/* */

பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிடுபவரா நீங்க...? அப்போ, உங்களுக்கு தான் ஆபத்து!

Vegetable Market Rate Today - பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிடுறது ரொம்ப ரொம்ப ஆபத்து என்று, இயற்கை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

HIGHLIGHTS

பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிடுபவரா நீங்க...? அப்போ, உங்களுக்கு தான் ஆபத்து!
X

பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிடாதீங்க... ஆபத்து!

Vegetable Market Rate Today - 'கடைக்காரரே... வெண்டைக்காய் கால் கிலோ என்ன விலைங்க?' என்று கேட்டுக் கொண்டே, அருகில் கொட்டிக்கிடக்கும் வெண்டைக்காயையோ, கேரட்டையோ எடுத்து, அப்படியே கடித்து சாப்பிடுவது இயல்பாக, நாம் எல்லோருமே செய்கிற மிக சாதாரண விஷயம்தான்.. ஆனால் இன்றைய சூழலில் இப்படி காய்கறிகளை பச்சையாக, அப்படியே சாப்பிடுவது ஆபத்தானது என்று இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.


நம்மில் பல பேருக்கு காய்கறிகளை கழுவி பயன்படுத்த வேண்டும் என்றே தோன்றுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

காய்கறிகள் மற்றும் பழங்களை சுத்தம் செய்யாமல் அப்படியே சாப்பிடும்போது, பலவிதமான நச்சுக்கள் நம் உடலுக்குள் செல்கிறது. காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் பலர், அதிக மகசூல் பெறும் எண்ணத்தில் வேளாண் துறையினர் பரிந்துரைக்கும் அளவை விட, பல மடங்கு அதிகளவில் ரசாயன உரங்களை மண்ணில் இடுகின்றனர்.இதற்கு விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி பணம் பறிக்கும் சில உரம் விற்பனையாளர்களும் காரணமாகின்றனர்.

மேலும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த அதிகளவில் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்.இவற்றின் எச்சங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களில் படிந்து விடுகின்றன. காய்கறிகளை அறுவடை செய்வதற்கு 10 அல்லது 15 நாட்களுக்கு முன். மருந்து தெளிப்பதை நிறுத்தினால் மட்டுமே பூச்சி மருந்துகளின் தாக்கம் விளைபொருட்களில் படிந்திருப்பதைத் தடுக்க முடியும்.ஆனால் பல விவசாயிகள் அறுவடைக்கு முந்தைய தினம் வரை மிகச் சாதாரணமாக பூச்சி மருந்துகளைத் தெளிக்கிறார்கள்.

குறிப்பாக காலிபிளவர், கத்தரிக்காய், திராட்சை போன்றவற்றுக்கு கடைசி நேரம் வரை மருந்து தெளிக்கப்படுகிறது.


இவ்வாறு காய்கறிகளுக்குப் பயன்படுத்தும் பல பூச்சிக்கொல்லி மருந்துகள் அரசால் தடை செய்யப்பட்ட அதிக வீரியம் மற்றும் பக்க விளைவுகள் கொண்ட மருந்துகள் என்று கூறப்படுகிறது.இவ்வாறு மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது பூச்சி மருந்துகளின் எச்சம் நம் உடலில் சேர்ந்து பாதிப்புகளை உண்டாக்குகிறது.எனவே சாப்பிடுவதற்கு முன் காய்கறிகள் மற்றும் பழங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் கழுவி விட்டு சாப்பிடுவது மருந்துகளின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.

அதேநேரத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் மண்ணில் தங்கி மண்ணை விஷத்தன்மையுள்ளதாக மாற்றி வருகிறது.இவ்வாறு மண் விஷத்தன்மையுள்ளதாக மாறும்போது அதில் பயிரிடப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் உள்ளே வரை அந்த ரசாயன நஞ்சு ஊடுருவும் அபாயம் உள்ளது

இதுதவிர லாப நோக்கத்துக்காக விற்பனையாளர்கள் மூலம் புகுத்தப்படும் நஞ்சு ஒரு வகையாகும்.காய்கறிகளை பளபளப்பாகக் காட்டவும், விரைவில் வாடி விடாமல் தடுக்கவும் ஒருசிலரால் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது.இதுபோக பழங்களைப் பழுக்க வைக்கவும் கேடு தரும் ரசாயனங்கள் பலவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள்.


ஆப்பிளை பளபளப்பாகவும், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க பூசப்படும் மெழுகு போன்ற ரசாயனம் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக உள்ளது.

வெண்டைக்காய், மிளகாய், பட்டாணி, கீரை போன்றவற்றில் தொழிற்சாலைகளிலும் துணிகளிலும் பயன்படுத்தக் கூடிய ஒருவித ரசாயன சாயத்தை ஒருசில பகுதிகளில் பயன்படுத்தியுள்ளனர்.இந்த ரசாயனம் மீன் வளர்ப்பில் பூஞ்சைத் தொற்றை அழிப்பதற்கு பயன்படுத்தக் கூடியதாகும்.

மேலும் மாம்பழங்களைப் பழுக்க வைக்க கார்பைடு கல், வாழைப்பழங்களைப் பழுக்க வைக்க எத்திலீன் கலந்த ரசாயன ஸ்பிரே என ரசாயனங்களின் பட்டியலில் நீள்கிறது.இதேநிலைதான் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது.

விவசாயிகளிடையே ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்களை தொடர்ந்து கண்காணித்து தேவைக்கு அதிகமாக ரசாயன உரங்களைப் பரிந்துரைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்களின் மீதுள்ள நச்சுத்தன்மையை கண்டறியும் ஆய்வகங்களை அனைத்து பகுதிகளிலும் நிறுவ வேண்டும்.குறிப்பாக உழவர் சந்தை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் நடமாடும் ஆய்வகங்கள் அமைக்க வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேலாக நமக்குத் தேவையான காய்கறிகளை முடிந்தவரை நமது வீட்டில் இயற்கை முறையில் விளைவிப்பதற்கு முன்வர வேண்டும்.அப்போது தான் பச்சைக்காய்கறிகளை அப்படியே சாப்பிட முடியும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Aug 2022 9:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. லைஃப்ஸ்டைல்
    கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை.. பொறுப்பான வாழ்க்கைக்கு...
  3. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக சரிவு
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வெறும் வயிற்றில் அருந்தும் அற்புத அஜ்வைன் தேநீர்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 29 கன அடியாக அதிகரிப்பு
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே ...
  7. திருவண்ணாமலை
    வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி விழா துவக்கம்: நாளை சீதாராம திருக்கல்யயாண...
  9. தொண்டாமுத்தூர்
    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: பாஜக நிர்வாகியிடம் ரூ. 81 ஆயிரம்...
  10. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி