athi palam-என்னது..? அத்திப்பழத்தில இவ்ளோ..நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!

athi palam-அத்திப்பழத்தை ஆஸ்துமா நோயுள்ளவர்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். சிலருக்கு இயற்கையாகவே அலர்ஜி பிரச்னை இருப்பவர்கள் அத்திப்பழத்தை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
athi palam-என்னது..? அத்திப்பழத்தில இவ்ளோ..நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!
X

athi palam-அத்திப்பழம் நன்மைகள் (கோப்பு படம்)

athi palam-உடல்நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், எந்த நோய் பாதிப்புகளும் இல்லாமல் ஆரோக்யமாக இருக்கவேண்டும். அப்படி நோய் நொடிகள் ஏதுமின்றி நீண்டகாலம் வாழ்வதற்கு பழங்கள் போன்ற சத்துமிக்க இயற்கை உணவுகள் உடலுக்கு எந்த எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தாது. பழங்களைப்போல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய இயற்கையான பொருள் வேறெதுவும் இருக்க முடியாது. நமக்கு எண்ணற்ற பழ வகைகள் கிடைக்கின்றன. குறிப்பாக நமது நாட்டில் இல்லாத பழவகைகள் எதுவும் இல்லை. பிற நாடுகளில் கிடைக்காத மருத்துவ குணம் உள்ள பழங்கள் கூட நம் நாட்டில் கிடைக்கிறது. ஆனால் அதன் பலன் தேறியாமல் நாம் அவைகளை உதாசீனம் செய்கிறோம்.


அவ்வாறான பழங்களில் ஒன்றுதான் அத்திப்பழம். உடலில் உள்ள நோய் பாதிப்புகளை நீக்கும் ஒரு பழமாக "அத்திப்பழம்" இருக்கிறது. இந்த அத்திப்பழத்தை ஜூஸ் போட்டு அருந்தினாலும், உலரவைத்து வத்தல் வடிவில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. அத்திப்பழத்தில் இருந்து கிடைக்கும் நன்மைகளை தெரிஞ்சுக்குவோம் வாங்க..!

அத்திக்காய் மற்றும் அத்திப்பழம் பயன்கள் :

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.

அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.


athi palam

இரத்த விருத்தி

தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

ஆண் மலடு நீக்கும்

அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளைகள் சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.


போதை ஆசாமிகளுக்கு

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒரு வாரம்வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.

ஆரோக்ய உடல்

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் திரட்சியாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.

athi palam


வெண்குஷ்டம் நீங்க

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து,வெண் புள்ளிகள் மீது பூசலாம்.


மூலம்

மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உலகின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது. மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் நூலாம் விரைவில் குணமாகும்.

athi palam

இதய நோய்கள்

நமது உடலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய உறுப்புகளில் ஒன்று இதயம் ஆகும். நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் பணியை செவ்வனே செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள பீனோல் மற்றும் ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.


மலச்சிக்கல்

உணவுகளை சாப்பிட பின்பு சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, இரவில் நெடு நேரம் கண் விழித்திருப்பது, சாப்பிட்டதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். காய்ந்த அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். கொலஸ்ட்ரால் உடலில் நன்மை பயக்கும் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுவததை கொலஸ்ட்ரால் என்கின்றனர். இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.

athi palam

உடல் எடை குறைக்க

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சரியான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உணவில் இருக்கும் கொழுப்பு, உடலில் சேராமல் தடுக்கப்படுகிறது. அந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் அதிகம் உள்ளது. எனவே அதை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சில அத்திப்பழங்களை சாப்பிடுவது நல்லது.


புற்று நோய்

அத்திபழங்கள் மற்ற எல்லா பாதிப்புகளையும் விட வயிற்றில் ஏற்படும் புண்கள், அமில சுரப்பு குறைபாடுகள் போன்ற்வற்றை சரி செய்வதில் சிறந்த செயலாற்றுகிறது. பெருங்குடலில் தங்கியிருக்கும் சில நச்சுக்களால் நாளளவில் பெருங்குடலில் புற்று நோய் ஏற்பட காரணம் ஆகிறது. அத்திப்பழங்களை தின்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு குடலில் தங்கியிருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி குடல் சுத்தமாகி, குடல் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

athi palam

ரத்த அழுத்தம் சீராக்க

நமது உடலில் ஓடும் ரத்தத்தில் பல வகையான உப்புகள் கலந்திருக்கின்றன. அதில் சோடியம் உப்பின் அளவு அதிகமாகவும், பொட்டாசியம் உப்பின் அளவு குறைவாகவும் இருக்கும் போது ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைகள் ஏற்படுகிறது.அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வரும் நபர்களுக்கு ரத்தத்தில் இந்த உப்புகளின் அளவு சமநிலை பெற்று ரத்த அழுத்தம் பாதிப்புகளை குறைகிறது.


உடல் பலம்

உடலில் சிலருக்கு வலுவில்லாமல் இருப்பதால் எத்தகைய வேலைகளிலும் அதிக நேரம் ஈடுபட முடியாமல் போகிறது. உடல் பலம் பெற நினைப்பவர்கள் தினமும் இரவில் பசும்பாலில் சில காய்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்து காலையில் அப்பழங்களை சாப்பிட்டு அப்பாலை அருந்தினால் உடல் பலம் பெற தொடங்கும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகளும் நீங்கும்.

கல்லீரல் பாதுகாப்பு

மது பழக்கம் கொண்டவர்கள் அதிகளவில் மதுவை அருந்துவதால் சில சமயங்களில் அவர்களின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு விடும். இந்த கல்லீரல் வீக்கத்தை போக்க சில அத்திப்பழங்களை வினிகரில் ஒரு வாரம் ஊறவைத்த பின்பு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும். கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும்.


athi palam

பார்வைத் திறன் அதிகரிக்க

நமது உடலின் முக்கிய உறுப்புகளான கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும் அத்திப்பழங்களில் இந்த சத்துக்கள் அனைத்தும் அதிகம் இருக்கின்றன. எனவே அத்திப்பழங்களை வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுவது கண்பார்வை மேம்பட உதவும்.

Updated On: 30 Nov 2022 11:12 AM GMT

Related News

Latest News

 1. தூத்துக்குடி
  புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
 2. நாமக்கல்
  உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
 3. தமிழ்நாடு
  நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
 4. சினிமா
  Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
 5. சினிமா
  Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...
 6. தூத்துக்குடி
  முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளதாக இருக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
 7. லைஃப்ஸ்டைல்
  egg shell powder uses-முட்டை ஓட்டு பொடியில் இவ்ளோ நன்மைகளா..? இனிமேல்...
 8. சினிமா
  விஜய் டிவி பிரபலத்தைக் காதலிக்கிறாரா சீரியல் நடிகை ரவீனா?
 9. நாமக்கல்
  சேந்தமங்கலம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் ரூ.52.86 லட்சம் மதிப்பில்...
 10. தமிழ்நாடு
  கோவையில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு