/* */

கமலின் அடுத்த அரசியல் படம்: யார் அந்த இளம் இயக்குநர்?

Kamal Hassan Politics- நான்கே படங்களில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இயக்குநர் கமலின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார்

HIGHLIGHTS

கமலின் அடுத்த அரசியல் படம்: யார் அந்த இளம் இயக்குநர்?
X

Kamal Hassan Politics- இளம் இயக்குநர்களுடன் கை கோர்ப்பது என்று கமல் ஹாசன் முடிவு செய்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்த விக்ரம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. கமலின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் இளம் இயக்குநர் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நான்கு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும், நான்கும் பிளாக்பஸ்டர் படங்களாக கொடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் வினோத். அறிமுகம் தேவையில்லாத, வெறும் பெயர் மட்டும் சொன்னாலே தெரியும் அளவிற்கு மிக குறுகிய காலத்தில் வளர்ந்தவர்.

பச்சை குதிரை படத்தில் டைரக்டர் பார்த்திபனிடமும், கோலி சோடா படத்தில் விஜய் மில்டனிடமும் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றிய வினோத், 2014 ல் நட்டி நடித்த சதுரங்க வேட்டை படத்தை இயக்கி டைரக்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்


2016 ல் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் கார்த்திக்கு பல விருதுகளையும், பாராட்டையும் பெற்றுத் தந்தது. தீரன் அதிகாரம் ஒன்று படம் தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

2019ல் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்தது. வலிமை படத்தையும் இவர் தான் இயக்கியுள்ளார். தற்போது அஜித்தை வைத்து ஏ.கே. 61 படத்தை இயக்கி வருகிறார் வினோத். தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அரசியல் தொடர்பான கதையை கமலுக்காக எழுதி வைத்திருக்கிறாராம் வினோத். மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை நடத்தி வரும் கமலுக்கு அரசியல் பின்னணி கொண்ட கதை பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறாராம் வினோத்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 10:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!