brahmi in tamil-ஞாபக சக்திக்கு வல்லாரை..! உங்க குழந்தைகளுக்கு வல்லாரை சாலட் செய்து கொடுங்க..!

brahmi in tamil-வல்லாரை மூளை இல்லாதோரையும் சிந்திக்க வைக்கும் அற்புத மூலிகைக் கீரையாகும்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
brahmi in tamil-ஞாபக சக்திக்கு வல்லாரை..! உங்க குழந்தைகளுக்கு வல்லாரை சாலட் செய்து கொடுங்க..!
X

brahmi in tamil-பிராமி என்கிற வல்லாரை பயன்கள் (கோப்பு படம்)

brahmi in tamil-சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் ஏராளமான மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மூலிகைகள் மருத்துவ குணங்கள் செறிந்து காணப்படுகின்றன. அந்த வகையில் பிராமி என்று சொல்லப்படும் வல்லாரை கீரை நினைவாற்றலுக்கு அற்புதமான ஒரு கீரை ஆகும். மேலும் கூந்தல் வளர்ச்சி போன்ற ஏராளமான பயன்பாட்டுக்கு சிறந்த மூலிகையாக விளங்குகிறது.


மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தவும், நினைவுகளை தக்க வைக்கும் திறனை அதிகரிக்கவும் வல்லாரை சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும், பதற்றமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சைமர் நோய், அனிஸிட்டி பிரச்னை, கவனக் குறைவு, அழற்சியை போக்க என்று வல்லாரையின் நன்மைகள் ஏராளம். இது எதற்கெல்லாம் பயன்படுகிறது? இதை சுவையாக செய்து எப்படி சாப்பிடுவது போன்றவைகளை பார்ப்போம் வாங்க.

brahmi in tamil

​வல்லாரை கீரை

பிராமி என்று அளிக்கப்படும் வல்லாரை பல கிளைகளைக் கொண்ட கொடி போன்ற ஒரு தாவரமாகும். இது சதைப்பற்றுடன் காணப்படும். இது வேரூன்றி, நிலத்தில் படரும் தன்மை கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 4400 அடி உயரத்தில் வல்லாரை காணப்படுகிறது.

ஈரமான மண், ஆழமற்ற நீர் மற்றும் சதுப்பு நிலங்களில் இயற்கையாக இது வளரக் கூடியது . இதில் நான்கு அல்லது ஐந்து இதழ்களுக்கு மிகாமல் வெளிர் ஊதா அல்லது வெள்ளை நிறத்தில் சிறிய பூக்கள் காணப்படும். சிறிய நீர்த்தேக்கங்களில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்பமண்டலங்களில் உள்ள சதுப்பு நிலப் பகுதிகளில் வளர்கிறது. இதன் சிறப்பே முழு தாவரமும் மருந்தாக பயன்படுவதே. இதன் சுவை சிறிது கசப்பாக இருந்தாலும் இனிப்பூட்டும் சுவையுடனும் இருக்கும். உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்க கூடியது. மூளைக்கு சிறந்த ஊக்கியாக செயல்பட்டு மன அழுத்தத்தை விரட்டும் டானிக்போல உள்ளிருந்து செயல்படுகிறது.

brahmi in tamil


​மன அழுத்தம் குறைய

வல்லாரையில் மன அழுத்தத்தை கொடுக்கும் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கும் ஆற்றல் உள்ளது. எனவே வல்லாரைக் கீரையை மன அழுத்தம் உள்ளவர்கள் உணவில் சேர்த்து வந்தால் மன அழுத்தம் மற்றும் அனிஸிட்டி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

அல்சைமர் தீர

மூளைக்கு சேதம் விளைவிக்கும் நியூரானில் அமிலாய்டு கலவை இருப்பதால் நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டு அல்சைமர் நோய் உண்டாகிறது. பிராமியின் பாகோசைடுகள் எனப்படும் உயிர் வேதியியல் மூளைச் செல்களை பாதிக்கும் கலவையை நீக்கி பாதிப்படைந்த மூளை செல்களை சரி செய்கிறது. இதனால் அல்சைமர் அறிகுறிகளை குறைக்க முடியும்.

​நினைவாற்றல் அதிகரிக்கும்

வல்லாரை நினைவாற்றலை அதிகரிக்கும் அதிசய மூலிகை. நினைவாற்றல் மற்றும் செறிவிற்கு காரணமான மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இது நேர்மறையான விளைவை ஏற்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. எனவே, மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி உட்கொண்டால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். இது அவர்களின் தேர்வுக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். வல்லாரை மூலிகையின் தோற்றமே மூளை வடிவத்தில் காணப்படுவது இதன் சிறப்பு ஆகும். அதனால் நம் மூளையின் செயல்பாட்டிலும் இது பெரிய பங்கினை வகிக்கிறது.

brahmi in tamil


​நோய்கள் தாக்காது காக்கும்

வல்லாரையில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்கள் ஏராளமாக உள்ளன. இது செல்கள் பிறழ்ச்சி அடைந்து புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் நோய்கள் அண்டாமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடன்கள் உதவுகின்றன. வல்லாரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய் தானக்கண்கள் குறையும்.

இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் எந்தவித தொற்று நோயும் நெருங்காமல் இருக்க அடிக்கடி வல்லாரையை உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானதாகும்.

brahmi in tamil

​அழற்சி சம்பந்தமான எலும்பு நோய்

வல்லாரையில் ஆர்த்ரிட்ஸ், கெளட் போன்ற முழங்கால் பிரச்னையை போக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதேபோல வாயு பிரச்னை, அல்சர், எரிச்சலுடன் மலம் வெளியேறுதல் போன்ற பிரச்னைகளை வல்லாரை களைகிறது.

இரத்த சர்க்கரையை பராமரிக்க

இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் ஹைப்போகிளைசீமியா போன்ற நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க வல்லாரை பெரிதும் உதவுகிறது. எனவே, சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வல்லாரையை உணவில் சேர்த்து வரலாம். இது அவர்களுக்கு ஏராளமான நன்மைகளை தரும். சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.


​கூந்தல் வளர்ச்சியில் வல்லாரை

கூந்தல் மற்றும் தலைச் சருமம் வறண்டு போய் காணப்பட்டால் அதற்கு வல்லாரை எண்ணெயைப் பயன்படுத்தி வரலாம். காரணம் வல்லாரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மயிர்க்கால்களை உயிரூட்டி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

மேலும் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி சரும செல்களை புதுப்பிக்கிறது. எனவே தலையில் அரிப்பு, பொடுகு, பிளவுபட்ட கூந்தல் இருப்பவர்கள் வல்லாரை எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சீக்கிரமாகவே கூந்தல் பிரச்னை தீரும்.

​வெட்டுக்காயம் மற்றும் சரும காயங்களை ஆற்ற

வெட்டுக்கள் மற்றும் சரும காயங்கள் ஏற்பட்ட இடத்தில் வல்லாரையை வைத்தால், வெட்டப்பட்ட இடத்தில் ஹீமோடைனமிக்ஸை தூண்டி வெட்டுக்கள் மற்றும் காயங்களை சீக்கிரமே காய்ந்து போக உதவி செய்கிறது. மேலும் பழைய வடுக்கள் செல்களை புதுப்பித்து வடுக்கள் மறைய உதவுகிறது.

brahmi in tamil

மன அழுத்தம் போக்கும் வல்லாரை டீ

வல்லாரை இலைகளை உலர்த்தி காய வைத்து வல்லாரை பானம் (டீ ) தயாரிக்கின்றனர். இந்த வல்லாரை பொடியை போட்டு டீ குடித்தால் மனதிற்கு அமைதியை தந்து அனெக்ஸிட்டி மற்றும் மன அழுத்தத்தை போக்குகிறது.

வல்லாரை சாலட் எப்படி செய்வது ?

இதை செய்து ஒரு தடவை சூடாக சோறில் பிசைந்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் அதை கேட்பீர்கள். அட ஆமாங்க..நீங்களும் செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

வல்லாரை கீரை தேவையான அளவு

சின்ன வெங்காயம் 10

பச்சை மிளகாய் -காரத்துக்கு ஏற்ப (3 முதல் 4)

நன்கு பழுத்த 1 தக்காளி

எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி அளவு

உப்பு தேவையான அளவு

brahmi in tamil

செய்முறை

வல்லாரை கீரையை பொடியாக நறுக்கி குண்டான பாத்திரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி இவைகளையும் பொடியாக நறுக்கி வல்லாரைக் கீரையுடன் சேருங்கள். பின்னர் உப்பு தேவையான அளவு சேர்த்து கையால் நன்றாக பிசையுங்கள். வல்லாரை, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி எல்லாம் நன்றாக உறவு சேரும் வரை பிசைந்து ஒரு அரைமணி நேரம் மூடி வைக்கவும். பின்னர் எடுத்து எலுமிச்சை சாறை அதன் மேல் பகுதியில் ஊற்றி நன்றாக கிளறி விடுங்கள்.

இப்போது சுவையான வல்லாரை சால்ட் ரெடி. சூடான் சோறில் இதை பிசைந்து சாப்பிட செம டேஸ்ட்..செய்து சாப்பிட்டுப் பாருங்க. உங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு காரத்தை குறைத்து பயன்படுத்தலாம். இந்த வல்லாரை சாலட் சமைக்காமல் நேரடியாக குழந்தைகளுக்கு உணவாக்குவதால் உடனடி பலன் கிடைக்கும். குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

சட்னி

வல்லாரையை சட்னியாக இட்லி மற்றும் தோசைக்கும் பயன்படுத்தலாம்.

Updated On: 23 Dec 2022 11:27 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  ennai kathirikai kulambu in tamil ஆஹா...சுவையோ...சுவை... சுவை சூடான...
 2. சினிமா
  Siddharth shares interesting news about Indian 2- ‘இந்தியன் 2 படம்,...
 3. திருத்தணி
  திருவள்ளூர் அருகே தந்தை கண்டித்ததால் விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை
 4. இந்தியா
  டெல்லி மெட்ரோவில் பாடலுக்கு நடனமாடும் சிறுமி: வீடியோ வைரல்
 5. இந்தியா
  ஐஐடியில் ஜாதிய பாகுபாடு : மாணவர் தற்கொலை
 6. டாக்டர் சார்
  elakkai benefits in tamil அடேங்கப்பா..... ஏலக்காயில் இவ்வளவு ...
 7. சினிமா
  லியோ பர்ஸ்ட் லுக் விரைவில்! அறிவிப்பு எப்ப வருது தெரியுமா?
 8. தஞ்சாவூர்
  எஸ்.சி , எஸ்.டி தொழில் முனைவோருக்கென தனிச்சிறப்புத் திட்டம்
 9. உலகம்
  அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
 10. தமிழ்நாடு
  பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக...