அடேங்கப்பா, பாலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? படித்து தான் பாருங்களேன்

பாலில் உள்ள வகைகள் மற்றும் பாலில் அடங்கியுள்ள சத்து விவரங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அடேங்கப்பா, பாலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? படித்து தான் பாருங்களேன்
X

பால். (மாதிரி படம்).

நமது உணவு வகைகளில் பால் பிரதான இடத்தை பெற்று உள்ளது. பால், தயிர், மோர், தேநீர் என பாலை பல வகைகளில் நாம் பயன்படுத்தி வருகிறோம். பொதுவாக காய்ச்சாத பசும்பாலில் கிருமிகள் இருக்கும் என்பதால் பாலைக் காய்ச்சாமல் பருகக் கூடாது. பால் குறித்தும், எந்தெந்த பாலில் என்ன சத்துக்கள் உள்ளன என்பது குறித்தும் உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

பசு, எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, ஒட்டகம் ஆகியவற்றில் இருந்துப் பெறப்படும் பால் மட்டுமே “பால்” என்று FSSAI வரையறுத்துள்ளது. மேலும், பச்சைப் பால் (Raw or Fresh Milk), பதப்படுத்தப்பட்டு, நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardised Milk), சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (Double Toned Milk), ஏடு எடுக்கப்பட்ட பால் (Skimmed Milk), நிறை கொழுப்பு பால் (Full Cream Milk), கலவைப் பால் (Mixed Milk) என்ற வகைகள் பாலில் உள்ளன.

எருமைப் பாலில் கொழுப்புச் சத்து 5 சதவீதத்திற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 9 சதவீதத்திற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. பசும்பாலில் கொழுப்புச் சத்து 3.2 சதவீதத்திற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 8.3 சதவீதத்திற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

தமிழ்நாட்டின் ஆட்டுப்பாலில் (வெள்ளாடு/செம்மறியாடு) கொழுப்புச் சத்து 3 சதவீதத்திற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 9 சதவீதத்திற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. ஒட்டகப் பாலில் கொழுப்புச் சத்து 2 சதவீதத்திற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 6 சதவீதத்திற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

கலவைப் பாலில் கொழுப்புச் சத்து 4.5 சதவீதத்திற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 8.5 சதவீதத்திற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. நிலைப்படுத்தப்பட்ட பாலில் கொழுப்புச் சத்து 4.5%-ற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 8.5%-ற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

சமன்படுத்தப்பட்ட பாலில் கொழுப்புச் சத்து 3%-ற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 8.5%-ற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பாலில் கொழுப்புச் சத்து 1.3%-ற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 9%-ற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

ஏடு எடுக்கப்பட்ட பாலில் கொழுப்புச் சத்து 0.5%-ற்கும் ‘’மேற்படாமலும்”, கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 8.7%-ற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. நிறை கொழுப்பு பாலில் கொழுப்புச் சத்து 6%-ற்கும் குறையாமலும், கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்கள் 9%-ற்கும் குறையாமலும் இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

பாலில் எந்தவொரு கூடுதல் உணவுச் சேர்மங்களும் சேர்க்கக்கூடாது என்று FSSAI வரையறுத்துள்ளது. பாலில் 700ppm வரை யூரியா இருக்கலாம் என்று FSSAI வரையறுத்துள்ளது. எந்தவித சுத்திகரிப்பு முறைகள் ஏதுமின்றி, பச்சையாக விற்கப்படும் அனைத்து வகை பால்களும், அதனதன் பொட்டலத்தில் அல்லது கொள்கலனில், பாலின் வகையுடன், ‘பச்சைப்பால்’ என்று குறிப்பிட வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

பால் என்ற பதம், பால் உற்பத்திக்கு என்று FSSAI-னால் அனுமதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. (விதிவிலக்கு: தேங்காய் பால்.). பாலில் உள்ள கொழுப்புச்சத்து மற்றும் கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்களை, பால் பௌடர் அல்லது அனுமதிக்கப்பட்ட பால் வகைகளைக் கொண்டு சட்டப்பூர்வ அளவிற்கு ஏற்ப சரி செய்து கொள்ள FSSAI அனுமதித்துள்ளது.

மறுசீராக்கப்பட்ட பால் (Reconstituted Milk) என்பது, உலர்த்தப்பட்ட அல்லது கட்டியாக்கப்பட்ட பால் அல்லது பால் பொருட்களுடன் குடிநீர் கலந்து உருவாக்கப்பட்ட பால் ஆகும் என்று FSSAI வரையறுத்துள்ளது. (எளிதாகச் சொல்வதானால், பால் பௌடரில் தண்ணீர் சேர்த்தவுடன் உருவாகும் பால். இதுவும் ‘பாலாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் விபரத்தினை லேபிளில் பதிவு செய்யப்பட வேண்டும்.).

மீள் இணைக்கப்பட்ட பால் (Recombined Milk) என்பது, பாலின் கொழுப்புச் சத்து மற்றும் கொழுப்பற்ற இதரத் திடச்சத்துக்களுடன் குடிநீர் கலந்தோ அல்லது கலக்காமாலோ உருவாக்கப்பட்ட பால் ஆகும் என்று FSSAI வரையறுத்துள்ளது. பாலில் வைட்டமின்களை (வைட்டமின்-ஏ மற்றும் டி) செறிவூட்டம் செய்ய FSSAI அனுமதித்துள்ளது. (+F முத்திரை இருந்தால், அது செறிவூட்டப்பட்ட பால் ஆகும்.).

பதப்படுத்தப்பட்டு பொட்டலமிடப்பட்ட பால் மற்றும் பச்சைப் பால் உள்ளிட்ட அனைத்து பால் பொட்டலங்களிலும், “பால் சொட்டு” முத்திரை இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. பச்சைப் பால் தவிர நிலைப்படுத்தப்பட்ட பால், சமன்படுத்தப்பட்ட பால் உள்ளிட்ட அனைத்து வகை பால்களும், கொதிக்க வைத்தல், பதப்படுத்துதல், கிருமிநீக்கம் செய்தல் உள்ளிட்ட செயல்முறைகள் மூலம் பதப்படுத்திய பின்னர் தான் விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

பால் மற்றும் பால் பௌடர் ஆகியவற்றிற்கு ‘சைவ/அசைவக் குறியீடுகளை’ அதன் பொட்டலத்தில் பதிவு செய்யத் தேவையில்லை என்று FSSAI விலக்களித்துள்ளது. பால் மற்றும் பால் பொருட்கள் அசைவம் அல்ல என்று FSSAI வரையறுத்துள்ளது. பால் ஒவ்வாமை குறித்து பால் பொட்டலங்களில் குறிப்பிட வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது.

ஏடு எடுக்கப்பட்ட பால் பொட்டலங்களில், ‘இது ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது’ என்று குறிப்பிட வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. பாலில் தண்ணீர் கலந்து விற்கக் கூடாது என்று FSSAI தடைவிதித்துள்ளது. ஏடு எடுக்கப்பட்ட பாலினை, “பால்” என்று விற்பனை செய்யக் கூடாது என்று FSSAI கட்டுப்பாடு விதித்துள்ளது. (Skimmed Milk என்று தான் லேபிளில் குறிப்பிட வேண்டும். வெறுமனே “பால்” என்று மட்டுமே குறிப்பிடக்கூடாது.)

பால் பௌடர், ஏடு எடுக்கப்பட்ட பால் பௌடர் மற்றும் பகுதியாக ஏடு எடுக்கப்பட்ட பால் பௌடர் ஆகியவற்றை ஐஎஸ்ஐ முத்திரை இன்றி விற்பனை செய்யக்கூடாது என்று FSSAI கட்டுப்பாடு விதித்துள்ளது. பாலில் 0.1 மில்லி கிராம்/லிட்டர் என்ற அளவில் ஆர்சனிக் இருக்கலாம் என்று FSSAI வரையறுத்துள்ளது. பாலில் அஃப்ளடாக்ஸின் எம்1 0.5 மில்லி கிராம்/லிட்டர் என்ற அளவில் இருக்கலாம் என்று FSSAI வரையறுத்துள்ளது.

பாலில் ஸ்டீராய்டு மற்றும் எதிர் உயிர் மருந்துகள் இருக்க வேண்டிய அதிகபட்ச அளவு குறித்து FSSAI வரையறுத்துள்ளது. பாலினை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து, உலோகத்திலான மூடி அல்லது அனுமதிக்கபட்ட பாலி ப்ரோப்பிலின் அல்லது திக அடர்த்தியுள்ள பாலி எத்திலின் மூடிகளைக் கொண்டு மூடி, அதன் பின்னர் விற்பனை செய்ய வேண்டும் என்று FSSAI பரிந்துரைத்துள்ளது என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 April 2023 9:14 AM GMT

Related News

Latest News

 1. திருவாடாணை
  மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக இனிஷியலை போட்டுக் கொள்கிறது.
 2. திருப்பரங்குன்றம்
  பாஜக. எம்.பி.யைக் கண்டித்து மதுரையில், ஜனநாயக மாதர் சங்கம் ரயில்...
 3. குமாரபாளையம்
  ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு...
 4. திருவில்லிபுத்தூர்
  சதுரகிரி மகாலிங்கம் மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
 5. குமாரபாளையம்
  பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
 6. சோழவந்தான்
  பாலமேடு அருகே தொட்டியச்சி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 130 டன்‌ விதைகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்
 8. ஈரோடு
  பவானிசாகர் அருகே சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு
 9. பெரம்பலூர்
  பெரம்பலூரில் பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி...
 10. ஆன்மீகம்
  கோவையில் மழை பெய்ய வேண்டி அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும்