/* */

ரத்த ஓட்டத்தை சீராக்கும் கிராம்பு: மருத்துவக் குணங்கள் பற்றி தெரியுமா?......

உணவு சேர்க்கை பொருளான கிராம்பு அதிக மருத்துவக் குணங்களை கொண்டது என உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

ரத்த ஓட்டத்தை சீராக்கும் கிராம்பு:  மருத்துவக் குணங்கள் பற்றி தெரியுமா?......
X

கிராம்பு. (மாதிரி படம்).

உணவு சேர்க்கை பொருளாக கருதப்படும் கிராம்பில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

கிராம்பு ஒரு சிறந்த நுண்ணுயிர்க்கொல்லியாகும். பல பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடும் திறன் பெற்றது இந்தக் கிராம்பு. எனவேதான், பல பற்பசைகள், மவுத் வாஷ் உள்ளிட்டவை கிராம்பை உள்ளீட்டுப் பொருளாகக் கொண்டுள்ளன. கிராம்பு பல் மருத்துவத்தில் வலியை போக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு எண்ணெயில் உள்ள யுஜினால், ஸிங்க் ஆக்ஸைடு உடன் இணைத்து, பற்சொத்தைகளை அடைக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

கிராம்பு பாலுணர்வைத் தூண்டும் மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கிராம்பு ஒரு சிறந்த ஆண்ட்டி-இன்ஃப்ளமெட்டேரி ஏஜென்ட் ஆகும். கிராம்பில் ஃப்ளாவினாய்ட்ஸ் அதிகமாக உள்ளது தான் இதற்கு காரணம். இந்தக் குணமே,கிராம்பு எண்ணெய் வாத நோயை குணப்படுத்தவும் காரணம். கிராம்பு ஹைட்ரோ குளோரிக் அமிலச் சுரப்பினை அதிகப்படுத்தி, செரிமான மண்டலத்தின் அசைவுகளை (Peristalsis) அதிகரிக்கிறது.

கிராம்புப் பொடியை, தேனுடன் கலந்து, பருவில் தடவி வந்தால் முகப்பரு சரியாகும். கிராம்புப் பொடியை தண்ணீரில் கலந்து, காயங்களில் வைத்தால், காயம் சீக்கிரம் சரியாகும். பசியின்மை, வாந்தி வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை போன்ற பல வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருந்தாக கிராம்பு பயன்படுகிறது. கிராம்பு நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கிராம்பு நகத்தில் ஏற்படும் பூஞ்சைத்தொற்றிற்கு மருந்தாகவும் பயன்படுகிறது. சுவாசப் பாதையில் உள்ள சளியை வெளியேற்றுவதற்கும் கிராம்பு உதவுகிறது. சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) மற்றும் சைனுஸைட்டிஸ் போன்ற நோய்களுக்கு மருந்தாக கிராம்பு பயன்படுகின்றது. மேலும், நாசி பாதையை சுத்தப்படுத்தவும் கிராம்பு எண்ணெய் பயன்படுகின்றது. கிராம்பு நுரையீரல் புற்று நோய் மற்றும் தோல் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.

கிராம்பு ரத்த ஓட்டத்தினை சீராக்குகின்றது. கிராம்பின் இந்தப்பண்பு, கால் பகுதிகள் குளிர்ந்த நிலையில் இருப்பவர்களுக்குப் பயன்படும். கிராம்பு சர்க்கரை வியாதி உள்ளவர்களிடத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. கிராம்பு ரத்த உறைதலை கட்டுப்படுத்துகிறது. மதுவின் அடிமையிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், கிராம்பு மொட்டினை உறிஞ்சு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

கிராம்பு எண்ணெய் தசைப் பிடிப்பிற்கும் ஒரு மருந்தாக செயல்படுகிறது. கிராம்பு விழித்திரையில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றது. அதனால், வயதானவர்களின் பார்வைத் திறன் அதிகரிக்கும். கிராம்பின் காரமான நறுமணத்தை நுகர்ந்தால், ஒருவித சோர்வுத் தன்மையும், எரிச்சலும், தலைவலியும் சரியாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு சொட்டு கிராம்பு எண்ணெயை வாயின் மேல் அண்ணத்தில் வைத்தால், தலைவலி குறையுமாம்.

கிராம்பு நினைவுத்திறனை அதிகப்படுத்துகிறது. கிராம்பு ப்ளுபெர்ரீஸைவிட 400 மடங்கு சக்திவாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்ஸ் ஆகும். கிராம்பு ஹெர்ப்பிஸ் சிம்ப்ளெக்ஸ் என்ற வைரஸ்க்கு எதிராக மருத்துவ குணம் நிறைந்தது. கிராம்பின் எண்ணெயைக் கொசு விரட்டியாகவும் பயன்படுத்தலாம். கிராம்பு இலையின் எண்ணையானது தலையில் உள்ள பேண் மற்றும் பொடுகை அகற்றும் தன்மையுடையது என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 9 April 2023 6:29 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?