திருச்சி அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
X

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கரியமாணிக்கம் தழுதாளப்பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). கூலித் தொழிலாளி.இவரது மகன் நவீன் குமார் ( 17). இவர் முசிறியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படி த்து வந்தார்.

பெற்றோர் சொற்ப வருமானத்தை கொண்டு அவரின் கல்வி செலவுகளை சமாளிக்க முடியாமல் தடுமாறி வந்தனர். அதைத்தொடர்ந்து நவீன் குமார் தனது கல்லூரி விடுமுறை நாட்களில் கட் டிட வேலைக்கு சென்று வந்தார்.அப்போது கொப்பவாளி பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும், நவீன் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

படி க்க வேண்டிய காலத்தில் பாதை மாறினால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமே என கவலை அடைந்தனர். இதையடுத்து காதலை கைவிடுமாறு நவீன் குமாரை அவரது தந்தை வடிவேல் கண்டித்தார். ஆனால் காதலியை நொடிப்பொழுதில் அவரால் மறக்க இயல வில்லை.மேலும் காதலியை சந்திக்கவும் இயலவில்லை.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான நவீன் குமார் தழுதாளப்பட்டி அய்யனார் கோவில் அருகாமையில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார்.இதுகுறித்து அவரது தந்தை வடிவேல் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 19 Sep 2023 8:24 AM GMT

Related News

Latest News

 1. திருவண்ணாமலை
  காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது
 2. வந்தவாசி
  திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளும் கிராம சபை கூட்டம்
 3. ஆன்மீகம்
  சனிபகவான் கோயிலில் இப்படியா? கொந்தளிக்கும் இந்து எழுச்சி முன்னணி
 4. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 5. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி , பழங்கள் விலை நிலவரம்
 6. தமிழ்நாடு
  அண்ணாமலையை ‘குறி’ வைக்க உண்மையில் என்ன காரணம்?
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் கதர் சிறப்பு விற்பனை தொடக்கம்
 8. இராஜபாளையம்
  ராஜபாளையம் அருகே அமைச்சர் தலைமையில் கிராம சபைக் கூட்டம்
 9. இந்தியா
  மருத்துவ கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள் ?
 10. தேனி
  குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கணுமா..?