மனஅழுத்தம் நீங்க 30வழிகள் படிச்சு பார்த்து ஃபாலோ பண்ணுங்க....
Stress Relief Quotes - நாகரிக உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியில்நாளுக்குநாள் மனஅழுத்தம் கூடுவது என்பது தவிர்க்க முடியாதது. அதனைப்போக்க என்னென்ன செய்யலாம்?
HIGHLIGHTS

Stress Relief Quotes -
30 ways of mental stress relief
மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பங்களும் மாறி மாறி வரும். முன்பெல்லாம் மனதை பாதிக்ககூடிய விஷயங்கள் அதிகம் இருக்காது. ஆனால் தற்காலத்தில் அது இல்லாத நாள் என்றால் பெரும் சந்தோஷமே. தினமும் புத்தம் புது பிரச்னைகள் வரிசை கட்டி வரும்.
பெயருக்குதான் நாகரிகம் தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் இருந்த மன நிம்மதி இப்போது இல்லை என்றுதான் பலரும் சொல்கின்றனர். அந்த வகையில் மனஅழுத்தம் என்பது தற்போது நம்முடன் இருப்பது அதனை போக்க என்ன வழிகளை பயன்படுத்தலாம் என்பதற்கு 30 வழிகளைப் பற்றி் விரிவாக பார்ப்போம்.
வெளியே தெரியாதவலி, சொல்லத்துடித்தாலும் சொல்லவிடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்யவிடாமல் சோர்ந்து போகச் செய்யும் மன உளைச்சல், ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்.
வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்தவிளைவு ஏற்படாதபோதும், எதிர்பாராத எதிர்விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் ,மனஅழுத்தங்கள் ஆகியவற்றை சரிசெய்ய உலகெங்கும்உ ள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர். பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள்மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்த படிநிலை நோக்கி நகர்வதற்கும் கை கொடுக்கின்றன. மனச்சோர்வை விட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது.
30 ways of mental stress relief
30 ways of mental stress relief
இனம்புரியாத காரணங்களால் மனச்சோர்வு ஏற்படலாம்.ஆனால் மனஅழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு.காரணங்களைக் கண்டறிய முடிகிற போது தீர்வைக்கண்டடைவதும் எளிது. மனஅழுத்தத்திற்கு உடனடி நிவாரணம்தரக்கூடிய சில பயிற்சி முறைகள் நீண்ட கால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
1,ஆழ்ந்த சுவாசம்:
கீழைநாடுகள், மேலைநாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் ரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வு நிலை அடைகின்றன. மனம் இயல்பு நிலை அடைகிறது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.
2,காட்சிப்படுத்துங்க:
பூப்பூவாய்த் துாவும் வென்னீர் ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக்கொண்டு போவது போலவும் மனதுக்கு ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள். மனவியல் நிபுணர்கள் அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப்படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் அந்த காட்சியைத்துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில்உருவாக்கிக் கொள் ளவேண்டும்.
3,மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்
உள்ளங்கைகளில் மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.
30 ways of mental stress relief
30 ways of mental stress relief
4,புன்னகையின் சக்தி:
மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் எவ்வளவு புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வு கள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதம் நிகழ்கிறது என்கிறார் டாக்டர்.கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துதான் பாருங்களேன்..
5. கடைவாய்-ஒரு ரகசியம்:
மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள், பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக்கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும் ,வாயைத்திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல், வெளியேற்ற மேலைநாட்டுஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்ற வழி.
30 ways of mental stress relief
6.மனம் சொல்லும் மந்திரம்
நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம் நாட்டில்அதற்கு பஞ்சமே கிடையாது. எல்லாம் செய்யக்கூடும் , நடப்பதெல்லாம் நன்மைக் கே என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும் மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.
7.அடுத்தது என்ன?
மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவி்க்கிறார்கள். எனக்கேன்இது நிகழ்ந்தது ? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே.,.. என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல்திறனை மேலும்பாதிக்கிறது. மாறாகஅடுத்தது என்ன என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிற போது செயல்படவேண்டும் என்ற துாண்டுதல் வேகம்பெறுகிறது.
8.எழுதிப்பாருங்கள்
மனஅழுத்தத்தை தந்த சம்பவம் அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்,உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதை விட எழுதும்போதே ஒருபுதிய தெளிவு பிறக்கிறது. அந்தத் தெளிவே மனஅழுத்தத்திலி்ருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கி பல அடிகள் வைத்தது போன்ற மனநிறைவை எளிதில் எட்ட முடிகிறது.
9.தடாலடிகளை தள்ளிப்போடுங்கள்
அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்க தோன்றும். அந்த நேர பதட்டத்தில் எது தவறு? எது சரி? என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே மனம் பதட்டமாக இருக்கும்போது, முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்து வரை மனதுக்குள்ளேயே எண்ணிவிட்டு சிறிது துாரம் உலவிவிட்டு பதட்டம் தணியும் வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.
30 ways of mental stress relief
30 ways of mental stress relief
10.காபி குடிப்பதைக்குறையுங்க
காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத்தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ்ட்யூக் என்கிற ஆய்வாளர். துாய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும், மனஅழுத்தத்தைப் போக்கும் சக்திதருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும்போது , அந்த திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வு பூர்வமாக ஏற்பது மேலும் ஊக்கம்தரும்.
11. முடியாத விஷயங்களை மறுத்து சொல்லுங்கள்
எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே துாக்கி போட்டுக்கொண்டு மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்து விழச்செய்கிறது. இந்த கூடுதல் பாரம் மனஅழுத்தத்தை வளர்த்து விடும் என்பதால் செய்யமுடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.
12.நறுமணமங்களின் நலம் பெறுங்கள்:
தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம்தரும் மலர்கள், எண்ணெய் வகைகள், ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக்கொள்ள முடியும்.
13.உங்கள் உஷ்ணமே உங்களுக்கு உதவும்
டேவிட்சோபெல் என்ற மனநல மருத்துவர் மிக எளிதான வழியொன்றை சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.
14.மூன்று முக்கிய இடங்கள் :
பெர்க்லேயில் உள்ள அக்யூபிரஷர் மையத்தின் இயக்குனர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.
புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல், பின் கழுத்தில் அழுத்தம் தருதல், கழுத்துச்சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில்அழுத்தம் தருதல் . அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்து சக்தியை மூளைக்கு வழங்கும்.
15.கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:
மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணிநேரம் என்று வைத்துக்கொண்டால் அந்த கால்மணி நேரமும் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்தநேரம்.
(தொடர்ச்சி நாளை வரும்...)
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2