benefits of novel palam கல்லீரலைப் பாதுகாக்கும் ,நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நாவல் பழம்:உங்களுக்கு தெரியுமா?....படிங்க...
benefits of novel palam நாவல் பழம் கல்லீரல் கோளாறுகள் மற்றும் புண்களில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. அதன் நுகர்வு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது மற்றும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது.மேலும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது. படிங்க...
HIGHLIGHTS

மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட நாவல்பழம் (கோப்பு படம்)
benefits of novel palam
உலகம் முழுவதும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னதான் உணவுக்கட்டுப்பாடாக இருந்தாலும் சர்க்கரையின் அளவானது குறைந்தபாடில்லை. ஒரு சிலர் டாக்டரிடம் வரும்போது நான் எதுவுமே சாப்பிடுவதில்லை சார் எப்படி இப்படிசுகர் ஏறுது என்ற டயலாக்கை நாம் அன்றாடம் கேட்டு வருகிறோம்.
benefits of novel palam
benefits of novel palam
ஒருசிலர் இதனைக் குறைக்க தினமும் காலை, மாலை என வாக்கிங் புறப்பட்டுவிடுகின்றனர். இருந்தாலும் அவர்களுக்கு கூட சுகர் குறைகிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கான அமிர்தமாக நாவல் பழம் உதவிபுரிகிறது. இப்பழத்தினை உண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்படுகிறது.
நாவல் பழத்தில் சதையில் உள்ள மருத்துவகுணத்தை விட அதன் விதையிலே அதிகம் உள்ளது. பழத்தை உண்ணும்போது ஐந்தாறு கனியையாவது விதையுடன் உண்பது பலன் கிடைக்கும். நாவல் பழத்தைச் சாப்பிட மூளை பலமாகும். நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தைக் கசாயம் போல் தயாரித்து சாப்பிடும்போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.
benefits of novel palam
benefits of novel palam
நாவல் விதையைக் காயவைத்து பொடியாக்கி சலித்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு அரைத் தேக்கரண்டி அளவு உணவு உட்கொள்வதற்கு முன் உட்கொண்டு உணவருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
பொடியாக்கிய நாவல் விதையை ஆடுதின்னாபாலை இலைக் காற்றில் இட்டு கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து அதை பட்டாணி அளவில் உருண்டைகளாக்கி காயவைத்துக்கொண்டு அதை உணவு உட்கொள்வதற்கு முன் ஒரு உருண்டை அல்லது அரை உருண்டை என வயதிற்கு ஏற்றார் போல பயன்படுத்தலாம்.
நாவல் கொட்டையுடன் மாங்கொட்டையும் சேர்த்து சமஅளவு உலர்த்திய சூரணத்தில் 5 மில்லி கிராம் மோரில் சாப்பிட்டு வர 3-6 நாளில் சீதபேதி , வயிற்றுக்கடுப்பு,வயிற்றோட்டம் , நீரிழிவு குணமாகும். நாவல் மரப்பட்டைத் துாளை மோரில் கலந்து குடிக்க பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்குதீரும்.
நாவல் மரம் அதன் விதிவிலக்கான குணங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ குணங்களுக்காக மிகவும் மதிக்கப்படுகிறது. இதன் பழம், இலைகள், பட்டை மற்றும் விதைகள் அனைத்தும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வயிற்றுப்போக்கு, நீரிழிவு, கல்லீரல் கோளாறுகள், புண்கள் மற்றும் பலவற்றிற்கு சிகிச்சையளிப்பதில் அதன் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.
benefits of novel palam
benefits of novel palam
வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்: வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த நாவல் மரத்தின் இலைகளை இடித்து சாறு எடுக்கலாம். இந்த சாற்றை ஒரு தேக்கரண்டி தினமும் இரண்டு முறை மூன்று நாட்களுக்கு உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது பித்தத்தை அடக்கவும், மலச்சிக்கலை போக்கவும், சீரான இதய செயல்பாட்டை ஊக்குவிக்கவும், இரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, இது சிறுநீரக வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
நீரிழிவு நோயைத் தடுக்கும்: நாவல் பழத்தில் நீரிழிவு நோயைத் தடுக்கும் பண்புகள் உள்ளன. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் என் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. மேலும், நாவல் பழத்தின் விதைகளில் ஜம்போலின் என்ற குளுக்கோசைடு உள்ளது, இது உடலில் மாவுச்சத்தை சர்க்கரையாக மாற்றுவதைத் தடுக்கிறது. நீரிழிவு நோயாளிகள் ஒரு கிராம் விதைகளை பொடி செய்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிப்பது குறையும். நாவல் பழச்சாறு தினமும் மூன்று வேளை குடித்து வந்தால், சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை 15 நாட்களுக்குள் பத்து சதவீதம் குறைக்கலாம். தொடர்ந்து உட்கொண்டால், சர்க்கரை நோயை மூன்று மாதங்களுக்குள் திறம்பட கட்டுப்படுத்தலாம்.
benefits of novel palam
benefits of novel palam
கல்லீரல் கோளாறுகள் மற்றும் புண்களை குணப்படுத்துதல்: நாவல் பழம் கல்லீரல் கோளாறுகள் மற்றும் புண்களில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. அதன் நுகர்வு கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது மற்றும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது. பழத்தின் மருத்துவ குணங்கள் கல்லீரல் தொடர்பான நோய்கள் மற்றும் புண்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க நாவல் பழம், எப்படி எல்லாம் உதவுகிறது என்பதை நாம் அனைவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.நமக்கு எளிதாக கிடைக்க கூடிய நாவற்பழம் கல்லீரலை எப்படி பாதுகாக்கிறது என விரிவாக பார்ப்போம்.
கல்லீரல்நமது உடலில் செயல்படும் மிக முக்கியமான உறுப்பு ஆகும். ஏனெனில், இந்த கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். இப்படிப்பட்ட கல்லீரலை நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அப்படி, கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான உணவுகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து வைத்து கொள்வோம்.
benefits of novel palam
benefits of novel palam
தவறான உணவுப் பழக்கம், அதிக உடல் எடை, அதிக மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். எனவே, நாம் கல்லீரல் பாதிப்பில் இருந்து விடுபட முறையான உணவு பழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம்.
நாவற்பழம் நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் பண்புகளை கொண்டுள்ளது. இரத்தத்தில் சர்க்கரை மேலாண்மைக்கு உதவுவது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயைத் தடுக்கவும் இது உதவுதாம். நாவல் பழத்தின் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளை கொண்டுள்ளது.
நாவல்மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது. 100 கிராம் நாவற் பழத்தில் 60 கலோரிகள் உள்ளது. மேலும், 0.2 கிராம் கொழுப்பு உள்ளது. 0.7 புரதம், 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 9.5 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது.
நாவற்பழம் கல்லீரல் பிரச்சனைகளை நீக்குகிறது. சிறுநீர் பிரச்சனையை சரி செய்கிறது. நாவற் பழத்தின் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீர் கற்களானது கரைந்துவிடும்.கல்லீரல் பிரச்சனை குணமாகும்.
நாவற்பழம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. தோல் பிரச்சனைகளை நீக்குகிறது. நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், மலசிக்கல், வாயு, தசை பிடிப்பு, வயிற்று போக்கு போன்றவைற்றை நீக்குகிறது.
எனவே நாவற்பழத்தை நாம் உண்ண வேண்டியஅவசியமான ஒன்றாகிறது. நாவற்பழம் நமக்கு எளிதாக கிடைக்க கூடியது. நாவற்பழத்தின் அருமை தெரியாமல் நாம் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை கையில் எடுக்காமல் காலால் மிதித்து செல்வது கூட உண்டு. இனியும் அது போன்று செய்யாமல் நாவற்பழத்தை சாப்பிட்டு கல்லீரலை பாதுகாக்க சபதம் ஏற்போம்.