/* */

cauliflower in tamil-அடேங்கப்பா 'காலிஃப்ளவர்'..! ஆமாங்க.. அசத்தல் மருத்துவ குணங்கள்..!

cauliflower in tamil-காலிஃப்ளவர் ஏதோ கூட்டு மற்றும் பொரியல் செய்வதற்கான காய் மட்டுமல்ல. அதன் மருத்துவ குணத்தை பார்த்தால் அசந்து போவீங்க.

HIGHLIGHTS

cauliflower in tamil-அடேங்கப்பா காலிஃப்ளவர்..! ஆமாங்க.. அசத்தல் மருத்துவ குணங்கள்..!
X

cauliflower in tamil-காலிஃப்ளவர் மருத்துவ பயன்கள்.(கோப்பு படம்)

cauliflower in tamil-நமது சமையலில் கூட்டு, பொரியல் செய்வதற்கு ஏற்ற ஒரு காயாக காலிஃப்ளவர் இருக்கிறது. தொன்றுதொட்டே காலிஃப்ளவர் பல நாடுகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காலிஃப்ளவரில் இருக்கும் முழுமையான சத்துகள் கிடைப்பதற்கு 5 நிமிடத்திற்குமேல் காலிஃப்ளவரை அனலில் சமைக்க கூடாது என்கின்றனர் ஊட்டச் சத்து நிபுணர்கள். நடுத்தர மற்றும் வயதானவர்களுக்கு உடல் வலிமை கிடைக்கவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யவும் காலிஃப்ளவருக்கு தனி சக்தி உண்டு.

இவ்வளவு அரிய இயற்கை உணவாக இருக்கும் காலிஃப்ளவரின் பிற பயன்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.


காலிஃப்ளவர் பயன்கள்

புற்று நோய்க்கு

காலிஃப்ளவர் புற்றுநோயை குறைப்பதிலும், புற்று நோய் ஏற்படாமல் தடுக்கவும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. மேலும் நடுத்தர வயது ஆண்களில் ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய்களைத் தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் குடல், ஈரல் சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை காலிஃப்ளவர் கொண்டிருக்கிறது.

cauliflower in tamil


இதய நோய்களை தடுப்பதில்

உலகில் பலருக்கு இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. அதற்குப் பிரதான காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே . காலிஃப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.


குழந்தையின் மூளை வளர்ச்சி

காலிஃப்ளவரில் கோலைன் எனப்படும் ஒரு வேதிப்பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த கோலின் எனப்படும் வேதிப்பொருள் வைட்டமின் ' டி' சத்தை சேர்ந்ததாகும். கோலைன் மூளையின் வளர்ச்சி மற்றும் செயலாக்க திறனுக்கு மிகவும் உதவுகிறது. அதிலும் குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்கள் கோலைன் சத்து நிறைந்த காலிஃபிளவரை உண்பதால், வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் செயல் திறன் சிறப்பாக இருக்க உதவுகிறது. கோலைன் அதிகம் நிறைந்துள்ள காலிஃபிளவரை அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஏற்பட்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களின் ஞாபகத் சக்தி மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

cauliflower in tamil


மூட்டு வலி, வீக்கம்

காலிஃப்ளவரில் பீட்டா- கரோட்டின், குவர்செட்டின், சின்னமிக் அமிலம், பீட்டா கிரிப்டோசேந்தின் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இவை இரத்தத்தில் ஆக்சிஜன் உறிஞ்சலை அதிகப்படுத்தி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. மேலும் காலிஃப்ளவரில் பியூரின் என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது மூட்டுக்களில் ஏற்படும் வலி, வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது. மூட்டு வலி உள்ளவர்கள் காலிஃப்ளவரை தொடர்ந்து சாப்பிட்டு வர, அதிலிருக்கும் பியூரின் வேதிப்பொருள் மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றை குணமாக்குகிறது.


உடல் எடை குறைய

பொதுவாகவே ஒருவருக்கு உயரத்தத்திற்கு ஏற்ற எடை இருப்பது முக்கியம். ஆனால் இன்று உணவு பழக்கவழக்கத்தால் பலருக்கும் உடல் எடை பிரச்னை இருந்து வருகிறது. உடல் எடையை சீக்கிரம் குறைக்க குறிப்பிட்ட சில சத்துக்கள் அடங்கிய உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. காலிஃப்ளவரில் சல்பராபேன் மற்றும் வைட்டமின் 'சி' சத்துகள் அதிகம் உள்ளது. காலிஃப்ளவரில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் லெப்டின் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கச் செய்து, உடலின் வளர்சிதைமாற்றத் திறனை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.

cauliflower in tamil

எலும்புகள் வலிமை பெற

உடல் கட்டமைப்பில் முக்கியமாக இருப்பது எலும்புகள் தான். எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் 'கே' சத்து அடிப்படையாக இருக்கிறது. இந்த வைட்டமின் 'கே' சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. காலிஃப்ளவரில் வைட்டமின் 'கே' சத்து அதிகம் இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை காலிஃப்ளவர் சேர்த்து உணவாக சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. மேலும் இந்த வைட்டமின் 'கே' சத்து எலும்புகளுக்குத் தேவையான கால்சியத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றம் செய்வதை தடுக்கிறது.


சிறுநீரகங்கள்

இரத்தத்தில் இருக்கும் அனைத்து கழிவுகளையும் சிறுநீர் மூலமாக வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரகங்கள் சிறப்பாக இருக்க சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காலிஃப்ளவரில் பைட்டோ என்னும் வேதிப் பொருள் தாராளமாக உள்ளது. காலிஃப்ளவரை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சிறுநீர்த் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுவதோடு சிறுநீர்ப் பையில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

cauliflower in tamil


கண்பார்வை

கண்களுக்கு போதுமான நீர்ச் சத்து இருப்பது அவசியம். வயது மூப்பு காரணமாக அனைவருக்குமே கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சி குறைகிறது. இதனால் கண்கள் நீர்மத்தன்மை இழந்து வறட்சியாக காணப்படும். அவ்வாறானவர்கள் காலிஃப்ளவரை சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் சல்போரபேன் சத்து கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. அதோடு எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

ஹார்மோன் சுரப்பிகள் சீராக

உடலில் பல்வேறு செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு நாளமில்லா சுரப்பிகள் சுரக்கின்ற ஹார்மோன்களே காரணம். இந்த ஹார்மோன் சுரப்பிகள் சீராக இருக்க ஆன்ட்டி – ஆக்ஸிடென்டுகள் நிறைந்த காலிஃப்ளவர் சாப்பிடுவது அவசியமாகும்.

குறிப்பாக பெண்களின் உடலில் சுரக்கின்ற ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் சமநிலை இல்லாத தன்மையை சீர் செய்யும் ஆற்றல் காலிஃப்ளவரில் அதிகம் இருக்கிறது. இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பல வேதிப்பொருட்களும் உள்ளன.

cauliflower in tamil


நச்சுத் தன்மை

இன்று சாப்பிடும் அல்லது குடிக்கும் பல உணவு வகைகள் நச்சுகள் நிறைந்ததக்க இருக்கின்றன. இவை உடலில் சிறிது சிறிதாக சேர்ந்து எதிர்காலத்தில் பல உடல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காலிஃப்ளவரில்,சல்பர் கூட்டுப் பொருட்கள் மற்றும் குளுக்கோஸிநோலேட்டுகள் ஆகிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. அதனால் காலிஃப்ளவரை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் நச்சுத்தன்மை வெளியேறி உடல் தூய்மையாக இருக்கும்.

Updated On: 9 Feb 2023 12:02 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  2. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  4. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  5. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்