/* */

அஸ்வகந்தா மூலிகையின் பயன்பாடுகள் தமிழில் : அளவோடு மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடணும்

ashwagandha benefits in tamil-அஸ்வகந்தா மூலிகையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அவிபரங்கள் தமிழில் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அஸ்வகந்தா மூலிகையின்  பயன்பாடுகள் தமிழில் : அளவோடு மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடணும்
X

ashwagandha benefits in tamil-அஸ்வகந்தா மூலிகை 

ashwagandha benefits in tamil-அஸ்வகந்தா மிகவும் முக்கிய மூலிகைகளில் ஒன்றாகும். நம் நாட்டின் ஆயுர்வேத சிகிச்சையில் அஸ்வகந்தா பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அஸ்வகந்தா மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது என்று சில ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அஸ்வகந்தாவின் மருந்துகள், பொடிகள் மற்றும் காப்ஸ்யூல்கள் சாதாரணமாக கடைகளில் கிடைக்கின்றன. அஸ்வகந்தாவுக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பல்வேறு வகையான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

அஸ்வகந்தாஎன்பது என்ன? (What is ashwagandha in Tamil?)

அஸ்வகந்தா என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். இது ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது. அஸ்வகந்தாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், இவை தமனிகளில் அடைப்பு, இதய தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கின்றன.

அஸ்வகந்தாவின் நன்மைகள்: (What are the benefits of ashwagandha in Tamil?)

இருதய சிக்கல்களைக் குறைக்கிறது (Reduces heart problems): அஸ்வகந்தா ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. அதனால் இவை உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், தமனிகளில் அடைப்பு மற்றும் இதயத் தடுப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுகிறது.

புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுகிறது (Treats cancer):

ashwagandha benefits in tamil-புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும். அஸ்வகந்தாவை தவறாமல் பயன்படுத்துவது, புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளே இவ்வாறான சிறப்புகளை காரணியாகிறது.

தைராய்டு சிகிச்சைக்கு உதவுகிறது (Effective for thyroid ): தைராய்டு சிகிச்சையில் அஸ்வகந்தா முக்கிய பங்கு வகிக்கிறது. உணவில் அஸ்வகந்தாவை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் தைராய்டு சுரப்பியுடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் இது உதவுகிறது.

மன அழுத்தம் குறைய வழிசெய்கிறது (Relieves stress):

ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்க்கையில், ஏதேனும் ஒரு காரணத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தத்தை போக்க அஸ்வகந்தா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே இதனை உட்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது (Improves immunity):

உடலின் நோயெதிர்ப்பு சக்தி உடலை உறுதியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அஸ்வகந்தா உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக சளி மற்றும் இருமல் பிரச்சினை இருந்தால் அது விரைவாக குணமாகிறது.

கண்புரைக்கு மருந்தாகிறது (Treats cataract):

ashwagandha benefits in tamil-அஸ்வகந்தா கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. கண்புரைக்கு எதிராக போராடும் சக்தி அஸ்வகந்தாவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கண்புரைக்கு சிகிச்சையளிக்க, இதனை உட்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.

தோல் நோய்களுக்கு பயனாகிறது (Reduces skin related issues):

தோல் தொடர்பான பிரச்சினைகளை நீக்க அஸ்வகந்தா பயன்படுகிறது. இது சருமத்தில் உள்ள கொலாஜன் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தோல் புத்துயிர் பெறுகிறது. மேலும், வறண்ட சருமம் மற்றும் தலை பிரச்னைகளுக்கு தீர்வாகிறது.

முடி பராமரிப்புக்கு உதவுகிறது (Improves hair quality): முடி உதிர்தல் பிரச்சினையை சமாளிக்க அஸ்வகந்தா மிகவும் முக்கியமான மூலிகையாக கருதப்படுகிறது. இது மெலனின் இழப்பிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. முடி வேர்களை பலப்படுத்துகிறது. இதனால் முடி உதிர்தல் பிரச்சினையை குறைகிறது.

அஸ்வகந்தாவின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of ashwagandha in Tamil?)

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அஸ்வகந்தாவை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். இது தவிர, ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களும் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அஸ்வகந்தாவை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

ashwagandha benefits in tamil-தூக்கமின்மை சிக்கலைப் போக்க அஸ்வகந்தா நன்மை பயக்கிறது. எனினும், இதனை அதிகமாகப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அஸ்வகந்தாவை சரியான அளவில் பயன்படுத்தாமல், அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுகின்றது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் நீரிழிவு நோய்க்கான ஆங்கில மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தால், அஸ்வகந்தாவை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில், இவற்றின் கலவை உடலில் இரத்த அளவைக் குறைக்கிறது. அஸ்வகந்தாவை அதிகமாக உட்கொள்ளும் நபர்களுக்கு காய்ச்சல், சோர்வு, உடல் வலி போன்ற ​​பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன.

அதனால் பொதுவாகவே மூலிகைகளாக இருந்தாலும் கூட மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்வது பாதுகாப்பு மிக்கதாகும்.

Updated On: 26 Jun 2022 7:54 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  3. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  4. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  5. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  6. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  7. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  8. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  9. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!