/* */

திமுகவிலிருந்து 12 பேர் தற்காலிக நீக்கம்

கட்டுப்பாட்டை மீறியதாக கூறி திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் மேலும் 12 பேர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திமுகவிலிருந்து 12 பேர் தற்காலிக நீக்கம்
X

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக பிப்.19ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தமிழகம் முழுவதும் முன்னாள் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியில் தங்களுக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தியில் 56 பேர் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகின்றனர். திமுக நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட கூடாது என்று தலைமை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை மீறி சுயேட்சையாக போட்டியிட்ட நபர்களை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஏற்கெனவே கட்டுப்பாட்டுகளை மீறி போட்டியிட்ட பலரை கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கட்டுப்பாட்டை மீறியதாக திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் மேலும் 12 பேர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On: 17 Feb 2022 9:15 AM GMT

Related News