/* */

பூஜா ஹெக்டேவுக்கு யாருடன் காதல் தெரியுமா? பட வாய்ப்பும் அவர் மூலமே...

salman khan fell in love with pooja hegde - பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டேவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

பூஜா ஹெக்டேவுக்கு யாருடன் காதல் தெரியுமா? பட வாய்ப்பும் அவர் மூலமே...
X

நடிகை பூஜா ஹெக்டே.

salman khan fell in love with pooja hegde - பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், பூஜா ஹெக்டேவை காதலித்து வருவதாகவும், இருவரும் தற்போது டேட்டிங்கில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இவர் இருவருமே ஒன்றாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் சல்மான் கான் தயாரிப்பு நிறுவனத்தில் இன்னும் இரு திரைப்படங்களில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இவை அனைத்தும் சல்மான் கானின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளிவந்த தகவல் என கூறப்படுகிறது.

வெளிநாட்டு தணிக்கைக் குழுவின் உறுப்பினராகவும், திரைப்பட விமர்சகராகவும் இருக்கும் உமைர் சந்து, சல்மான் கான்-பூஜா ஹெக்டேயின் காதல் குறித்து தனது ட்விட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில் பிரேக்கிங் நியூஸ் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ஊரில் புது ஜோடி!! மெகா ஸ்டார் சல்மான் கான் பூஜா ஹெக்டேவை காதலித்து வந்தார். இவரது தயாரிப்பு நிறுவனம் பூஜா ஹெக்டேவை வைத்து இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. தற்போது இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுகிறார்கள். சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர்களால் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என உமைர் சந்து ட்வீட் செய்துள்ளார்.

இருப்பினும், உமர் சந்துவின் டுவிட்டர் பதிவை நம்ப முடியவில்லை. ஏனென்றால் உமைர் சந்து கடந்த காலங்களில் இதுபோன்ற பல சர்ச்சைக்குரிய பதிவுகளை செய்துள்ளார். ஆனால், அவற்றில் உண்மையானவை மிகச் சிலதே என்று கூறலாம். இந்திய திரைப்படங்களை விமர்சனம் செய்யும் உமைர் சந்து, கடந்த காலங்களில் பல தெலுங்கு திரைப்படங்களையும் விமர்சனம் செய்துள்ளார். அவரது 5-நட்சத்திர திரைப்படங்கள் பல பாக்ஸ் ஆபிஸில் பேரழிவை ஏற்படுத்தியது. மனோது படுமோசமான படங்கள் பிளாக்பஸ்டர் ஆன காலங்கள் உண்டு. சமீபத்தில் கிருத்தி சனோனும், பிரபாஸும் காதலிப்பதாக ஒரு சர்சையை ஏற்படுத்தினார். இப்போது 32 வயதான பூஜா ஹெக்டே 56 வயதான சல்மான் கானுடன் இணைத்து பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

salman khan news

உமைர் சந்துவின் இந்த ட்வீட்டிற்கு தெலுங்கு ரசிகர்கள் சற்று வேடிக்கையாக பதிலளித்துள்ளனர். சல்மான் கான், பூஜா ஹெக்டேவை காதலித்தால், நமது குருஜிக்கு (திரிவிக்ரம்) என்ன நடக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், உமைர் சந்துவின் ட்வீட் போலியானது என்று பலர் நிராகரித்து வருகின்றனர். இது காதல் இல்லை என்று பூஜா ஹெக்டேவும், சல்மானும் மறுத்து வருகின்றனர்.

பூஜா ஹெக்டே தற்போது சல்மான் கான் படத்தில் நடித்து வருகிறார். 'கிசி கா பாய் கிசி கா ஜான்' படத்தில் சல்மான் கான், விக்டரி வெங்கடேஷ், பூஜா ஹெக்டே, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பர்ஹாத் சஞ்சி இயக்கியுள்ளார். இந்த படத்தை சல்மான் கான் பிலிம்ஸ் பேனரில் சல்மான் தயாரிக்கிறார். ஆக்‌ஷன் காமெடி என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்தில் ராகவ் ஜூயல், ஜாஸ்ஸி கில், சித்தார்த் நிகம், ஷெஹ்னாஸ் கில், பாலக் திவாரி, மாளவிகா சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் கடந்த அக்டோபர் 13ம் தேதியன்று 'கிசி கா பாய் கிசி கா ஜான்' படப்பிடிப்பில் கொண்டாடப்பட்டது. சல்மான் கான், வெங்கடேஷ், ஜெகபதி பாபு மற்றும் படக்குழுவினர் மத்தியில் பூஜா ஹெக்டே கேக் வெட்டினார். அப்போது இந்த வீடியோ வைரலானது. தற்போது இந்த படத்தில் இணைந்து நடிக்கும் சல்மான் மற்றும் பூஜா குறித்து புதிய வதந்தியை கிளப்பியுள்ளார் உமைர் சந்து. இருப்பினும், சல்மான் கானின் காதல் மக்களுக்கு புதிதல்ல. சல்மானின் தோழிகள் பற்றி 1980களில் இருந்து மக்கள் கேள்விப்பட்டு வருகின்றனர். முன்னாள் மிஸ் இந்தியா சங்கீதா முதல் சோமி அலி, ஃபாரியா ஆலம், ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் மற்றும் இயுலியா வந்தூர் வரையிலான காதல் கதைகளை இயக்கும் சல்லு பாய் இன்னும் திருமணம் செய்யாமலேயே இருந்து வருகிறார்.

Updated On: 8 Dec 2022 6:36 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?