்க, துளசி இலைகள் மிகவும் நன்மை பயக்கிறது. துளசியின் இலைகளை மார்பில் சூடாக வைத்திருப்பது நிம்மதியைத் தருகிறது, மேலும், துளசி இலைகளை மென்றும் சாப்பிடலாம்.

இருமலின் போது சாப்பிடக்கூடாதவை

புளிப்பு பழங்கள் கூடாது

எலுமிச்சை, ஆரஞ்சு, மொசாம்பி போன்ற புளிப்பு பழங்களை இருமலின் போது உட்கொள்ளக்கூடாது. அவை அனைத்தும் சிட்ரிக் அமிலத்தைக் கொண்டிருக்கின்றன. இது தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது தவிர, பேரிக்காய், அன்னாசி, பீச் போன்ற வேறு சில பழங்களை சாப்பிடலாம்.


கூல்டிரிங்ஸ், காபி, டீ கூடாது

இருமல் ஏற்பட்டால் கூல்ட்ரிங்க்ஸ், தேநீர், காபி மற்றும் எனர்ஜி பானம் போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இவை தவிர, ஏராளமான தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில், சூடான தண்ணீரை குடிப்பதன் மூலம் தொண்டை புண்ணுக்கு நிவாரணம் அளிக்கிறது.

குளிர்ச்சியான உணவுகள் கூடாது

குளிர்ச்சியான உணவுகள் சளியை ஊக்குவிக்கிறது மற்றும் இருமலை அதிகரிக்கிறது என்பதால் இருமலின் போது குளிர்ச்சியான உணவுகளின் உட்கொள்ளல் தவிர்க்கப்பட வேண்டும்.


புகை பிடிக்கக் கூடாது

புகைபிடிப்பது தொண்டையில் எரிச்சல் மற்றும் புற்றுநோயின் அறிகுறிகளை ஏற்படுத்தும் என்பதால் இருமலின் போது புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். புகைப்பிடிப்பவர் அருகில் இருந்தால் அவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்

பால் உணவு பொருட்கள் கூடாது

பால் உட்கொள்ளும் போது சளி அதிகரிக்கிறது, இதன் விளைவாக இருமல் உண்டாக்கிறது. எந்தவொரு பால் சார்ந்த உணவுப் பொருளும் நுரையீரலில் சளியை உருவாக்குகிறது. எனவே, இருமலில் பால் குடிக்க வேண்டாம்.

வெள்ளை உணவுகள் கூடாது

மக்கள் இருமலின் போது ப்ரோடஸ்ட் செய்த உணவைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, வெள்ளை ரொட்டி, வெள்ளை பாஸ்தா, சர்க்கரை நிறைந்த உணவுப் பொருள்களைத் தவிர்த்து, அதற்கு மாறாக பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.


எண்ணெய் பலகாரம் கூடாது

இருமலின் போது அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் எண்ணெய் நிறைந்த உணவு பொருட்கள் இருமலை மேலும் தூண்டுகிறது. குப்பை உணவுகளான (junk food), பக்கோடா பஜ்ஜி போன்றவற்றையும் தவிர்க்கவும்.

குளிர்ச்சியான குளிர்பானங்கள் கூடாது

சில டாக்டர்களின் கூற்றுபடி, இருமலின் போது குளிர்ச்சியான பழச்சாறுகளை குடிப்பதைத் தவிர்க்கவும். கார்பனேற்றப்பட்ட பானங்கள் வெள்ளை இரத்த அணுக்களை பாதிக்கின்றன. கூடுதலாக, இந்த பானங்களில் உள்ள அமிலம் இருமலை அதிகரிக்கிறது.

இருமல் மற்றும் சளி பிரச்சனையை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது போன்ற பிரச்சனைகளுக்கு, உடனடியாக அருகிலுள்ள டாக்டரை தொடர்பு கொள்ள வேண்டும்.

Updated On: 26 Jan 2023 9:55 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
  2. சிவகாசி
    சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ...
  3. மொடக்குறிச்சி
    ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் வளர்ச்சிப்பணிகள்:...
  4. இந்தியா
    தோனியின் ரீயாக்‌ஷன் நேரத்துடன் ஒப்பீடு.. மும்பை போலீசாரின் பதிவு
  5. இராஜபாளையம்
    திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த...
  6. திருப்பூர்
    ஜூன் மாதம், நூல் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியாளர்கள்
  7. தமிழ்நாடு
    புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள்...
  8. காஞ்சிபுரம்
    இரண்டாம் நாள் பிரம்மோற்சவ விழாவில் ஹம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள்
  9. சென்னை
    ஆவின் நிறுவனத்தின் அலட்சியம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
  10. ஆன்மீகம்
    manthralayam ragavendra temple history in tamil தெய்வீக அருளின் புனித...