Barley benefits in tamil-'டார்லிங்' என்று குழந்தையை கொஞ்சணுமா..? 'பார்லி' கஞ்சி குடிங்க..!
பார்லி கஞ்சி சாப்பிடுவது முன்னெல்லாம் காய்ச்சல் காரர்களுக்குத்தான் என்ற பரவலான எண்ணம் இருந்தது. ஆனால் இன்று மலட்டுத் தன்மை நீக்கும் அரிய உணவாக இருக்கிறது.
HIGHLIGHTS

Barley benefits in tamil-கர்ப்பிணி பெண்களுக்கு பார்லி கஞ்சி (கோப்பு படம்)
Barley benefits in tamil
உலக அளவில் உண்ணப்படும் பிரதான உணவு தானியங்களில் அரிசி, கோதுமைக்கு அடுத்த படியாக அதிகம் பயிரிடப்படும் உணவு தானியம் வகையாக பார்லி இருக்கிறது. இதை தமிழில் பார்லி அரிசி என்று அழைக்கப்படுகிறது.
மத்திய ஆசிய நாடுகளில் அதிக மக்களால் உண்ணப்படும் உணவு தானியமாக பார்லி அரிசி இருக்கிறது. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த பார்லி அரிசி சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம், வாங்க.
Barley benefits in tamil
பார்லி அரிசி பயன்கள்
உடல் எடை குறைய
உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லியில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்பு உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் பார்லி கஞ்சியை அருந்துபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கப்பட்டு, ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது.
Barley benefits in tamil
புற்று நோய்கள் தடுப்பு
பார்லியில் எந்த வகை புற்றுநோயையும் தடுக்கக்கூடிய ஆற்றல் மிகுந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக பார்லி தானியத்தை உணவாக அதிகம் பயன்படுத்தும் சீன நாட்டின் யுனான் மாகாணம் மற்றும் திபத்திய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு எந்த வகையான புற்று நோய் பாதிப்புகளும் ஏற்படவில்லை என மருத்துவ ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்று மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுப்பதும், நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
Barley benefits in tamil
எலும்பு, பற்கள் வலிமை
பார்லி தானியத்தில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் இருக்கின்றன. பார்லியை ஜூஸ் போல சாறு பதத்தில் செய்து, தினமும் அருந்தி வருபவர்களுக்கு எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடைகின்றன. மேலும் வயதானவர்களுக்கு வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டு தேய்மானம்,எலும்பு வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும் சதவீதம் வெகுவாக குறைக்கப்பட்டு இருப்பதாக மேலை நாட்டு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Barley benefits in tamil
பித்தப்பை கற்கள்
நமது உடலில் பித்தப்பையில் ஏற்படும் அதீத அமில சுரப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அதிகரிப்பால் பித்தப்பையில் கற்கள் உருவாக காரணமாகிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த பித்தப்பை கற்கள் உருவாகும் சதவீதம் அதிகமாக இருக்கிறது. பார்லி தானியம் கொண்டு செய்யப்பட்ட உணவு சாப்பிடுபவர்களுக்கு உடலில் பித்தப்பையில் சுரக்கும் அமிலங்களின் அளவு சமநிலைப்படுத்தப்பட்டு, பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.
Barley benefits in tamil
பீட்டா – குளுக்கான்
பார்லியில் பீட்டா குளுகான் சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பீட்டா குளுக்கான் சத்துகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் பெருகச் செய்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி நோய் பாதிக்காமல் பாதுகாக்கிறது.
மேலும் வைட்டமின் சி சத்தும் பார்லி தானியத்தில் இருப்பதால் அதை சாப்பிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை பன்மடங்கு பெருக்கச்செய்கிறது. கூடவே, காயங்கள், புண்கள் வேகமாக ஆறவும் வழி வகை செய்கிறது.
Barley benefits in tamil
செரிமான கோளாறுகள்
செரிமான பிரச்னைகள், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு சிறந்த பத்திய உணவாக பார்லி இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழங்களில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் நுண்கிருமிகளின் பெருக்கத்தை அதிகரித்து, சாப்பிடும் உணவுகள் சுலபத்தில் செரிமானம் ஏற்பட உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது. தினமும் பார்லி தானியம் கொண்டு செய்யப்பட்ட உணவோ அல்லது பார்லி கஞ்சி பருகுவது வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Barley benefits in tamil
கர்ப்பிணி பெண்கள்
கருவுற்ற பெண்களுக்கு சிறந்த போஷாக்கு நிறைந்த உணவாக பார்லி திகழ்கிறது. பார்லி கஞ்சி தினமும் பருகும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவுகள் எளிதில் செரிமானம் ஆகிறது. மேலும் பேறு காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கர்ப்பகால நீரிழிவு போன்றவை ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலை பார்லி தானியம் கொண்டிருக்கிறது. பார்லி கஞ்சியை குடிப்பதால் கருவுற்ற பெண்களின் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட்டு உடலை தூய்மை படுத்தும் பணியை பார்லி சிறப்பாக செய்கிறது.
Barley benefits in tamil
இரத்த சோகை
இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறையும் பொழுது அனீமியா எனப்படும் இரத்த சோகை ஏற்படுகிறது. இரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கு வைட்டமின் 12 சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பார்லியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பார்லி கஞ்சி குடிப்பவர்களுக்கு இரத்த சோகை ஏற்படாமல் காக்கிறது. உடலுக்கு வலிமையையும் தருகிறது.
Barley benefits in tamil
மலட்டுத்தன்மை
ஆண், பெண் இருவரிலும் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதும் ஒன்றாக இருக்கிறது. பார்லியில் அர்ஜினைன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது ஆண்களின் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, குழந்தைப்பேறு கிடைக்க செய்கிறது. பெண்களின் கருப்பையில் உள்ள அதிக அளவு கருமுட்டை உற்பத்தியாவதற்கும் உதவுகிறது.
Barley benefits in tamil
சரும பாதுகாப்பு
நமது சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைச் செய்யக்கூடிய ஒரு தானியமாக பார்லி இருக்கிறது. பார்லி கஞ்சி அருந்துபவர்கள் மற்றும் பார்லி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் காக்கப்படும்.
பார்லி தோல் சுருக்கம், தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் தோலின் நிறத்தை மேம்படுத்தி, இளமைத் தோற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. பார்லி மாவை நீரில் கலந்து பிசைந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதோடு முகப்பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் விரைவில் மறைகிறது.