/* */

திமுக தலைவராக இரண்டாவது முறையாக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு

stalin will be elected as dmk president திமுக பொதுக்குழுக்கூட்டம் நாளை கூடுகிறது. மேலும் நாளை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தேர்தலும் நடக்கிறது. ஸ்டாலின்இரண்டாவது முறையாக போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

HIGHLIGHTS

திமுக தலைவராக இரண்டாவது முறையாக   ஸ்டாலின்  போட்டியின்றி தேர்வு
X

முதல்வர்  ஸ்டாலினுடன்  பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி. ஆர். பாலு ஆகியோர் (பைல்படம்)

stalin will be elected as dmk president

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுக்கோப்பான கட்சியாக திமுக விளங்கி வருகிறது. சிறந்த உட்கட்டமைப்போடு அனைத்தும் சட்டதிட்டங்களுக்குட்பட்டு முறையாக பயணத்தினை தொடர்கிறது திராவிட முன்னேற்ற கழக கட்சி. முன்னாள்முதல்வர் கருணாநிதி பலஆண்டுகள் தலைவராக தொடர்ந்து இருந்து வந்தார். அவரது காலத்திலேயே திமுகவில் செயல்தலைவராக ஸ்டாலின்தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். பொதுச்செயலாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் தொடர்ந்து பல ஆண்டுகள் இருந்தார். அவரும் கருணாநிதி மறைவுக்கு பிறகு காலமானதால் பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியில் இருந்து வருகிறார். அதேபோல் பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் இருந்து வருகிறார்.

தமிழகத்தில் திமுகவைப்பொறுத்தவரை சட்ட திட்டங்களுக்குட்பட்டு முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும்ப ணியானது நடந்தது. தற்போது தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் பணி நடந்தது.

திமுகவில் உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தலைவர் பதவிக்கு முதல்வர்ஸ்டாலின் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.நாளை நடக்க உள்ள திமுக பொதுக்குழுவில் இரண்டாவது முறையாக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

திமுகவின் உட்கட்சி தேர்தலானது ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி தற்போது பல்வேறு பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கலும் தேர்தலும்நடந்து வருகிறது.ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி மாவட்டம், மாநகர செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அனைத்தும் முடிந்து இதில் தேர்வானவர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர்.திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், மற்றும் 4 தணிக்கை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நாளை 9ந்தேதி நடக்கிறது. இதன் முடிவுகள் அனைத்தும் நாளை கூட உள்ள பொதுக்குழுவில் அறிவிக்கப்பட உள்ளது.

திமுக தலைவராக போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் நேற்றுஅண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். பின்னர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிந்து, 5 பேர் வழிமொழிந்து இருந்தனர். வேட்பு மனு கட்டணமாக ரூ. 50ஆயிரம்செலுத்தப்பட்டது.

முதல்வர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த பின் அவரைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலுவும் மீண்டும் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இருவரும் தங்களுடைய தேர்தல் வேட்பு மனு தாக்கல் கட்டணமாக ரூ. 50ஆயிரத்தினை செலுத்தியதோடு, இருவருக்கும் 5 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிந்து 5 பொதுக்குழு உறுப்பினர்கள் வழி மொழிந்தனர்.



திமுகவின் தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயம் சென்னை.. (பைல்படம்)

அமைச்சர்கள் வேட்பு மனுதாக்கல்

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் நேற்று மாலை 5மணி வரை முதல்வர் ஸ்டாலின் பெயரில் போட்டியிட்டுக்கொண்டு வேட்பு மனு தாக்கல்செய்தனர்.பால்வளத்துறை அமைச்சர் நாசர் தனது தரப்பில் 32 வேட்பு மனுக்களை முதல்வர் ஸ்டாலின் பெயரில் தாக்கல் செய்தார். வேட்பு மனு கட்டணம் ரூ. 50ஆயிரம், வேட்பு மனு தாக்கலுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டதை செலுத்தினர்.

இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ள முதல்வர் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, பி.கே. சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதிஸ்டாலின் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களை ஸ்டாலின் சந்தித்து அவர்களுடைய பொன்னாடைகள் மற்றும் புத்தகங்களை பெற்றுக்கொண்டு தன்னுடைய அறைக்கு சென்று முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார்.முன்னதாக முதல் அமைச்சர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அண்ணாவின் நினைவிடங்களுக்கு சென்று வேட்பு மனுவை வைத்து வணங்கிவிட்டு வந்தார். அதேபோன்று வேட்பு மனு தாக்கல்செய்த பின்னர் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்று கருணாநிதியின் உருவப்படத்திற்கு ரோஜாப்பூவை வைத்து வணங்கினார்.

நாளை சென்னை பச்சையப்பன் கல்லுாரிக்கு எதிரேயுள்ள தனியார் பள்ளியில் திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.இக்கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின்போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.நேற்று 500மனுக்களுக்கும் மேலாக விருப்ப மனுக்களாக விநியோகம் செய்யப்பட்டது. இருந்தாலும் இதில் எத்தனை மனுக்கள் வேட்பு மனுவாக தாக்கல்செய்யப்பட்டது என்பது பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 லோக்சபா தேர்தல்

தற்போது புதிய மாவட்ட செயலாளர்கள் பல மாவட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.பல மாவட்டங்களுக்கு பழைய மாவட்ட செயலாளர்களுக்கே பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் திமுகவில் நிலவி வரும் கோஷ்டி பூசலை முற்றிலும் ஒழித்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் வரவிருக்கும் 2024 லோக்சபா தேர்தலில் 39தொகுதியையும் கைப்பற்ற முடியும் என திமுக திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இதற்காக எந்த நிர்வாகியின் மேல் புகார் வரும் பட்சத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதேபோல் கட்ட பஞ்சாயத்து, அடாவடி வசூல் போன்ற வன்முறைகளில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கட்சியிலிருந்து நீக்கப்படுவார் எனவும் அதிரடி அறிவிப்பு சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் குழப்பம் நிலவி வரும் நிலையில் திமுகவிலும் கோஷ்டி கானம் பாடிவந்தால் தலைமைக்கு இழுக்கு என்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தினைப்பொறுத்தவரை அதிமுகமுன்னாள் பொதுச்செயலாளரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப்போல் சாட்டையை சுழற்றி வருகிறார் என கட்சியினர் பேசிக்கொள்கின்றனர்.

Updated On: 9 Oct 2022 6:05 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!