/* */

வைரஸ் தொற்றை விரட்டியடிக்கும் கிளெவிரா சிரப் ...படிச்சு பாருங்க..

Clevira Syrup Benefits-நம்முடைய உடல் ஆரோக்யத்தில் போதிய அக்கறை செலுத்தாவிடில் நோய்கள் வரிசை கட்டி நிற்கிறது. வந்த பின்னர் விழிப்போடு இருப்பதை விட வரும் முன் காப்பதே சிறந்தது.

HIGHLIGHTS

Clevira Syrup Benefits
X

Clevira Syrup Benefits

Clevira Syrup Benefits-உடல் ஆரோக்யத்தில் நாம் அனைவரும் தேவையான அக்கறையை செலுத்துவது மிக மிக முக்கியம். ஆனால் நம்மில் பலர் நேரம் இல்லை என்பதால் தினந்தோறும், உடற்பயிற்சி, யோக பயிற்சியை செய்யாததால் உடல் பருமன்அதிகரித்து நோய்களுக்கு வழி விடுகின்றனர். உடல் உழைப்பும் குறைந்து போனதால் நோய்கள் அனைத்தும் வரிசை கட்டி வரவேற்கிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறைந்தாலோ போதும் நம்மைகிருமிகள் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. தொற்று ஏற்பட்டாலோ உடல் ஆரோக்ய பாதிப்புகள் தானாக வந்துவிடும். பிறகுடாக்டரிடம் சென்று மருந்து ,மாத்திரைகள் குறைந்த பட்சம் 3 நாட்களுக்கு சாப்பிட்டால்தான் உடல் நலம் குணமாகிறது.

கொரோனா இது உலகையே கலக்கிய மிக கொடூரமான வைரஸ் தொற்று நோய். உலக நாடுகள் அனைத்துமே அதிர்ச்சியில் உறைந்து போய் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. கொரோனா நம்மை தாக்குவதற்கு மிக முக்கிய காரணம் நம்மிடம் எதிர்ப்பு திறன் குறைவே. ,இந்த கொரோனாவால் அதிக மக்கள் இறந்ததற்கு காரணமே போதிய நோய் எதிர்ப்பு திறன் இல்லாததே. இதுபோன்ற காலங்களில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க கூடிய மருந்துகளை நாம் உட்கொள்வதன் மூலம் எதிர்ப்பு திறனை பெறமுடியும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன. அவற்றுள் நிலவேம்பு கசாயம் ,மற்றும் கபசுர குடிநீர் ஆகும். இவைகள்தான் கொரோனா காலத்தில் அதிகம் மக்களால் பயன்படுத்தப்பட்டவை ஆகும்.தற்போது மூலிகைகளை கொண்டு தயாரித்த க்ளெவிரா என்ற ஆயுர்வேத மாத்திரை மற்றும் சிரப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .சென்னையைச் சேர்ந்த அபெக்ஸ் லேபரேட்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஆன்டி வைரல் மருந்து உடலிலுள்ள வைரஸ்களின் அளவைக் குறைப்பதை தவிர்த்து ரத்த வெள்ளையணுக்கள் பிளேட்லெட் மற்றும் லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கிறது. எனவே இது அனைத்து அறிகுறிகளில் இருந்து விரைவில் மீளச் செய்கிறது.

க்ளெவிரா சிரப் பல மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்ட மருந்து ஆகும். இதில் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட மூலிகைகள் உள்ளது. இந்த மருந்து பப்பாளி, காட்டுவேம்பு, நிலேவம்பு, காட்டுப்பேய்புடல், கோரைக்கிழங்கு, இஞ்சி, மிளகு, பற்படாகம் , சிந்திவ்கொடி போன்றவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும் எச்எஸ்வி-1 மற்றும் எச்எஸ்வி-2 வைரஸ்களை எதிர்க்கும் திறன் கொண்டது. மேலும் இம் மூலிகைகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு திறனை வளர்ப்பதோடு காய்ச்சலைத் தடுக்கும் குணம் கொண்டதாக உள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தோரின் த்ரோம்போசைட்ஸ் க்கு சத்து அளிக்க கூடிய மருந்தாகவும் விளங்குகிறது.மேலும் ஒரு சில காலங்களில் தோன்றக்கூடிய வைரஸ் தொற்றுகளை விரட்டியடிப்பதோடு நோய் எதிர்ப்புத்திறனையும் அளிக்கிறது. மேலும் சிக்குன் குனியா, மற்றும்டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்கும் காலத்தில் இம்மருந்தானது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

இம்மருந்தினை அனைவருமே சாப்பிட்ட பின்பு ஒரு வேளைக்கு 5 முதல் 10 மி.லி வரை உட்கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். அதுவும் டாக்டர்கள் எந்த மாதிரி கால இடைவெளியை அளவை பரிந்துரைக்கிறார்களோ அதேபோல் உட்கொள்ள வேண்டும். டாக்டர் பரிந்துரைக்கும் அளவிற்கு மேல் உட்கொள்ளக்கூடாது. இம்மருந்தால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும்ஏற்படாது என நிரூபிக்கப்பட்டுள்ளது,


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 27 March 2024 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!