coriander in tamil-கொத்தமல்லி தழை வாங்கலியோ..கொத்தமல்லி தழை..! கூவிக்கூவி சொல்லும் ஆரோக்யம்..!
coriander in tamil-கொத்தமல்லி பயிரிட்டுள்ள பகுதிக்கு நாம் செல்லும்போதே காற்றில் அதன் வாசனை பரவி நம்மை பரவசப்படுத்தும். அதன் நன்மைகளைத் தெரிஞ்சுக்குவோம்.
HIGHLIGHTS

coriander in tamil-கொத்தமல்லி தழை நன்மைகள் (கோப்பு படம்)
coriander in tamil-கொத்தமல்லி தழையில் பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளைக் கொண்டது. குழம்பு வைப்பதில் காய்ந்த கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. உடல்நிலை சரியில்லாதபோது கொத்தமல்லியை நன்றாக காய்ச்சி காப்பியாக கொடுப்பது வழக்கம்.
மருத்துவ நன்மைகள்
பச்சைத் தங்கம் என்று அழைக்கப்படும் கொத்தமல்லி சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. உடல் நலத்திற்கு பல அரிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகைகளில் ஒன்றாக கொத்தமல்லித் தழை விளங்குகிறது. ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட கொத்தமல்லித் தழை எல்லா சமையல் அறைகளிலும் அன்றாடம் சமையலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொத்தமல்லித் தழை சாம்பார் மற்றும் ரசத்தில் சேர்க்கப்படும் அதன் வாசனையும் சுவையும் அதிகரிக்கிறது.
coriander in tamil
உணவை அலங்கரிப்பதற்காகவும், கம கமவென வாசனைக்காகவும் மட்டுமே கொத்தமல்லித் தழை பயன்படுத்தப் பட்டு வருகிறது என்று பலரும் நினைப்பது தவறு. ஏனெனில் இதன் மருத்துவ குணத்தைப் பற்றி தெரிந்திருந்த நம் முன்னோர்கள் சமையலில் தவறாது கொத்தமல்லித் தழையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
கொத்தமல்லி தழையில் பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது.
நன்மைகள்
- உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, சாப்பிட்ட உணவை நன்கு ஜீரணம் ஆகச் செய்யும் தன்மை கொத்தமல்லித் தழைக்கு உள்ளது.
- புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளையும் சரி செய்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது.
- வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
- கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.
- கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச் சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்யமாக வளரும்.
coriander in tamil
தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழலாம்.