/* */

ரஜினி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையா?

superstar rajinikanth in yuvan shankar raja music - ரஜினிகாந்த்தின் அடுத்த படமான 'தலைவர் 171'-ல் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

ரஜினி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையா?
X

superstar rajinikanth in yuvan shankar raja music - ரஜினிகாந்த்தின் அடுத்த படமான 'தலைவர் 171'-ல் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'தலைவர் 171' படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது லைக்கா புரடக்‌ஷன்ஸ் உரிமையாளரை பார்க்க லண்டன் சென்றுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி- சிவாகார்த்திகேயன் கூட்டணி அமைத்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது டான் திரைப்படம். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தனது முதல் படத்திலேயே ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்த இயக்குநர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பல படங்களின் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ரஜினிகாந்தின் 171வது படத்தை சொல்லாம். படத்தின் முதல் கட்ட பணிகள் நடப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் என தகவல் கசிந்த நிலையில், படத்தின் அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் தற்போதைய தகவல் படி 'தலைவர் 171' படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவில்லையாம்! அவருக்கு பதிலாக அந்த படத்தை கோமாளி, லவ் டுடே போன்ற படங்களை இயக்கி இளைஞர்களை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

yuvan shankar raja music rajini movie

திரையுலகில் அனைவருக்கும் பிடித்த ஹீரோ, இயக்குனர் யார் என்று கேட்டால் பிரதீப் ரங்கநாதனைச் சொல்கிறோம். இவர் தற்போது ரஜினியில் 'தலைவர் 171' கமிட்டாகியுள்ளது எல்லோருக்குமே தெரிந்த விஷயமே. இதனைத்தொடர்ந்து இன்னொரு சூப்பர் அப்டேட் என்னவென்றால், தற்போது கதையை உருவாக்குவதற்காக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் லண்டன் சென்றுள்ளார். இதற்காக அங்கு யாரெல்லாம் பார்க்க சென்றுள்ளார் என்பது வெளியாகியுள்ளது.

அங்கு அவர் லைக்கா புரடக்‌ஷன்ஸ் உரிமையாளரான சுபாஸ்கரனை பார்க்கச் சென்றுள்ளார். இதனால் லைக்கா புரடக்‌ஷன்ஸ் விரைவிலேயே நல்ல செய்தியை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்னொரு செய்தியாக இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் யுவன்சங்கர் ராஜா கைகோர்ப்பது ரசிகர்களிடையே பெரிய மாஸை ஏற்படுத்தி வருவாதாகவும், இந்த கூட்டணி திரையுலகில் பெரும் டிரெண்டை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு தற்போது இயக்குனரை மாற்றிய தகவலையடுத்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் லண்டன் சென்றிருப்பதும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக வரும் தகவலும் இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் அப்டேட்டுகளுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 23 Dec 2022 9:34 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!