/* */

'அஜித்-63' படத்தை இயக்கப்போவது யார்? ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பு

Thala 63 Updates-நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை எந்த இயக்குனர் இயக்கப்பபோகிறார் என ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Thala 63 Updates
X

Thala 63 Updates

Thala 63 Updates-நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை எந்த இயக்குனர் இயக்கப்பபோகிறார் என ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் அஜீத் குமார் இந்தியத் திரையுலகில் ஒரு மாசற்ற நடிகராக இருந்து வருகிறார், வரும் பொங்கல் அன்று பாக்ஸ் ஆபிஸில் ஏ.கே-யின் வரவிருக்கும் திரைப்படமான 'துணிவு' அவரது தொழில் போட்டியாளரான தளபதி விஜய்யின் 'வாரிசு' உடன் இணையும் என்று சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் அஜித்தின் தொடர்ச்சியான மூன்றாவது கூட்டணியாக துணிவு உள்ளது. தயாரிப்பாளர்கள் கடந்த மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கினர். இப்போது, அல்டிமேட் ஸ்டார் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேங்க் ஹீஸ்ட் த்ரில்லரில் தனது பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துவிட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் நட்சத்திர நடிகர்களில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, அஜய், ஜான் கொக்கன், ஜிஎம் சுந்தர், மகாநதி சங்கர், சிபி சந்திரன், அமீர், பாவ்னி மற்றும் பலர் உள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, எடிட்டராக விஜய் வேலுக்குட்டி மற்றும் ஸ்டண்ட் நடன இயக்குனராக சுப்ரீம் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.

அண்மையில் சுற்றுலா முடிந்து இற்தியா திரும்பிய நடிகர் அஜித்குமார், துணிவு படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பை முடித்துள்ளநிலையில் டப்பிங் வேலைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் டப்பிங் செய்யும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே அஜித்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதில் நடித்துள்ள மஞ்சு வாரியர், அமீர் ஆகியோர் டப்பிங் பணிகளை முடித்துள்ளோம் என பதிவுகள் மூலம் தெரிவித்துள்ளனர்.

வரும் பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படமும், விஜய்யின் வாரிசு படமும் நேருக்கு நேர் மோதுவதால் சமூகவலைதளங்களில் இருவரின் ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துணிவு படத்தின் சிங்கிள் டிராக் இன்று கண்டிப்பாக வெளியாகும் என டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.

அதேநேரத்தில், அஜித்தின் அடுத்த படமான 'அஜித்-63' என பெயரிடப்பட்ட படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஜித்தின் 62வது படம் லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கப்போவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும், அடுத்த படமான அஜித்-63 படத்திற்காக விஷ்ணு வர்தனுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விஷ்ணுவர்தனும் அஜித்தும் ஏற்கெனவே பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 6:26 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...