என்னது..! கருப்பு கவுனி அரிசியில் இத்தனை மருத்துவ குணங்களா..? : படிச்சு பாருங்க..

கருப்பு கவுனி அரிசியில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளதுடன் பல மருத்துவ நன்மைகளையும் அளிக்கிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
என்னது..! கருப்பு கவுனி அரிசியில் இத்தனை மருத்துவ குணங்களா..? : படிச்சு பாருங்க..
X

கருப்பு கவுனி அரிசி.

கருப்பு கவுனி அரிசி, பண்டைய சீனாவை பூர்வீகமாக கொண்டது. பண்டைய சீன மன்னர்கள், அரச குடும்பத்தினர், மந்திரிகள் பெரும் வியாபாரிகள் மற்றும் பணக்காரர்கள் இந்த அரிசியை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

இந்த கருப்பு கவுனி அரிசி தமிழகத்துக்கு எப்பிடி வந்தது என்ற வரலாற்றை பார்ப்போம்.

பண்டைய தமிழ் மன்னர்களுக்கும், சீன மன்னர்களுக்கும் கப்பல் போக்குவரத்து மூலமாக வணிகம் நடைபெற்று வந்தது. அவ்வாறு நடந்த வியாபாரம் காரணமாக கருப்பு கவுனி அரிசி தமிழகம் வந்தடைந்தது.

கருப்பு கவுனியும் அரச விருந்தும்:

சீன அரசர்கள் தங்கள் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கருப்பு கவுனியால் செய்யப்பட்ட விருந்தளித்து உபசரித்தனர் என்பது வரலாற்றில் தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் கருப்பு கவுனி அரிசி பயன்படுத்த தடைசெய்யப்பட்டது. அதனால் கருப்பு கவுனி அரிசியை தடை செய்யப்பட்ட அரிசி என்றே அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள். அரசரின் கட்டளையை மீறி பொதுமக்கள் யாரேனும் கருப்பு கவுனி அரிசியை பயன்படுத்தினால் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். ராஜ போக பயன்பாடுகளுக்கு மட்டுமே கருப்பு கவுனி அரிசி பயன்பட்டு வந்தது. கருப்பு கவுனி நிறம் கருப்பாக இருப்பதற்கு காரணமே, அந்த அரிசியில் உள்ள ஆந்தோசயனின் எனும் மூல வேதிப்பொருள் தான். அதன் நிறத்தாலேயே அந்த கருப்பு கவுனி என்றழைக்கப்பட்டது.

கருப்பு கவுனி அரிசியின் எக்கச்சக்க பயன்கள்:

 • கருப்பு கவுனி அரிசியில் உள்ள அந்தோசயனின், சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்- ஆக செயல்படுகிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இருதய நோயை தடுப்பதற்கும், மூளை செயல்பாட்டினை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
 • கருப்பு கவுனி அரிசியில் புரதம், வைட்டமின் ஈ, பி 2, பி 3, பீட்டா கரோட்டின் மற்றும் கால்சியம், மெக்னீசியம், குரோமியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற பல இயற்கையாக கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது.
 • கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து நிறைந்த பொருளாகும். இயற்கையான தாவர வேதிப்பொருளான பைட்டோநியூட்ரியண்ட்ஸ் அதிக அளவில் இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அதன் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு மூலம் தேவையற்ற பொருட்களை அகற்ற அது உதவுகிறது.
 • இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அலர்ஜி மற்றும் கேன்சர் நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் ஆன்டிகான்சர் பண்புகள் உள்ளன. இதில் ஆந்தோசயனின் என்ற தாவரக் கலவை இருப்பதால் இது ஊதா கலந்த கருப்பு நிறத்தை அளிக்கிறது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
 • இது புற்றுநோய்க்கு எதிரானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிலிட்டரி யுனிவர்சிட்டி, சீனாவில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில் இது கேன்சர் செல்களை குறைப்பதாகவும் மற்றும் மார்பக புற்றுநோயை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
 • இந்த அரிசி தோல்களில் உள்ள ஒவ்வாமை (அலர்ஜி) உடன் தொடர்புடைய நோய்களுக்கு சிறப்பாக செயல்படுகிறது.
 • கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து மற்றும் குறைந்த மாவுச்சத்து உள்ளதால் உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. அதனால் வெள்ளை அரிசிக்கு மாற்றாக கருப்பு கவுனி அரிசி மற்றும் கைக்குத்தல் அரிசி உட்கொள்வதன் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும்.
 • உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் இதயத்தின் ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.
 • கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை சுத்திகரிக்க உதவுகிறது.கருப்பு கவுனி அரிசி கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் 'ட்ரைகிளிசரைட்' மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால் ஃபேட்டி லிவர் எனப்படும் கொழுப்பு கல்லீரல் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
 • இந்த அரிசியில் உள்ள ஆன்தோசயனின் எனும் வேதிப்பொருள் ஆக்சிடென்ட் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் மற்றும் மூளையில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
 • இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்து, அந்தோசயனின் போன்றவை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 • இதில் இயற்கையாகவே 'க்ளூட்டன்' எனப்படும் ஒட்டும் வேதிப்பொருள் கிடையாது. இதனால் கருப்பு கவுனி அரிசி தினசரி பயன்படுத்த 'க்ளூட்டன்' அலர்ஜியில் இருந்து விடுபடலாம்.
 • மூச்சுக் குழாய்களில் உள்ள நீர்க்கோர்வை அல்லது சளியால் ஏற்படும் பாதிப்புகள், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு கருப்பு கவுனி அரிசி அன்றாடம் உட்கொள்ள அதில் இருந்து விடுபடமுடியும். பயன்படுத்துவோம், நன்மையடைவோம்.
Updated On: 13 Sep 2021 7:35 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  health quotes in tamil சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்:...
 2. சோழவந்தான்
  கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு: தலைவர் மீது புகார்.
 3. ஆன்மீகம்
  nainamalai temple சிவபெருமானின் முக்கிய தலமாக விளங்கும் நைனாமலைக்...
 4. தமிழ்நாடு
  மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
 5. இந்தியா
  மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
 6. இந்தியா
  சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
 7. தமிழ்நாடு
  இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...
 8. இந்தியா
  இந்திய மாணவா்களுக்கு குறைந்த விலையில் மடிக்கணினி
 9. சோழவந்தான்
  வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், ரத்த தான முகாம்:
 10. சினிமா
  அவன் என் மாமனா மச்சானா? கொந்தளித்த மாயா..!