/* */

பல நோய்களைக் கட்டுப்படுத்தும் கைக்குத்தல் அரிசி? ....உங்களுக்கு தெரியுமா?....

Brown Rice Meaning in Tamil-நாம் அன்றாடம் சாப்பிடும் சாதமானது நெல்லில் இருந்த பெறப்பட்ட வெள்ளை அரிசியில் சமைக்கப்படுகிறது. ஆனால் கைக்குத்தல் அரிசியில் அதிக சத்துகள் உள்ளன.

HIGHLIGHTS

Brown Rice Meaning in Tamil
X

Brown Rice Meaning in Tamil

Brown Rice Meaning in Tamil

கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழகத்தில் விளைந்த அரிசி ரகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதாவது நெற்பயிர்கள் அனைத்தும் செழித்து வளரும். தழை, இலை, சாண எரு,உள்ளிட்டவைகளை கலந்து நிலத்தில் இட்டு விதை நெல்லை விதைத்து பயிர்களை வளர்த்தனர் அக்காலத்தில். ஆனால் இடைப்பட்ட காலத்தில் பெருகி வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக எந்த ஒரு பயிருக்கும் சரி, காய்களுக்கும் சரி அதன் பூரண காலம் முடியும் முன்னே அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ரசாயன உரமிட்டு விரைவாகவே குறுகிய காலத்திலேயே வளரும் பயிராகிறது.

இதேபோல் பல சாகுபடிகளில் கலப்பினங்களும் அறிமுகப்படுத்தி விட்டதால் கொய்யா உட்பட பல காய்களின் சைஸ் மிகவும்பெரிதாக காணப்படுகிறது. காய்கள் பெரியதாக இருந்தாலும் சுவை அவ்வளவாக இல்லையே. இதுபோல் பல குழப்பங்கள் விவசாயத்திலேயே வந்துவிட்டது. எல்லாவற்றையும் அக்காலத்தில் பொறுமையாகவே செய்தனர். எந்தவித கலப்புகளும் இல்லாமல். ஆனால் காலப்போக்கில் எல்லாம் தலைகீழ் மயம் ஆகிவிட்டது.

கிச்சிடி, பவானி, ஐஆர் 8, ஐஆர் 20 போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் அக்காலத்தில் நெல் மற்றும் அரிசியின் ரகங்கள் இருந்தன. ஆனால் இக்காலத்தில் உள்ள அரிசிகளின் பிராண்டுகளே 100 க்கும் மேல் இருக்கும்போல் தெரிகிறது. இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம் என்றால் வியாபாரியே குழப்பமாகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். நாம் சாப்பிடும் அரிசியில் போதிய சத்துகள் உள்ளனவா? என பலருக்கும் சந்தேகமே எழுகிறது. எல்லாவற்றிலும் கலப்படம்தான் பிரதானமாக உருவெடுத்து வருகிறது. அரிசியில் இல்லாமல் இருக்குமா? என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. ஆனால் நாம் பார்க்கப்போகும் தலைப்பின் பெயர் பிரவுன் அரிசி. இந்த அரிசிக்கும் சாதாரண அரிசிக்கும் என்ன வித்தியாசம்? சத்தானதா? சாப்பிடலாமா? என்பதைப் பற்றிப் பார்ப்போமா?

கைக்குத்தல் அரிசி

கைக்குத்தல் அரிசி என்பது அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் சத்துகள் மிகுதியாக உள்ளது. கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால் .

கைக்குத்தல் அரிசியில் உமி நீக்கப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. வெள்ளை அரிசியில் பல கட்டங்களாக தோல் நீக்கப்படுவதால் ஊட்டச்சத்து குறைகிறது.

*கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நம்உடலிலுள்ள கொழுப்பைக்குறைக்க உதவுகிறது. உடல் பருமனானவர்கள் தங்கள் எடையைக் குறைப்பதில் இந்த அரிசியானது முக்கிய பங்காற்றுகிறது.

*நார்ச்சத்து இந்த அரிசியில் அதிகம் உள்ளதால் செரிக்க அதிகமான சக்தி தேவைப்படுகிறது. அதனால் பசியை நீண்ட நேரம் கட்டுக்குள் வைத்து அதிக அளவில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க உதவுகிறது.

*நமக்கு தேவையான 80 சதவீத மாங்கனீ்சை இந்த அரிசி தருகிறது. மேலும் பலவகை அரிசிகளான பாஸ்மதி,ஜாஸ்மின், சுஷி அரிசிகளிலும் தற்போது கைக்குத்தல்அரிசி வந்துள்ளது.

*இதில் அதிக செலினியம் இருப்பதால் பெருங்குடல்புற்று நோய் வருவதற்கான வழிகளைக் குறைக்கிறது. இந்த அரிசியில் நார்ச்சத்து அதிக அளவு இருப்பதால் புற்று நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

*இந்த அரிசியில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டான லிக்னான் மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக தற்காத்துக்கொள்ள உதவுகிறது.

வயதான பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற முழு தானிய உணவுகள் சாப்பிடும்போது என்டரோலேக்டோன் அளவுகளை அதிகரித்து, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

*இந்த அரிசியில் கொழுப்பைக் குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது. இந்த அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலிலுள்ள கொழுப்பைக்குறைக்கும் என்று அறியப்படுகிறது.

*இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இதய நோய் அபாயத்தினைக் குறைக்க உதவுகிறது. மேலும் ஒரு சில ஆராய்ச்சியில் கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தினைக் குறைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். மேலும் ரத்தக்குழலில் ப்ளேக் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதைக் குறைக்கலாம்எனவும் கண்டறிந்துள்ளனர்.

*கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உணவின் கலோரி அளவைக்கட்டுப்படுத்தி அதிக உணவை உட்கொள்வதைத் தடுக்கிறது. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவை சாப்பிட்டபெண்களின் உடல் எடை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கு மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் குறைவே. அந்த வகையில் இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னையைச் சரி செய்யும். இதனால் குடல் இயக்கங்கள் சீராக இருக்கும்.

*சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த அரிசியினைச் சாப்பிட்டால் சுகரின் அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். இதற்கும் நார்ச்சத்துதான் துணைபுரிகிறது.

*சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அந்த வகையில் நம் உடல்ஆரோக்யமாக இருந்தால்தான் நம்மால் வேலைகளைச் செய்யமுடியும். அதற்கு வலுவான எலும்புகள் அவசியம் தேவை. எலும்புகளை வலுப்படுத்த வேண்டும் எனில் மெக்னீசியம், கால்சியம் சத்துகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த அரிசியின் ஒரு கப்பில் 21 சதவீத மெக்னீசியம் உள்ளது .இந்த மெக்னீசியத்தால் எலும்புகள் கால்சியம் மற்றும் பிற சத்துகளை உறிஞ்சுகிறது.

*கைக்குத்தல் அரிசியில் அதிக அளவிலான மெக்னீசியம் இருப்பதால் இது ஆஸ்துமா நோயினையும் கட்டுப்படுத்துகிறது. பல ஆய்வுகள் இதனைத் தெரிவித்துள்ளன. செலினியம் ஆஸ்துமாவிற்கு எதிராக செயல்படக்கூடியது என்பதால்நிச்சயம் நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.

*பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாதலைக் குறைக்க உதவுகிறது.

*ஆரோக்யமான நரம்பு மண்டலத்திற்குத் தேவையான மாங்கனீசு இந்த அரிசியில் அதிகம் இருப்பதால் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி, பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

அமெரிக்க வேளாண்மைத் துறையின் கூற்றுப்படி, 1 கப் (185 கிராம்) வெள்ளை அரிசியில் 242 கலோரிகள், 4.43 கிராம் புரதம், 0.39 கிராம் கொழுப்பு, 53.2 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் 0.56 கிராம் நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

1 கப் (200 கிராம்) பழுப்பு அரிசியில் (Brown Rice) 248 கலோரிகள், 5.54 கிராம் புரதம், 1.96 கிராம் கொழுப்பு, 51.7 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 3.23 கிராம் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இது தவிர, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை வெள்ளை மற்றும் பழுப்பு அரிசி இரண்டிலும் காணப்படுகின்றன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 6:24 AM GMT

Related News