/* */

அழகியுடன் ரகசிய வீடியோவில் 18 ஒடிசா எம்எல்ஏக்கள் : அலறும் அரசியல்வாதிகள்

அழகியுடன் 18 எம்.எல்.ஏ.க்கள் ரகசிய தொடர்பில் இருந்த வீடியோக்கள் சிக்கி உள்ளதால் ஒடிசா மாநில அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

HIGHLIGHTS

அழகியுடன் ரகசிய வீடியோவில் 18 ஒடிசா எம்எல்ஏக்கள் :  அலறும் அரசியல்வாதிகள்
X

அர்ச்சனா நாக்

கேரளா அரசியலை சரிதா நாயர், சுவப்னா சுரேஷ் என்ற 2பெண்கள் அலற வைத்தது போல் ஒடிசா மாநில அரசியல்வாதிகளை இப்போது ஒரு பெண் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.சரிதாநாயரின் சோலார் பேனல் ஊழலில் கேரளா முதல் மந்திரி உள்பட பல அரசியல் தலைவர்களின் தலைஉருண்டது.அதேபோல் சுவப்னா சுரேஷின் தங்கம் கடத்தல் வழக்கு மற்றும் பாலியல் தொடர்பில் முதல் மந்திரி, அமைச்சர், ஐஏஎஸ் அதிகாரி சிக்கலில் மாட்டினார்கள். இவர்களை விட பல மடங்கு அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளார் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சனா நாக்என்ற இளம் அழகி. அவரை உல்லாச ராணி என்றும் அழைக்கிறார்கள். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் அர்ச்சனா நாக் வலையில் சிக்கி திணறி வருகிறார்கள்.

பெண் வில்லி

ஒடிசாவில் பிஜு ஜனதா தளயக்கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு நவீன் பட்நாயக் முதல்மந்திரியாக உள்ளார். இந்த மாநிலத்தைச் சேர்ந்த சினிமா பட தயாரிப்பாளர் ஒருவர், சமீபத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒரு புகார் அளித்தார். அந்த சினிமா பட தயாரிப்பாளர் சில பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு அர்ச்சனா நாக் என்ற பெண் தன்னை மிரட்டுகிறார். 3 கோடி ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டுகிறார் என்றும் புகாரில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அர்ச்சனாநாக் மீது ஒரு பெண் போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் அர்ச்சனா நாக், பல ஆண்களுடன் தன்னை நெருக்கமாக இருக்கும்படி வற்புறுத்துவதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த இரண்டு புகார்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதன் அடிப்படையில் அர்ச்சனா நாக்,வயது 26, என்ற அழகியை போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்தனர். அவரிடம் போலீசார் முதலில் சாதாரணமாக தான் விசாரணை தொடங்கினர். ஆனால் அவர் அளித்த பதில்கள் போலீசாரையே அதிர்ச்சியடைய செய்தது. அதனால் இந்த வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியது. அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பியூட்டி பார்லரில் வேலை

ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தான் அர்ச்சனா நாக். 2015ஆம் ஆண்டில் புவனேஸ்வருக்கு குடிபெயர்ந்து வந்தார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் வேலை பார்த்தார். பின்னர் அங்கு அழகு நிலையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார் அர்ச்சனா நாக். அவருக்கு 2018ஆம் ஆண்டில் ஜெகபந்து என்ற வாலிபர் அறிமுகம் ஆனார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 2018ஆம் ஆண்டில் அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஜெகபந்து பழைய கார்களை வாங்கி விற்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் கார் வாங்க வந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களுடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை வைத்து குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக ஜெகபந்து திட்டமிட்டார். அதற்கு அவருடைய காதல் மனைவி அர்ச்சனா நாக்கையும் கூட்டு சேர்த்தார். இதற்காக இந்த தம்பதியினர் ஒரு ரகசிய திட்டம் தயாரித்தனர்.

ரகசிய கூட்டு திட்டம்

அரசியல்வாதிகள், அதிகாரிகள், பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் அர்ச்சனா நாக் நட்பாக பழகுவார். பின்னர் அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி விபசார பெண்களை சப்ளை செய்துள்ளார். அந்த பெண்களுடன் முக்கிய பிரமுகர்கள் உல்லாசமாக இருக்க பங்களாக்களையும் அவரே ஏற்பாடு செய்வார். முக்கிய பிரமுகர்கள் பெண்களுடன் விடிய, விடிய நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ரகசியமாக கேமராக்களை அறைகளில் பொருத்தி வீடியோ எடுத்து விடுவார். சில நேரங்களில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் என பிரபலமானவர்களை குறிவைத்து அவர்களுடன் அர்ச்சனா நாக் நெருங்கி பழகி தனது வலையில் வீழ்த்தி உள்ளார். அவர்களுடன் அவர் தனியாக அறையிலிருந்தபோது அதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.அனைத்திற்கும் அவரது கணவர் ஜெகபந்து உடந்தையாக இருந்துள்ளார். பின்னர் முக்கிய பிரமுகர்களிடம் தன்னிடம் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளார்.

சொகுசு பங்களா

இதுபோல், மிரட்டி வசூல் செய்த பணத்தில் சொகுசு கார்கள், உயர் இன நாய்கள், ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான பங்களாவையும் அர்ச்சனா நாத் தம்பதியினர் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 30 கோடி ரூபாயை குவித்து ள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அதிரடி கைது

சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். புவனேஸ்வரில் உள்ள அவர்களது பங்களாவில் போலீசார் சோதனை நடத்தி அங்கு இருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த பென்டிரைவர், செல்போன்கள், லேப்டாப்களை போலீசார் ஆய்வு செய்த போது பல முக்கிய அரசியல் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சிக்கின.18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் அர்ச்சனா நாக்கின் தொடர்பில் இருந்த அதிர்ச்சியான தகவல் ஒடிசா மாநிலம் மட்டும் அல்ல இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா அரசியலில் பூகம்பம்

அர்ச்சனா நாக் தொடர்பில் சிக்கியவர்களில் பலர் ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். 26 வயது இளம்பெண் அர்ச்சனா நாக் ஒடிசா மாநில அரசியலையே அதிர வைத்துள்ளார். அர்ச்சனா நாக்கால் மிரட்டப்பட்டவர்கள், பணத்தை இழந்தவர்கள் தானாக முன்வந்து புகார் அளிக்கும்படி போலீசார் அறிவித்துள்ளனர். இந்த பிரச்சனை ஒடிசா அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது. அர்ச்சனா நாக்வுடன் உள்ள தொடர்பு, ரகசிய வீடியோ வெளியாகி விடுமோ என்று ஒடிசா மாநில அரசியல்வாதிகள் பீதியில் உள்ளனர். அர்ச்சனா நாக் சதிச் செயலை மையமாக வைத்து சினிமா எடுக்கப் போவதாக சிலர் அறிவித்துள்ளனர்.சினிமாவுக்கு நல்ல கதை கிடைச்சுச்சு போங்க... ஏற்கனவே வேறு மாதிரி படம் வந்துச்சு...

Updated On: 16 Oct 2022 5:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்