baking soda in tamil-என்னது சோடா உப்பில் இவ்ளோ நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!

baking soda in tamil-நம் வீட்டு உணவுப்பொருள்களில் பயன்படுத்தும் சோடா உப்பில் சோடியம் என்னும் வேதிப்பொருள் உள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
baking soda in tamil-என்னது சோடா உப்பில் இவ்ளோ நன்மைகளா..? நீங்களும் தெரிஞ்சுக்கங்க..!
X

baking soda in tamil-சோடா உப்பு பயன்பாடு (கோப்பு படம்)

baking soda in tamil-நம் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் பொருட்களில் சமையல் சோடாவும் ஒன்று. இதில் நமக்குத் தெரியாத பல் நன்மைகள் உள்ளன. அதைத்தான் இந்தக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம். சமையல் சோடாவின் அறிவியல் பெயர் 'சோடியம் பை கார்பனேட் ஆகும். இதை எப்படி பயன்படுத்தவேண்டும்? வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் வாங்க.


பல பெயர்களைக்கொண்ட சோடா

ஆமாங்க, இதை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கிறார்கள். ஆனால் சோடா என்பது பொதுவாக இருக்கும். இட்லி சோடா, ஆப்ப சோடா, சோடா மாவு, சமையல் சோடா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இப்படி ஏகத்துக்கும் உந்து. இதை கடைசியாக உள்ள பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் போன்ற வார்த்தைகளை பேக்கரியில் கூறுவார்கள். பெயர்தான் வேறு வேறு. ஆனால், சோடா ஒன்றுதான்.


பொதுவாக இது உணவுப்பொருட்களை மென்மையாக்கப் பயன்படுகிறது. ஆமாங்க இந்த சோடா மென்மையாக்கவும், மொறுமொறுப்பாக்கவும்,நன்றாக உப்புவதற்கும் பயன்படுகிறது. அதே போல சப்பாத்தி, புரோட்டாவை மென்மையாக்கவும் நன்றாக உப்பி வருவதற்கும், இட்லியில் மாவை புளிக்க வைப்பதற்கும் பயனாகிறது.

baking soda in tamil


அசிடிட்டி சீராக

அதேபோல கேக், பிஸ்கட், ரஸ்க், பிரட் போன்ற பேக்கரி வகைகளை தயார் செய்யவும் பெருமளவில் பயன்படுகிறது. இந்த சோடாவில் ஆன்டி- ஆசிட் இருப்பதால் நம் உடலில் ஏற்படும் அமிலத்தன்மை பிரச்னைகளை தடுப்பதுடன் அதை சீராக்குகிறது. எனவே, இதை தண்ணீரில் சிறிய அளவில் சேர்த்து குடிக்கலாம்.

சரும பளபளப்பு

இதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியா முகப்பருவின் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்கப்பட்டு சருமம் பளிங்கு போல் மின்னும்.


வெண்மையான பற்களுக்கு

பேக்கிங் சோடாவில் இருக்கும் அல்கலைன் என்னும் வேதிப்பொருள் பற்களின் நிறத்தை பாதுகாக்க உதவுகிறது. சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பேஸ்ட் போல் ஆனதும் பற்களில் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று ஆகும். ஆனால், இதை தேய்த்த உடனேயே வாயை கழுவி விடவேண்டும். பூச்சிக்கடி, தோல் அரிப்புகளுக்கு சிறிதளவு பேக்கிங் சோடாவை தண்ணீர் கலந்து தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சிக்கில்லாத கூந்தல்

கூந்தலுக்கு சோடா சிறந்த கண்டிஷனர் போல செயல்படும் தன்மையுடையது. ஷாம்பு போட்டு தலையை அலசுவதற்கு முன் ஈரத் தலையில் சிறிதளவு சோடா உப்பைத்தூவி நன்றாக தேய்த்து கழுவிய பின்னர் ஷாம்பு போட்டு அலசினால்,கூந்தல் சிக்கு விழாமல் பட்டுப்போல் பளபளப்பாகும்.

baking soda in tamil


துர்நாற்றம் நீங்க

வாசனைமிகு டியோடரன்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக சிறிது பேக்கிங் சோடாவை அக்குள் பகுதிகளில் தடவிக் கொண்டு பின்னர் குளித்து வந்தால் எந்த துர்நாற்றமும் வீசாது. பேக்கிங் சோடா வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழித்துவிடுகிறது. அதனால் துர்நாற்றம் வீசாமல் தடுக்கப்படுகிறது.

விடாப்பிடியான கறைகளை நீக்க

வீட்டுபயோகப் பொருட்களை சுத்தப்படுத்தவும் சோடா உப்பு பயனாகிறது. வீட்டின் டைல்ஸ், பாத்திரங்கள் கழுவும் சிங்க், குழாய்கள், எவர்சில்வர் பாத்திரம், வெள்ளிப் பாத்திரம், வாஷிங் மெஷின், காஃபி மேக்கர், குளியலறை போன்ற இடங்களில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறைகளை நீக்க சிறிதளவு சோடா உப்பை போட்டு நன்கு தேய்த்தால் கறைகள் காணாமல் போய்விடும்.


துணிக்கறைகள் நீங்க

பேக்கிங் சோடா கறைகள் படிந்த துணிகளுக்கும் பயன்படுத்தமுடியும். சோடாஉப்பு கலந்த தண்ணீரில் துணிகளை ஊற வைத்து அலசினால் துணிகளில் படிந்திருக்கும் கறைகள் எளிதில் நீங்கிவிடும். குழந்தைகளின் துணிகளை சோடா உப்பு போட்டு துவைத்து அலசலாம்.

baking soda in tamil

எச்சரிக்கை

சோடா உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. சோடா உப்பில் இருக்கும் அதிக அளவிலான சோடியம் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அதனால் இதன் உபயோகத்தில் அதிக கவனம் கொள்ளவேண்டும். பேக்கிங் சோடாவை மிக மிகக் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்தி பலன் பெற முடியும். பயன்பாடு அதிகமானால் பக்க விளைவுகள் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

Updated On: 4 Feb 2023 8:20 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  ellu urundai benefits எள் உருண்டையில் எவ்வளவு சத்துகள் உள்ளது என்பது...
 2. சினிமா
  Taapsee Pannu In US-அமெரிக்க வீதிகளில் சுற்றி திரியும் டாப்ஸி
 3. சினிமா
  காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படம் எப்படி இருக்கு?
 4. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்த நாள் விழா...
 5. சோழவந்தான்
  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய பூக்குழி விழா: திரளான பக்தர்கள்...
 6. சினிமா
  Madhavan birthday celebration special today- இன்று பிறந்த நாள்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் ஊடுபயிருக்கு ரூ.3 ஆயிரம் மானியம் வழங்கும்...
 8. நாமக்கல்
  பெங்களூருவில் இருந்து நாமக்கல் வந்த விவிபேட் எந்திரங்கள்: கலெக்டர்...
 9. நாமக்கல்
  மாயமான இரு மகள்களை மீட்டுத்தரும்படி பெற்றோர் போலீஸ் எஸ்பியிடம் மனு
 10. லைஃப்ஸ்டைல்
  ennai kathirikai kulambu in tamil ஆஹா...சுவையோ...சுவை... சுவை சூடான...