சர்க்கரையை சங்காரம் செய்யும் ஆவாரம்பூ தமிழில்

aavaram poo benefits in tamil-ஆவாரம் பூவின் நன்மைகள், என்னென்ன நோய்களுக்கு தீர்வாகும் என்பது குறித்து தமிழில் இங்கு கூறப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சர்க்கரையை சங்காரம் செய்யும் ஆவாரம்பூ தமிழில்
X

aavaram poo benefits in tamil-மருத்துவ பயனுள்ள ஆவாரம்பூ 

aavaram poo benefits in tamil-ஆவாரம்பூ பயன்கள் (Avarampoo benefits in tamil)

"நீரிழிவு" என்று சொல்லப்படும் சர்க்கரை நோய்க்கு ஆவாரம்பூ ஒரு வரப்பிரசாதம்.

சர்க்கரை நோய்க்கு 'ஆவாரம் பூ' ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு அற்புத மருந்து.

தோல் நமைச்சல்:

ஆவாரம் பூவோட பச்சைப்பயறு இருக்கில்ல அதை சேர்த்து ஒண்ணா அரைச்சு உடம்புல பூசி குளிச்சா தோல் நமைச்சல் போய்டும்.

ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம்:

ஆவாரம் பூவோட கருப்பட்டி சேத்து மணப்பாகு செஞ்சு குடிச்சா ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம் குணமாகும். ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி எல்லாத்துக்கும் மருத்துவ குணம் இருக்கு.

'ஆவிரை' னு அழைக்கப்பட்ட இந்த ஆவிரை காலப்போக்கில் ஆவாரம்பூன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. தைப்பொங்கல் அன்னிக்கு காப்புக் கட்டுவதுக்கும், மாட்டுப்பொங்கல் அன்னிக்கு மாடுங்களுக்கு மாலை கட்டுறதுக்கும், வீடுகளில் தோரணம் கட்டுறதுக்கும் ஆவாரம்பூவ இப்போ பயன்படுத்துறாங்க. இப்பல்லாம் இந்தப் பூ தைப்பொங்கலப்போ மட்டும் பயன்படுத்துற பூவா மாறிபோச்சு.

குளிர்ச்சி தன்மை:

aavaram poo benefits in tamil-அந்த காலத்துல அதிகமா எங்கபோனாலும் நடந்தே தான் போவாங்க. அப்படி போகும்போது தலைப்பாகைக்குள் ஆவாரம் இலையோடு சேர்ந்த பூவை கட்டிக்கொள்வார்கள். இப்படி தலைப்பாகை கட்டினா எவ்வளவு தூரம் வெயில்ல நடந்தாலும் வெயில் சூடு தெரியாது. அந்த அளவுக்கு ஆவாரை இலை குளிர்ச்சி தன்மையுடையுது.

உடற்சூடு தணிய:

ஆவாரம் பூ, இலை, பட்டை, வேர் இப்படி எல்லா பகுதிகளுமே மருத்துவ குணம்கொண்டதுதான். ஆவாரம்பூவ குடிக்கும் நீரில் போட்டு பால்கலந்து சாப்பிட்டு வர உடற்சூடு தணியும்.

ஆவாரை வேர்ப்பட்டையில் குடிநீர் செஞ்சு அதுகூட பசும்பால், எள்நெய் கலந்து முறைப்படி தைலம் செஞ்சு, குளிக்கும் முன்னால தலையில் தேய்த்து தலைமூழ்கினா உடல்வெப்பம் தணியும். கண்ணும் குளிச்சியாகும்.

வெள்ளைப்படுதல், ஆண்குறி எரிச்சல்:

அதுமட்டுமில்லாம, ஆவாரம் பூவ மணப்பாகு செஞ்சு சாப்பிட்டா, பெண்களுக்கு வெள்ளைப்படுதலும், ஆண்களுக்கு ஆண்குறி எரிச்சலும் தீரும்.

ஆவாரம்பூ பொடியின் நன்மைகள்:

உடலில் கற்றாழை நாற்றம், உடல் வறட்சி:

aavaram poo benefits in tamil-ஆவாரம் பூவ பொடி செஞ்சு தேய்த்து குளிச்சு வந்தா, உடல் வியர்வையினால ஏற்படும் உப்பு, கற்றாழை நாற்றம் இல்லாமல் போகும். மேலும் உடல் வறட்சி நீங்கும். அதோட உடலுக்கு நல்ல நிறத்தையும் குடுக்கும்.

கண்சிவப்பாடுதல் (Conjunctivitis):

கண்சிவப்பாக (Conjunctivitis) இருக்குறவங்க ஆவாரை விதையை பொடி செஞ்சு, நீரில் குழப்பி கண் இமை மேல பத்துபோல போட்டால் குணமாகிடும்.

ஆவாரை பிசின் நன்மைகள்:

ஆவாரை பிசின் 4 முதல் 10 கிராம் எடுத்து தண்ணியில கலந்து குடிச்சு வந்தா நீரிழிவு, வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

ஆவாரை பட்டையின் நன்மைகள் :

வாய்ப்புண்:

வாய்ப்புண் இருக்குறவங்க ஆவாரை பட்டையை குடிநீரிட்டு வாய் கொப்பளிச்சு வந்தா, நல்ல பலன் கிடைக்கும்.

சமூலக் குடிநீர்:

aavaram poo benefits in tamil-சமூலம்னா ஆவாரை இலை, பூ, பட்டை, பிசின் ஆகியவற்றின் கலவைதான் சமூலம். தினமும் 30 - 60 மிலி சமூலக் குடிநீர் பயன்படுத்தினா நீரிழிவு நோய் எதிர்பார்க்காத அளவுக்கு கட்டுக்குள் வரும். ஆண்குறி எரிச்சல் தீரும். இதில பனங்கற்கண்டு, ஏலம், வால்மிளகு, சேத்து மணப்பாகு செஞ்சு, அதுல 4கிராம் எடுத்து, பால்லோ அல்லது தண்ணிலயோ கலந்து குடிச்சு வந்தா உடல் வலிமையாகும்.

பொதுவாகவே மூலிகைகளாக இருந்தாலும் கூட மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்வது பாதுகாப்பு மிக்கதாகும்.

Updated On: 26 Jun 2022 7:55 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி பகுதியில் ரூ.7.81 கோடியில் திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
  2. காஞ்சிபுரம்
    சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் போலீசார் ஆலோசனை
  4. தமிழ்நாடு
    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால...
  5. திருப்பூர் மாநகர்
    விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
  6. தூத்துக்குடி
    புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்; கருத்தரங்கில் அதிர்ச்சி...
  7. நாமக்கல்
    உயிருடன் உள்ள தாய்க்கு சிலை வைத்து வழிபடும் மகன்: கூலிப்பட்டி கிராம...
  8. தமிழ்நாடு
    நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை இன்று முதல் அமல்
  9. சினிமா
    Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
  10. சினிமா
    Ethirneechal ஜீவானந்தம் என்ட்ரி! வேற லெவலுக்கு எதிர்பார்க்கப்படும்...