bajra in tamil-கம்பஞ்சோறும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்டுப்பாருங்க..! சும்மா.. வாசனை ஆளைத்தூக்குது..!
bajra in tamil-சிறுதானிய வகைகளில் கம்புக்குத் தான் முதலிடம். எல்லா காலநிலைகளையும் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.
HIGHLIGHTS

bajra in tamil-கம்மஞ்சோறு (கோப்பு படம்)
bajra in tamil-1980ம் ஆண்டுகளுக்கு முன்னர் கிராமங்களில் பிரதான உணவு கம்பஞ்சோறு தான். அமாவாசைகளில் மட்டும் நெல்சாதம் படைத்து உண்பது வழக்கம். மற்ற நாட்களில் கம்பஞ்சோறு மற்றும் வரகு சோறுதான் கிராமங்களில் பிரதான உணவாக இருந்தன.
கம்பஞ்சோறு ஆக்குவதற்கு ஊறவைத்திருக்கும் கம்பை சிறிது அள்ளி அப்படியே கால்சட்டைப்பையில் ஈரத்துடன் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் சென்ற மாணவர்களும் இருக்கிறார்கள். பள்ளிக்கூடம் எப்படியும் நடந்து செல்லும் தூரத்தில்தான் இருந்தது. அதனால் நடைப்பயணத்தில் பாக்கெட்டில் ஈரத்துடன் இருக்கும் கம்பை வாயில் அள்ளிப்போட்டு மென்றவாறே பள்ளிக்கூடம் சென்றடைவோம். அது ஒரு அழகிய நாட்கள்.
ஆனால், கால மாற்றத்தால் இன்று கம்பு காணாமல் போய்விட்டது. அரிதான உணவாகிவிட்டது. நல்லவேளை பலருக்கு இப்போது அதைப்பற்றிய ஞானம் வந்துள்ளது. அதனால், இன்றும் கம்மங்கூழ், கம்பஞ்சோறு என பெரிய உணவுக்கூடங்களில் கூட கிடைக்கிறது.
bajra in tamil
சிறு தானியங்களில் கம்புக்கு முதலிடம்
அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.
இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.
கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள்
தானியங்களிலேயே அதிக அளவாக 11.8 சதவிதம் புரோட்டீன் கம்பில்தான் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கும் முக்கிய சத்தான வைட்டமின் 'ஏ'வை உருவாbajra in tamilக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு தானியத்தில் அதிக அளவில் உள்ளது.
100 கிராம் கம்பில்,
42 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது.
11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.
வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70சதவீதம் நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.
bajra in tamil
2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கம்பு
இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. கம்புப் பயிர் வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.
உடனடி கம்மஞ்சோறு கலவை
தற்காலத்து பொருளாதாரச் சூழலில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. கம்பஞ்சோறு சமைப்பதற்கு நிறைய முன்னேற்பாட்டு வேலைகள் செய்யவேண்டும். கம்பு உணவு அதிகம் சமைக்கப் படாததற்குக் காரணம், கம்பை உணவாக்குவதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான்.
இக்குறைகளைப் போக்கி, எளிதாகக் கம்பஞ்சோறு தயாரிக்க, கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உடனடி கம்மஞ்சோற்றுக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமையும் பெற்றுள்ளது. அதனை வாங்கி கம்பஞ்சோறு சமைக்கலாம். நெல்சோறு சமைப்பது போலவே இதுவும் ஒரு சராசரி நேரத்தை எடுக்கும். அதிக ஊட்டச் சத்துள்ள கம்பஞ்சோறு சாப்பிடுங்கள். ஆரோக்யமாக வாழுங்கள்.
bajra in tamil
கம்மஞ்சோறும் கருவாட்டுக்குழம்பும்
இன்னும் பல கிராமங்களில் கம்மஞ்சோற்றுக்கு கருவாட்டுக்குழம்பு வைக்கும் பழக்கம். இருந்து வருகிறது. அதற்கென்றே ஒரு தனி ருசி உண்டு. அந்த அளவுக்கு பக்குவமாக கம்பஞ்சோறு ஆக்கி, அதற்கு பக்குவமாக கருவாட்டுக்குழம்பு வைத்து சாப்பிட்டால், அதுபாட்டுக்கு சல்லு சல்லுன்னு வயிற்றுக்குள் சுவையாக இறங்கும்.
அதிலும் குறிப்பாக அந்த நெத்திலி கருவாடுதான் சூப்பருங்க. கம்மஞ்சோற்றை கொஞ்சம் அள்ளி கருவாட்டுக்குழம்பில் தோய்த்து, அப்படியே வாய்க்குள் போட்டால்..ஆஹா ..அந்த சோறு தொண்டைக்குள் இறங்குவதற்குள் ஒரு நெத்திலியை எடுத்து சோற்றோடு மென்று..ஆஹ்ஹா.. அதை ருசித்து சாப்பிட்டவர்களுக்கு வாயில் ஜலம் ஊறாமல் இருக்காது. அட நீங்களும் சாப்பிட்டுப் பாருங்க.
கம்பிலிருந்து கூழ் தயாரித்து உண்ணலாம். கம்பை இடித்து அதில் கம்பங்களி செய்யலாம்.கம்பைப் பயன்படுத்தி அடை செய்யலாம். கம்பு உருண்டை, கம்பு முறுக்கு, கம்பு குழிப்பணியாரம், கம்பு தோசை என பல உணவுகளை தயார் செய்யலாம்.
bajra in tamil
கம்பின் மருத்துவ பயன்கள்
கம்பு உடல் உஷ்ணமடைவதைகக் குறைக்கிறது. வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது. பொதுவாக நமது மண்ணில் விளைந்த உணவுகளே நம் உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும் உணவுகளாக இருக்கும். அதுவே, நமக்கு வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தாத உணவாகவும் இருக்கும்.