/* */

'வால்டேர் வீரய்யா' டீசர் வெளியானது… பழைய உற்சாகத்தில் சிரஞ்சீவி..!

தெலுங்கின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின் ' மெகா 154' படம் 'வால்டேர் வீரய்யா' என்ற டைட்டிலுடன் டீசர் வெளியாகியது.

HIGHLIGHTS

வால்டேர் வீரய்யா டீசர் வெளியானது… பழைய உற்சாகத்தில் சிரஞ்சீவி..!
X

இது உச்ச நட்சத்திரங்களை மெச்சும் ரசிகர்கள், தங்களது அபிமான நடிகருக்காக ஒரு பிரமாதமான கதையை உருவாக்கி அதில் தங்கள் நாயகரை நடிக்க வைத்து அவர்களை இயக்கி படத்தை எல்லோரும் வியக்கும் வண்ணம் சூப்பர் ஹிட்டாகக் கொடுத்து வரும் காலம் எனலாம். இதன்படிதான், அண்மையில் நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'விக்ரம்-2' படத்தில் தனது பிரியம் மிக்க நாயகனான நடிகர் கமல்ஹாசனை இயக்கினார். படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பிற மொழிகளிலும் வெளியாகி இமாலய வெற்றியைப் பெற்றது. நடிகர் கமல்ஹாசனின் திரையுலகை வாழ்க்கையில் மீண்டுமொரு திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. படத்தின் சாதனை அனைவரும் அறிந்த ஒன்று.

இந்தநிலையில், தெலுங்குப் படவுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான இயக்குநர் பாபி தற்போது சிரஞ்சீவியை இயக்கி, 'வால்டேர் வீரய்யா'வை வழங்கியிருக்கிறார். தற்போது, மெகா ஸ்டார் சிரஞ்சீவி – மாஸ் மகாராஜா ரவிதேஜா – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான 'வால்டேர் வீரய்யா' எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப் பட்டிருக்கிறது. இத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.


மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் 'மெகா 154' என பெயரிடப்பட்டு தொடங்கப்பட்ட திரைப்படத்திற்கு, 'வால்டேர் வீரய்யா' என பெயரிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக 'வால்டேர் வீரய்யா' எனும் டைட்டிலுக்கான டீசரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரும், இயக்குநருமான பாபி எனப்படும் கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் தயாராகியுள்ள, 'வால்டேர் வீரய்யா' எனும் டைட்டிலுக்கான டீசர், சிரஞ்சீவியின் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது. இதில் பெரிய கப்பல் ஒன்றில் அமர்ந்திருக்கும் வில்லன், 'வால்டேர் வீரய்யா'வை வார்த்தைகளால் கேலி செய்கிறார். பிறகு மெகா ஸ்டார் சிரஞ்சீவி அந்தக் கப்பலுக்குள் வருகை தந்து, உரிய பதிலடியை அவரது பாணியில் அளிக்கிறார். சிரஞ்சீவியின் அறிமுகக் காட்சியை இயக்குநர் பாபி, சிறப்பான முறையில் வடிவமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருப்ப தால் டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த வரவேற்பைத் தொடர்ந்து, மெகா ஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் பழைய உற்சாகத்திற்கு வந்து விட்டார் என்கிறார்கள் தெலுங்குப் பட உலகினர். ஏனெனில் அவரது தோற்றம், நடை உடல் மொழி, கதாபாத்திரப் படைப்பு. ஆகியவை சிரஞ்சீவியின் கடந்த கால பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன விசயங்களை மீண்டும் நினைவுபடுத்துகிறது. சிரஞ்சீவியுடன் மாஸ் மகாராஜா ரவி தேஜாவை காண முடியாவிட்டாலும் , படத்தின் வெளியீட்டு தேதியையும், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்கள். 'வால்டேர் வீரய்யா' அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகிறது.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து பிரமாண்டமான பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் மாஸ் மகாராஜா ரவிதேஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்கு, 'ராக்ஸ்டார்: தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.


ஜி.கே.மோகன் மற்றும் எம் பிரவீண் இணை தயாரிப்பாளர்களாகப் பணியாற்றும் இந்த படத்தின் கதை, வசனத்தை பாபி எழுதி இருக்கிறார். இயக்குநர் கோனா வெங்கட் மற்றும் கே.சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரைக்கதையை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லுரி எழுதியுள்ளனர். படத் தொகுப்பு பணிகளை நிரஞ்சன் தேவராமனே கவனிக்க, ஏ. எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.


அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'வால்டேர் வீரய்யா' படத்தின் டைட்டிலுக்கான டீசர், வெளியான இரண்டு மணி நேரத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டீசர் வரவேற்பே, படத்தின் வெற்றிக்கான ஆரூடத்தை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.

Updated On: 25 Oct 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!