கருப்பு பூஞ்சை பாதிப்பை எப்படி கண்டறிவது? யாரை பாதிக்கும்? தெரிஞ்சுக்கங்க..!

Black Fungus Symptoms in Tamil-மியூகோமிகோசிஸ் (Mucormycosis) என்ற ஒருவகை பூஞ்சைதான் கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படுகிறது. அதைப்பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கருப்பு பூஞ்சை பாதிப்பை எப்படி கண்டறிவது? யாரை பாதிக்கும்? தெரிஞ்சுக்கங்க..!
X

black fungus symptoms in tamil-கருப்பு பூஞ்சை அறிகுறி.(கோப்பு படம்)

Black Fungus Symptoms in Tamil-கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க சிறந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுவந்தாலும் தற்போது, மியூகோமிகோசிஸ் (Mucormycosis) என்ற கருப்புநிற பூஞ்சை தொற்றுக் காரணமாக மேலும் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்வது அவசியம். அதைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே நாம் அதில் இருந்து தற்காத்துக் கொள்ளமுடியும்.

கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமிகோசிஸ் பாதிப்புக்கு என்ன காரணம்?

கருப்பு பூஞ்சை பாதிப்பு என்பது ஒருவகையான பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் பூஞ்சை வித்துக்களுடன் தொடர்பு ஏற்படுபவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பூஞ்சைத் தொற்று தோலில் இருக்கும் காயங்கள் மூலம் உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

கருப்பு பூஞ்சை

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் இலகுவாக பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. போதுமான நோய் எதிர்ப்புசக்தி இல்லாததால் இது உடனே பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல நீரிழிவு நோயாளிகளுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களை இலகுவாக பாதிக்கிறது. ஆகவே நீரிழிவு நோயாளிகள் இந்த பூஞ்சை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கண்ணில் தெரியும் கருப்பு பூஞ்சை அறிகுறி.

black fungus symptoms in tamil-இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி கொரோனா நோயாளிகளில் கீழ்கண்ட நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு அபாயம் அதிகம் என்று கூறியுள்ளது.

கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்து பயன்பாடு காரணமாக எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்

நீண்ட நாட்களாக ஐசியு-வில் இருந்தவர்கள், இணை நோய் உள்ளவர்கள்,உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள், புற்றுநோய் , தீவிர பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்கள் போன்றோர்.

கருப்பு பூஞ்சை பொதுவான அறிகுறிகள் என்ன?

நெற்றி, மூக்கு, கன்னப்பகுதி எலும்புகள், கண்கள் மற்றும் பற்களுக்கு இடையில் அமைந்துள்ள காற்றுப் பைகளில் தோல் தொற்றுநோயாக மியூகோமிகோசிஸ் வெளிப்படத் தொடங்குகிறது. இந்த அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துமனைக்கு செல்லவேண்டும்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Jan 2023 8:45 AM GMT

Related News